Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

14.7.15

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்-(AALNTHA URAKKAM KARU VALARCHIKU AVASIYAM)

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்
 கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம்.
இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது.
ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது கால்களுக்கும் வைத்து உறங்குவது கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.
இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  1. பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக