20.10.22
அடிக்கடி தலைவலி வருகிறதா.-(ADIKADI THALAI VAZHI VARUKIRATHA)
3.9.22
தொப்பையை குறைக்க இதுதான் வழி ! - THOPPAI KURAIKA ITHA VALI!
1.9.22
ஆஸ்துமா - வெற்றிலை, மிளகு, நொச்சி மற்றும் மிளகாய் செடி இலையின் மருத்துவ குணங்கள்.(Asthma-Vettrilai,Milagu,Nochi mattrum Milagai chediun Maruthuva Gunangal)
அறிகுறிகள்:
ஆஸ்துமா.
தேவையானவை:
வெற்றிலை,
மிளகு,
நொச்சி,
மிளகாய் செடி இலை..
செய்முறை:
10 வெற்றிலை, மிளகு 10 கிராம்,10 நொச்சி இலை, மிளகாய் செடி இலை 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வெயிலில் உலர்த்தவும்....
உலர்ந்த உருண்டைகளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமடையும்.
28.8.22
காரட் மருத்துவ குணம் -(CARROT MARUTHUVA GUNAM)
26.8.22
குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல்_(HOME REMADY FOR BABIES CONSTIPATION)
குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு_வைத்தியம்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது சொல்ல முடியாத ஒரு தொந்தரவு. மிகவும் கஷ்டப்படுவார்கள், அழுது கொண்டும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் மலச்சிக்கல் வந்தால் சரி செய்யவும் வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் குழந்தைகளை இந்த மலச்சிக்கல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.
0_6 மாத குழந்தைகள்
தாய்ப்பாலை முறையான இடைவேளியில் சரியாக கொடுத்தாலே மலச்சிக்கல் தொந்தரவு வராது. இதனுடன் பாலூட்டும் தாய், கீரைகள், பூண்டு, காய்கறி, பழங்கள், கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பருப்பு - பயறு வகைகள் போன்ற நல்ல தரமான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். இப்படி முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வரும் தாய்மார்கள் பாலூட்டி வந்தாலே குழந்தைக்கு மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.
6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் மலச்சிக்கல் தொந்தரவுகளை நீக்கும் வழிகள்
பாலூட்டும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் சரியாக இருக்க வேண்டும்.
தாயின் மனநிலை, மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முக்கியம்.
குழந்தை பாதுகாப்பான உணர்வை உணர்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
தாயின் அரவணைப்பும் அன்பும் மிகவும் முக்கியம்.
ரப்பர் மேட்டில் குழந்தைகளைப் படுக்க வைக்க கூடாது.
மலச்சிக்கல்_நீங்க
1. திராட்சை சாறு
பச்சை திராட்சை அல்லது கறுப்பு திராட்சை - 8, எடுத்துக் கொள்ளவும்.
அரை மணி நேரம் சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவவும்.
பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் இந்த 8 திராட்சைகளைப் போட்டு 1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
திராட்சைகள் நன்கு ஊறி, பாதி வெந்து விடும்.
பின்னர், இந்த திராட்சைகளையும் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மத்தால் நன்கு மசித்து சாறு எடுக்கவும்.
இந்த சாறை வடிகட்டி, தினமும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.
2. இளஞ்சூடான தண்ணீர்
குழந்தைகளுக்கு எப்போதுமே இளஞ்சூடான தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
ஜூஸ் கொடுத்தாலும் அதில் இளஞ்சூடான தண்ணீரைக் கலப்பது நல்லது.
போதுமான அளவு குழந்தைக்கு தண்ணீர் தருகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. வாழைப்பழ கூழ்
வாழைப்பழத்தைக் கரண்டியால் நன்கு மசித்து கூழாக்கி அதில் டேட்ஸ் சிரப் ஊற்றிக் கொடுக்கலாம். தினமும் ½ கப் அளவுக்கு இதைக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் நீங்கிவிடும்.
4. சப்போட்டா கூழ்
சப்போட்டாவை பாதியாக அறிந்து மேலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, ஸ்பூனால் அதன் சதைப்பகுதியை எடுத்து ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் இருக்காது.
5. உலர்திராட்சை டானிக்
உலர்திராட்சை - 15, எடுத்துக் கொள்ளவும்.நன்கு கழுவி விடவும்.
அரை டம்ளர் வெந்நீரில் உலர்திராட்சை 4 மணி நேரம் அல்லது இரவு முழுக்க ஊற விடவும்.
ஊறியதும் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை நன்கு வடிகட்டி, குழந்தைக்கு கொடுக்கவும்.
இதைத் தொடர்ந்து செய்தாலே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்காது.
6. இளஞ்சூடான ஒத்தடம்
ஒத்தடம் பேக்கில் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி அதைக் குழந்தைகளின் வயிற்று, முதுகு பகுதியில் ஒத்தி ஒத்தி ஒத்தடம் கொடுப்பது போல செய்யுங்கள்.
இதனாலும் மலச்சிக்கல் தொந்தரவு நீங்கும்.
7. பப்பாளி கூழ்
பப்பாளி கூழ் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் நீங்கிவிடும்.
8. கொய்யா ஜூஸ்
கொய்யா பழத்தை சிறிது சிறிதாக அறிந்து, விதை நீக்கி, ஜூஸ்home எடுத்து வடிகட்டி ½ டம்ளர் அளவுக்கு குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
9. இஞ்சி டிரிங்க்
ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து அரை டம்ளர் இளஞ்சூடான நீரில் கலந்து கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. ஆப்பிள்
ஆப்பிளை நன்கு கழுவித் தோலை நீக்கி கொள்ளுங்கள்.
ஆப்பிளை துண்டு துண்டாக அறிந்து கூழாக்கி கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் டேட்ஸ் சிரப் கலந்து குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க_(CONSTIPATION PROBLEM HOME REMEDIES)
13.8.22
அதிமதுரம் மருத்துவ குணங்கள் -(ATHIMATHURAM MARUTHUVA GUNANGAL)
2.8.22
மூட்டுவலி ,காய்ச்சல்,பல்வலி,ஈறுகளில் வலி,மூட்டு வலி,தசை பிடிப்பு மருத்துவ குறிப்புகள்.-(MOTTU VAZHI,KAICHAL,PALVALI,EERUKALIL VALI,THASAI PIDIPPU MARUTHUVA KURIPPUGAL)
29.7.22
வீட்டு வைத்தியம் ...! - VEETU VAITHIYAM
எலும்பு வலுப்பெற: - ELUMBU VALUPERA
கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்...
நாக்கில் புண் ஆற : - NAKKIL PUN ARA
அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.உடல் வலிமை பெற : - - UDAL VALIMAI PERA
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.அஜீரணம் சரியாக: - AGERANAM SARIAGA
ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.மூட்டு வலி குணமாக: - MUTTU VALI GUNAM AGA
அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய
கிடைக்கும்.
சிறுநீரக கோளாறு: - SIRUNEERAGA KOLARU KURAIYA
முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.படர்தாமரை, முகப்பரு: - PADARTHAMARI, MUGAPARU KURAIYA
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும். - KEERAI VAGAIGAL
கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்
புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி - HEEMOGLOBIN ATHIGARIKKA ELIYA VALI
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது....
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.
குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்-(KUDAL PUTTRU NOIYAI UNDAKKUM PIRAYLAR KOLIGAL)
பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது.
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.
ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.
6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.
ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.
பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.
நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்..-(AAROKKIYA VAZHVIRKKU 6 UNAVUGAL)
நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராகிவிடுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே உணவுதான். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள செல்கள் முதிர்வடையும் செயல்பாட்டை ஓரளவுக்குத் தாமதப்படுத்துவதுடன், நோய்நொடி இல்லாமல் வாழவும் முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் சில காய்கறி மற்றும் பழங்கள்பற்றி ஊட்டச்சத்து நிபுணர் சோபியா கூறும் தகவல்கள்....
ஆப்பிள்: அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.
பாதாம்: வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
எலுமிச்சை: தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல; நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்னையைச் சரிசெய்வதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
பூண்டு: நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் (allicin) உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.
டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப்போகும் பிரச்னையைத் தவிர்க்கும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், 'டைப் 2’ சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் டார்க் சாக்லேட்டுக்கு உண்டு.
சோயாபீன்: சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள 'லெசிதின்’ (lecithin) என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும். மேலும், இது கொழுப்பு அளவைக் குறைத்து, வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இது நல்ல கொழுப்பை எதுவும் செய்வதில்லை!









.jpeg)












