பொதுவாக அனைவருமே முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஃபேஸ் பேக் போடுவோம். ஆனால் அவ்வாறு போடும் போது, சில சமயங்களில் பயம் ஏற்படும். ஏனெனில், சில பொருட்களை சருமத்தில் பயன்படுத்தினால், அவை சருமத்தில் அரிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு காரணம், அனைவருக்குமே ஒரே வகையான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அவை எண்ணெய் பசையுள்ள சருமம், வறட்சியான சருமம், நார்மல் சருமம் போன்றவை. ..
மேலும் இந்த ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆனால் சிலரால் தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.
முட்டை அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
கடலை மாவு மற்றும் தயிர் கடலை மாவில், தயிர், சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவோடு இருக்கும். மஞ்சள் தூள் அழகுப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் தூளை, தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருமை நீங்கி, முகம் அழகாக காணப்படும்..
ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர் ஒரு நேச்சுரல் டோனர். இதனை அனைத்து வகையான சருமத்தினரும் பயமின்றி சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் சந்தன பவுடரில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும். தக்காளி தக்காளியில் லைகோபைன் என்னும் சருமத்தைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு, தினமும் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
தேன் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பரான அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும். வேண்டுமெனில், தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்கும்.
வேப்பிலை வேப்பிலையை அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளி பப்பாளியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும்.
அதற்கு பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பால் பால் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
Then mudiyai vellaiyaki vidum engirargale? athu nijama? Please sollungal
பதிலளிநீக்குmuttai udaithu endru solliirukureergal. muttai manchal karuvum sertha?.... Please solungalen.
பதிலளிநீக்கு