Pages - Menu

21.8.22

இருமல் மற்றும் சளி _(GUAVA FOR COLD AND COUGH)

 

இந்த‌ இருமல் மற்றும் சளிப் பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதிலிருந்து விரைவாக‌ விடு பட அற்புதமான எளிய வைத்தியம் 

முக்கால்வாசி பழுத்தும் கால் வாசி பழுக்கும் தருவாயில் இருக்கும் கொய்யா (Guava) பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் விரு ம்பியவாறு நான்காகவோ அல்ல‍து எட்டாகவோ வெட்டி துண்டு களாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்த‍மான மிளகு எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து ஒரு பதார்த்த‍ தட்டில் வைத்துக் கொள்ள வே ண்டும். (எக்காரணம் கொண்டும் கடையில் விற்கும் ரெடிமேட் மிளகுத் தூளை பயன்படுத்த‍க் கூடாது)

அதன்பிறகு வெட்டிய கொய்யா துண்டுகளை எடுத்து, இந்த மிளகுத் தூளில் தொட்டு அதனை அப்ப‍டியே எடுத்து சாப்பிட வேண்டும். 

இதைப்போலவே சாப்பிட்டு வந்தால், 

சளி தொலைந்துபோகும். 

நுரையீரலில் சளி இருந்தாலும் அந்த‌ சளி வெளியேறும், 

இருமல்  பிரச்சனையில் இருந்தும் நல்ல தீர்வு கிடைக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக