Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

7.2.14

மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்.-(MOOKU THONDAI PIRACHANAIGALAI THEERKUM VALIGAL)


                  மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திரவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும். பழச்சாறுகளோடு, சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது. வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

              கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல கபீன் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக