Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
தமிழ் பண்பாடு - TAMIL PANBADU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் பண்பாடு - TAMIL PANBADU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.8.22

காகத்திற்கு உணவிடுவது ஏன்- (KAGATHIRKU UNAVU KODUPATHU YEN)


நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்..

காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.

இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்

இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

21.7.14

பேரீச்சம் பழம் - (PERICHAM PALAM)



கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்.

நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்....

கண்பார்வை குறைபாட்டை குனபடுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.

எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்,
இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.

தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம்_பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும் , மிருதுவாகவும் இருக்கும்.

3.7.14

பல்லு போனா சொல்லு போச்சி - (PALLAI PATHUKAPPATHU EPPADI)


பல்லு போனா சொல்லு போச்சி என்ற பழமொழி எப்பொழுது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் பற்களில் நமது மொழி உச்சரிப்புக்கு மட்டும் அல்லாமல் பற்களின் ஆரோக்கியத்தை வைத்து உடலின் ஆரோக்கியத்தை சொல்லி விடலாம்.. பல காலமாக பற்களை முறையாக பராமரிக்க வேண்டுமென நமது முன்னோர்கள் சொல்கிறார்கள். அப்படியே நம்முடைய முக அழகுக்கும் பற்கள் முக்கியமாக கருதப் படுகிறது. பற்கள் போனால் நமது ஆரோக்கியம் சீர்குலைவது நிதர்சனம். உட்கொள்ளப்படும் உணவுகளை நன்றாக அரைத்து இரைப்பையின் பணியை சுலபமாக்குவதில் பல்லின் பங்கு இன்றி அமையாதது.

சரி பற்களை எப்படி தான் பாதுக்காப்பது ? நிறைய முறைகள் இருப்பினும் நான் சொல்லப்போவது ஒன்றும் புதிய முறைகள் ஒன்றும் இல்லை. எல்லாம் நமது முன்னோர்கள் பயன் படுத்திய முறை தான். இதற்கு ஒரு உண்மை சம்பவம் சொல்லி ஆகவேண்டும். எங்க அப்பாவுக்கு அம்மா இருக்காங்க. அவங்க அம்மா ( அதாவது எங்க பாட்டிக்கு அம்மா) இரு வருடங்களுக்கு முன்பு இறந்தாங்க அப்ப அவங்க வயது 113. அந்த வயதிலும் அவங்களுக்கு ஒரு பல்லு கூட விழல. எதை கொடுத்தாலும் மெண்டு சாப்பிடுவார்கள். எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் பற்களின் உறுதி உடலின் உறுதி.

சிறு செய்தி பார்த்துவிட்டு திரும்பவும் இங்க வருவோம். அமரிக்காவில் ஒரு நிறுவனத்தின் நீளம் மட்டும் சுமார் மூன்று கிலோ மீட்டர். அது என்ன நிறுவனமென்றால் அது பல் துலக்கும் பேஸ்ட் தயாரிக்கும் நிறுவனம். அந்த நாட்டின் பேஸ்ட் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. அதன் காரணமாக அங்கே அந்த நிறுவனம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

நமது முன்னோர்கள் எல்லாம் என்ன செய்வாங்கன்னு பார்ப்போம். உணவிற்கு பயன்படுத்தும் உப்பை வாயில் போட்டுக் கொள்வார்கள். சிறிது நேரம் வாயில் அடக்கி வைத்தால் உமிழ்நீர் சுரக்கும். உப்பு பட்டு சுரக்கும் உமிழ் நீர் அல்கலைன் காரத் தன்மை மிகுந்தது. அந்த உமிழ் நீரைக் கொண்டு ஈறுகளுக்கு மசாஜ் செய்து துப்பி விடுவார்கள் அது தான் பல் தேய்க்கும் முறை. இதில் அவர்கள் அல்கலைன் வைத்து பல் துலக்கினார்கள். மறுநாள் வேப்பங் குச்சி, அடுத்த நாள் ஆலங் குச்சி, அடுத்த நாள் வேலங் குச்சி, இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொன்று பயன் படுத்துவார்கள். தினமும் ஒரே பொருளை வைத்து துலக்க மாட்டார்கள். ஒரே பொருளை தொடர்ந்து பயன் படுத்தினால் அது அடிமை ( Addiction) க்கு இட்டு செல்லும்.

உப்பு எனாமலை போக்கும் என்று விளம்பரம் படுத்தியது அந்நிய நிறுவனங்கள். இப்பொழுது உங்க தூத் பேஸ்டில் உப்பு இருக்கா ? னு இப்ப கேள்வி. எல்லாம் நம்ம வைத்துள்ள பொருளை வாங்கிக் கொண்டு போய் நமக்கே திருப்பி தருவது. நம்மிடம் இருந்து வாங்கிக் கொண்டு போகும் போது நமக்கு செலவு இல்லை. அதே பொருள் நமக்கு மீண்டும் வரும் போது நமக்கு செலவு. நமது இயற்கையான பொருளை வாங்கி விட்டு செயற்கையானவைகளை நமக்கு தருகிறார்கள். சரி அதற்கு நாம என்ன செய்வதென்று நீங்கள் கேட்டால். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது எனக்கு.

சரி நான் பயன் படுத்தும் பற்பொடி.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருவேலம் பட்டை பற்பொடி வாங்கிக்கொள்வேன். அது ஒரு 25 ரூபாய். கடுக்காய் பொடி 50கி. இரண்டையும் நன்றாக கலக்கி கலுப்பை நன்றாக அரைத்து இரண்டு தேக்கரண்டி கலக்கி பல் துலக்க நன்றாக உறுதி பெரும்.

மற்றொண்டு

கடுக்காய் - 50 கி
சுக்கு - 50 கி
இந்துப்பு - 50 கி
காசுகட்டி - 50 கி

நான்கையும் சம அளவு வாங்கி அரைத்து பல் துலக்க நன்றாக உறுதி பெரும். மேற்கூறிய முறைகளில் பற்கள் உறுதி பெருவதுமட்டும் அல்லாமல் பல் நோய், பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை வராமல் தடுக்கும்.

கீழ் கண்டு குறிப்புகளையும் பாருங்கள்.

மாவிலை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெரும்.

எலுமிச்சை துண்டை சிறிது வைத்து பற்களை தேய்க்க , பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

பல்வலி நீங்க ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.

பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர – புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.

பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க – பேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு இரவில் வாய் கொப்பளிக்க பற்கள் பாதுக்காக்க படும்.

இதில் மேற்சொன்னவை நான் பயன்படுத்தும் முறை அதனால் நீங்களும் அதை பயன் படுத்த வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. உங்களால் எது முடியுமோ அதை பின் பற்றலாம். கூடுமானவரை பக்க விளைவு இல்லாத பொருட்களை பயன்படுத்தினால் சிறப்பு.

பற்பொடி பிடிக்காது என்பவர்கள் நம்நாட்டில் தயாரிக்கப்படும் பேஸ்ட் பயன் படுத்தலாமே.

இப்பொழுது கடைகளில் விற்கப்படும் பேஸ்ட் எல்லாம் நம் நாட்டுத் தயாரிப்பா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. சொறியக்கொடுத்த மாடு போல் நாமிருக்க, தடவிக்கொடுத்துப் பாலைக் கறப்பது போல் நம்மைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றது அந்நிய சக்திகள் நம் ஆளும் வர்க்கத்தினரோடு கைகோர்த்து.

வீரத்தில் சிறந்து வளர்ந்து வந்த தமிழினம், கூடிக்கெடுக்கும் கூட்டத்தால் தேய்ந்தழிந்து கொண்டிருப்பததைக் கண்கூடாகப் பார்த்தும் இன்னும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் சேதாரம் நமக்கு, செய்கூலி அவர்களுக்கு. இதனையும் சிந்திப்போம்.

மேலும் பயணிப்போம் . . . .

7.2.14

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை-(PUTTRU NOI ABAYATHAI THADUKUM KARIVEPPILAI)


     உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. 


      இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. 

      இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். 

               
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. 

      கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம். திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது...

               
செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

               
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 

75 - 125
கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.


3.2.14

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!-(VAZHAI ILAIUL SAPIDUVATHAL ENNENA PAYANGAL YERPADUKIRATHU)



இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

19.1.14

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால் - Inji Pal Maruthuvam

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

3.1.14

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது (Sammanamittu amarnthu sapiduvathu)


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... . 

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

பிரசவம்-(Pirasavam)


பிரசவம் - மன வலிமை தரும் நம்
பாரம்பரியங்கள். . .
பிரசவம்
என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல்
வலுவுடனும், மன வலுவுடனும்
தாங்க வேண்டும்
என்பதற்காகவே நம் இந்திய
பாரம்பரியத்தில்
எத்தனயோ விஷயங்களைப்
பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்ற
ார்கள்.
அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ
்ஞான ரீதியாக நிரூபணம்
செய்யப்பட்டவை என்பதுதான்
இன்னும்
அதிசயமானவை என்று சொல்ல
வேண்டும்.
மனதுக்கான நல்ல விஷயங்களும்
நம்முடைய பாரம்பரியத்தில்
நிறைய அடங்கியிருக்கின்றன.
முக்கியமாக,
பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற
விஷயத்தையே சொல்லலாம்.
வளைகாப்புக்கு நிறைய
பெண்கள் கூடி,
கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள்
வளையல் போடுவார்கள்.
இதற்கான காரணங்கள் பல
சொல்லப்பட்டாலும்,
"எங்களை எல்லாம் பார்...நாங்கள்
எத்தனை பிள்ளைகளைப்
பெற்று உன் முன் நிற்கிறோம்?!
நீயும் உன் பிரசவத்தை சுலபமாக
கடப்பாய்...தைரியமாக இரு!"
என்பதை இங்கு நாம் எடுத்துக்
கொள்ளலாம்.
இந்தச் சடங்கில்
ஒரு சுவாரஸ்யமான
ஒற்றுமையையும் கவனிக்கலாம்.
வளையல் இடும் பெண்ணின்
கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப்
பாருங்கள்.
கை விரல்களை கூப்பி,
வளையல்களை உள்ள
செலுத்தும்போது சற்று சுலபமாக
இருக்கும்.
வளையலை மணிக்கட்டுப்
பகுதிக்குச்
செலுத்தும்போது சற்று கடினமாகி,
அந்த வலியைச்
சற்றே சற்று பொறுத்துக்
கொண்டால்...அடுத்த
நிமிடமே கரங்களில் வளையல்
ஏறிவிடும். இப்படித்தான்
பிரசவமும்!
இந்த வளையல்கள் ஏற்படுத்தும்
அதிர்வு ஓசை, கருவில் வளரும்
குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம்
தாய் நம்முடன் இருக்கிறாள்
என்று குழந்தைக்கு அது கொடுக்கும்
பாதுகாப்பு உணர்வு,
அழகானது என்பது அறிவியல்பூர்வமா
க நிரூபிக்கப்பட்ட உண்மை.
அந்தக் காலத்தில்
வீடு என்பது பெரியதாக
இருந்தது.
பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம்
கலைந்து, அந்தப்
பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க
வேண்டியதிருக்கும்.
இரவு நேரத்தில் கர்ப்பமான பெண்
அறையைக் கடந்து, கூடத்தைக்
கடந்து, பின்புறமிருக்கும்
கழிவறைக்குப்
போகும்போது அந்த வளையல்
சப்தம் அந்த பெண்
எங்கே செல்கிறாள்
என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும
். "ஏன்டி,
என்னை எழுப்பக்கூடாதா.
..இரு நானும் வர்றேன்"
என்று உதவிக்குச் செல்வார்கள்
வீட்டில் இருக்கும் பெண்கள்.
வளையல் போட்ட 'கையோடு'
கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக
தாய் வீட்டுக்குச் செல்வதிலும்
அடங்கி இருக்கின்றன அவர்களின்
மனநலம் சம்பந்தப்பட்ட
நுணுக்கங்கள். இந்திய நாட்டில்
மட்டுமின்றி, ஆசிய நாடுகளில்
எல்லாம் பிரசவம்
என்று வந்தாலே அந்தப் பெண்
தாய் வீட்டுக்குச்
சென்று விடுவது வழக்கமாக
இருக்கிறது. ஆம்...பிரசவமாகும்
பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல,
மனநலத்தையும் பாதுகாக்கிற
பணி, தாய் வீட்டுக்குத்தான்
என்று பார்த்துப் பார்த்து இந்த
ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர்
நம் முன்னோர்கள்.
நம் அம்மா, அப்பா, கணவர்,
சொந்தங்கள், மருத்துவர் எல்லாம்
நம்மைப் பிரசவம் எனும் அந்த
பெருநிகழ்வில்
இருந்து பத்திரமாக மீட்பார்கள்...'
என்ற
நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள்
இல்லாமல், செக்கப்புகள்
இல்லாமல், மருந்து -
மாத்திரைகள் இல்லாமல்
எல்லா பிரசவங்களையும்
சுகப்பிரசவமாக்கின?!
அந்த
நம்பிக்கையை கர்ப்பிணிகளின்
மனதில், அவளைச்
சுற்றியுள்ளவர்களே ஆழமாக
விதைக்கலாம். அதையெல்லாம்
செய்து பாருங்கள்...இரண்டு,
நான்கு, ஆறு...என்று மாதங்கள்.
அவர்களுக்குத்
தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக்
கொண்டிருக்கும்

31.12.13

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?(MAAVILAI THORANAM KATTUVATHU YEN?).


      விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது.
சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது..

   காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன..
    மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

       மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

29.12.13

ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் - Jalathosam Mukku adaippuku udanadi maruthuvam


  ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்
 உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.