Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

3.7.14

பல்லு போனா சொல்லு போச்சி - (PALLAI PATHUKAPPATHU EPPADI)


பல்லு போனா சொல்லு போச்சி என்ற பழமொழி எப்பொழுது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் பற்களில் நமது மொழி உச்சரிப்புக்கு மட்டும் அல்லாமல் பற்களின் ஆரோக்கியத்தை வைத்து உடலின் ஆரோக்கியத்தை சொல்லி விடலாம்.. பல காலமாக பற்களை முறையாக பராமரிக்க வேண்டுமென நமது முன்னோர்கள் சொல்கிறார்கள். அப்படியே நம்முடைய முக அழகுக்கும் பற்கள் முக்கியமாக கருதப் படுகிறது. பற்கள் போனால் நமது ஆரோக்கியம் சீர்குலைவது நிதர்சனம். உட்கொள்ளப்படும் உணவுகளை நன்றாக அரைத்து இரைப்பையின் பணியை சுலபமாக்குவதில் பல்லின் பங்கு இன்றி அமையாதது.

சரி பற்களை எப்படி தான் பாதுக்காப்பது ? நிறைய முறைகள் இருப்பினும் நான் சொல்லப்போவது ஒன்றும் புதிய முறைகள் ஒன்றும் இல்லை. எல்லாம் நமது முன்னோர்கள் பயன் படுத்திய முறை தான். இதற்கு ஒரு உண்மை சம்பவம் சொல்லி ஆகவேண்டும். எங்க அப்பாவுக்கு அம்மா இருக்காங்க. அவங்க அம்மா ( அதாவது எங்க பாட்டிக்கு அம்மா) இரு வருடங்களுக்கு முன்பு இறந்தாங்க அப்ப அவங்க வயது 113. அந்த வயதிலும் அவங்களுக்கு ஒரு பல்லு கூட விழல. எதை கொடுத்தாலும் மெண்டு சாப்பிடுவார்கள். எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் பற்களின் உறுதி உடலின் உறுதி.

சிறு செய்தி பார்த்துவிட்டு திரும்பவும் இங்க வருவோம். அமரிக்காவில் ஒரு நிறுவனத்தின் நீளம் மட்டும் சுமார் மூன்று கிலோ மீட்டர். அது என்ன நிறுவனமென்றால் அது பல் துலக்கும் பேஸ்ட் தயாரிக்கும் நிறுவனம். அந்த நாட்டின் பேஸ்ட் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. அதன் காரணமாக அங்கே அந்த நிறுவனம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

நமது முன்னோர்கள் எல்லாம் என்ன செய்வாங்கன்னு பார்ப்போம். உணவிற்கு பயன்படுத்தும் உப்பை வாயில் போட்டுக் கொள்வார்கள். சிறிது நேரம் வாயில் அடக்கி வைத்தால் உமிழ்நீர் சுரக்கும். உப்பு பட்டு சுரக்கும் உமிழ் நீர் அல்கலைன் காரத் தன்மை மிகுந்தது. அந்த உமிழ் நீரைக் கொண்டு ஈறுகளுக்கு மசாஜ் செய்து துப்பி விடுவார்கள் அது தான் பல் தேய்க்கும் முறை. இதில் அவர்கள் அல்கலைன் வைத்து பல் துலக்கினார்கள். மறுநாள் வேப்பங் குச்சி, அடுத்த நாள் ஆலங் குச்சி, அடுத்த நாள் வேலங் குச்சி, இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொன்று பயன் படுத்துவார்கள். தினமும் ஒரே பொருளை வைத்து துலக்க மாட்டார்கள். ஒரே பொருளை தொடர்ந்து பயன் படுத்தினால் அது அடிமை ( Addiction) க்கு இட்டு செல்லும்.

உப்பு எனாமலை போக்கும் என்று விளம்பரம் படுத்தியது அந்நிய நிறுவனங்கள். இப்பொழுது உங்க தூத் பேஸ்டில் உப்பு இருக்கா ? னு இப்ப கேள்வி. எல்லாம் நம்ம வைத்துள்ள பொருளை வாங்கிக் கொண்டு போய் நமக்கே திருப்பி தருவது. நம்மிடம் இருந்து வாங்கிக் கொண்டு போகும் போது நமக்கு செலவு இல்லை. அதே பொருள் நமக்கு மீண்டும் வரும் போது நமக்கு செலவு. நமது இயற்கையான பொருளை வாங்கி விட்டு செயற்கையானவைகளை நமக்கு தருகிறார்கள். சரி அதற்கு நாம என்ன செய்வதென்று நீங்கள் கேட்டால். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது எனக்கு.

சரி நான் பயன் படுத்தும் பற்பொடி.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருவேலம் பட்டை பற்பொடி வாங்கிக்கொள்வேன். அது ஒரு 25 ரூபாய். கடுக்காய் பொடி 50கி. இரண்டையும் நன்றாக கலக்கி கலுப்பை நன்றாக அரைத்து இரண்டு தேக்கரண்டி கலக்கி பல் துலக்க நன்றாக உறுதி பெரும்.

மற்றொண்டு

கடுக்காய் - 50 கி
சுக்கு - 50 கி
இந்துப்பு - 50 கி
காசுகட்டி - 50 கி

நான்கையும் சம அளவு வாங்கி அரைத்து பல் துலக்க நன்றாக உறுதி பெரும். மேற்கூறிய முறைகளில் பற்கள் உறுதி பெருவதுமட்டும் அல்லாமல் பல் நோய், பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை வராமல் தடுக்கும்.

கீழ் கண்டு குறிப்புகளையும் பாருங்கள்.

மாவிலை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெரும்.

எலுமிச்சை துண்டை சிறிது வைத்து பற்களை தேய்க்க , பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

பல்வலி நீங்க ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.

பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர – புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.

பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க – பேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு இரவில் வாய் கொப்பளிக்க பற்கள் பாதுக்காக்க படும்.

இதில் மேற்சொன்னவை நான் பயன்படுத்தும் முறை அதனால் நீங்களும் அதை பயன் படுத்த வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. உங்களால் எது முடியுமோ அதை பின் பற்றலாம். கூடுமானவரை பக்க விளைவு இல்லாத பொருட்களை பயன்படுத்தினால் சிறப்பு.

பற்பொடி பிடிக்காது என்பவர்கள் நம்நாட்டில் தயாரிக்கப்படும் பேஸ்ட் பயன் படுத்தலாமே.

இப்பொழுது கடைகளில் விற்கப்படும் பேஸ்ட் எல்லாம் நம் நாட்டுத் தயாரிப்பா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. சொறியக்கொடுத்த மாடு போல் நாமிருக்க, தடவிக்கொடுத்துப் பாலைக் கறப்பது போல் நம்மைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றது அந்நிய சக்திகள் நம் ஆளும் வர்க்கத்தினரோடு கைகோர்த்து.

வீரத்தில் சிறந்து வளர்ந்து வந்த தமிழினம், கூடிக்கெடுக்கும் கூட்டத்தால் தேய்ந்தழிந்து கொண்டிருப்பததைக் கண்கூடாகப் பார்த்தும் இன்னும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் சேதாரம் நமக்கு, செய்கூலி அவர்களுக்கு. இதனையும் சிந்திப்போம்.

மேலும் பயணிப்போம் . . . .

5 கருத்துகள்: