காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று
நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏனென்றால்
குழந்தைகளின் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி
குறைவாகவே காணப்படும்.
காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால்
அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.
காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை
பயன் படுத்தி கழுவவும்
. குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல்
தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது
அவர்களுக்கு மிகுந்தவலியினை கொடுக்கும்.
காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு
குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல்,
தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.
காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால்
காதுகுத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக
வாய்ப்புள்ளது.
அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக
இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க
வாய்ப்புள்ளது.
உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால்
அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற
காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.
குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்ளாதீர்கள்.
சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள்
வரவாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே
நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு
காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும்
இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள்
வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது
குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை
தவிர்ப்பது நல்லது.குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக