Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

12.7.22

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கொய்யா-(SARKARAIYAI KATTUPADUTHUM KOYYA


        குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைக ளுக்கு, கொய்யாப் பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம்.

            குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. சர்க்கரை நோயாளிக ளுக்குக் கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.

கொய்யா... சில கட்டுப்பாடுகள்:

      நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம். கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. 

       சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. ஆஸ்துமா, வாதநோய், மற்றும் 'எக்ஸிமா’ போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது. கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக