நமக்கு எளிதாகக் கிடைக்கும் எலுமிச்சம் பழத்தில் பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. சோர்வைப் போக்கி புத்துணர்வை அது தருகிறது.
உடலுக்குத் தேவையான ஆற்றலை மீட்டுக் கொடுக்கும் ஆற்றல் இதில் அதிகம் என்பதால் சோர்வாக உணரும் போது எலுமிச்சம்பழச் சாற்றைக் குடிக்கலாம்.
சுடச்சுட வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வந்தால்
மந்தமான வயிறு மற்றும் வாயுத் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.
முகத்தில் அதிகம் பருக்கள், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு அஜீரணமும் மலச் சிக்கலும் இருக்க வாய்ப்புண்டு.
இவர்கள், உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் வெந்நீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து அருந்தி வர அஜீரணம் காணாமல் போகும். அழகும் மீண்டு வரும்.
எலுமிச்சையின் தோலை மெலிதாக நீக்கிவிட்டு உள் வெள்ளைத் தோலுடன் அப்படியே ஒரு பாட்டில் தண்ணீரில் போட்டு இறுக மூடி இரவு முழுவதும் ஊறவிடவும்.
அதிகாலை எழுந்தவுடன் முதல் வேலையாக பாட்டிலை நன்றாக குலுக்கி தண்ணீரை வடித்து குடிக்கவும். தினமும் இதே போல் செய்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சிதைந்த உயிரணுக்களை புதிதாக உருவாக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக