Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

3.6.17

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்-(UDAL BARUMANAI KURAIKKA YELIYA VEETU KURIPPUGAL)

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...
 
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும். 
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
 
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
 
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
 
பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.
 
இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.
 
அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
 
உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.
 
பச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ்காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்-(ANAITHTHU VAGAIYANA SARUMATHUKUM YETTRA FACE PACK)

                       பொதுவாக அனைவருமே முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஃபேஸ் பேக் போடுவோம். ஆனால் அவ்வாறு போடும் போது, சில சமயங்களில் பயம் ஏற்படும். ஏனெனில், சில பொருட்களை சருமத்தில் பயன்படுத்தினால், அவை சருமத்தில் அரிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு காரணம், அனைவருக்குமே ஒரே வகையான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அவை எண்ணெய் பசையுள்ள சருமம், வறட்சியான சருமம், நார்மல் சருமம் போன்றவை.
            மேலும் இந்த ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆனால் சிலரால் தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.
முட்டை
அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
கடலை மாவு மற்றும் தயிர்
கடலை மாவில், தயிர், சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவோடு இருக்கும்.
மஞ்சள் தூள்
அழகுப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் தூளை, தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருமை நீங்கி, முகம் அழகாக காணப்படும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் ஒரு நேச்சுரல் டோனர். இதனை அனைத்து வகையான சருமத்தினரும் பயமின்றி சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் சந்தன பவுடரில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
தக்காளி
தக்காளியில் லைகோபைன் என்னும் சருமத்தைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு, தினமும் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
தேன்
அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பரான அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும். வேண்டுமெனில், தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்கும்.
வேப்பிலை
வேப்பிலையை அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பப்பாளி
பப்பாளியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பால்
பால் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.

11.8.16

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய்-(RATHTHA AZHTHTHAI ATHIKARIKUM OORUKAAI)


இட்லியை மிகச் சிறந்தது எனச் சொல்லும் உணவியல் நிபுணர்கள், ஊறுகாயை மோசமானது என்கிறார்கள். ஏன் தெரியுமா? ஊறுகாய் ஏற்படுத்தக்கூடிய வேண்டத்தகாத விளைவுகள்தான் காரணம். சிலருக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பிட முடியாது.

ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்தப் பிரச்சனை எதிர்கொண்டிருப்பார்கள்.

ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வர்த்தகரீதியில் பெருமளவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என ஓர் ஆய்வு கூறுகிறது.

அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்றுப் புண் ஏற்படக்கூடும். அப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால், மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாகலாம்.

    அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும்.  ஆனால், இதற்கு ஊறுகாய்தான் காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

      தொடர்ந்து சாதத்தோடு சேர்த்து அதிகமாக ஊறுகாயும் சாப்பிடும் போது இதுபோன்ற குமட்டல், வாந்தி உணர்வு ஏற்படலாம். ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய்த் தொற்று ஏற்படக்கூடும். ஊறுகாயை விரும்பிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஓர் உணவையும் அளவுக்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். ஊறுகாய் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்காக அதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உப்பு, காரம்தான் மேற்கண்ட பிரச்சனைகளுக்குக் காரணம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்றவர்கள் நமது முன்னோர். அமுதத்துக்கே அப்படி என்றால், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களுக்குச் சொல்லவும் வேண்டுமா? ஊறுகாயை எப்போதாவது ‘தொட்டுக்கொள்ள’ மட்டும் செய்தால் மேற்கண்ட பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம்


27.5.16

வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!-(SIRUNEERAGA KALLAI GUNAMAKKA VEETU VAITHIYAM)



தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள் என்ன ?

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை

பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வீட்டு வைத்தியம்

சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

காய்கறியில் என்ன இருக்கு?-(KAAIKARIUL ENNA IRRUKU)


வாழைத் தண்டு: 
        கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.

வாழைப்பூ: 
        கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

வாழைக்காய்: 

             இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

பீட்ரூட்: 

           இதில் துத்தநாகம், கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

உருளைக்கிழங்கு: 

           இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய்: 

          இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

கேரட்: 

          இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

கத்தரிக்காய்: 

         பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வெண்டைக்காய்: 

             போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.

பீன்ஸ்: 

        புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

புடலங்காய்: 

         வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.

அவரைக்காய்: 

        புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

முருங்கைக்காய்: 

         வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: 

        இரும்புச்சத்து, கால்ஷியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

சுண்டைக்காய்: 

       புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக் கிழங்கு: 

      கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

தக்காளி:

     வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.