Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

3.9.22

தொப்பையை குறைக்க இதுதான் வழி ! - THOPPAI KURAIKA ITHA VALI!

தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
அத்தகைய உணவுகள் என்னவென்று ஒரு 20 உணவு வகைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன.


ஓட்ஸ்

ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.

முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

மிளகாய்

மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.

மீன்

மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

நிலக்கடலை, பாதாம் போன்ற நட்ஸ்

நட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.

தேன்

தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.

க்றீன் டீ

க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கறுவா (பட்டை)

பட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.

பப்பளிமாசு பழம்

தினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.

கேரட்

கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.

நீர்

தினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

தானியங்கள்

தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க தானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.

கொழுப்பு நீக்கிய பால் உணவுகள்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி

இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.


3 கருத்துகள்: