Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

12.4.14

சுண்ணாம்பு மருத்துவம்-(SUNNAMBU MARUTHVUAM)



சுண்ணாம்பு மருத்துவம்..!

சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்.

1 கருத்து: