1.தரமான கருப்பட்டி நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவை நிறைந்திருக்கும்.
தரமற்ற கருப்பட்டியில் மணமற்று சர்க்கரையின் இனிப்பு சுவையை மட்டுமே உணர முடியும்.
2.தரமான கருப்பட்டியின் உட்பகுதியில் கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும்.
தரமற்ற கருப்பட்டி உட்புறமும் பளபளப்பாக இருக்கும்.
3.தரமான கருப்பட்டி பழமையானாலும் கடினத் தன்மை மாறாமல் இருக்கும்.
தரமற்ற கருப்பட்டி சில வாரங்களில் கடினத்தன்மை இழந்து இளக ஆரம்பித்துவிடும்.
4.தரமான கருப்பட்டி நீரில் கரைய நேரம் எடுத்துக் கொள்ளும்.
தரமற்ற கருப்பட்டி சிறிது நேரத்தில் தண்ணீரில் கரைந்துவிடும்.
5.பதநீருடன் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சுவதால் தரமான கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும்.
6.தரமற்ற கருப்பட்டியில் புள்ளி வராது.கருப்பட்டியின் மேற்பரப்பு பளபளப்புடன் மைதாமாவு போல, தொட்டால் கையில் ஒட்டும்.
தரமான கருப்பட்டி பளபளப்புடன் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக