Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

14.7.15

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்-(PAALIN MARUTHUVA GUNAM)



பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது! பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.
பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்து!
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!
கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக