Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

16.9.22

இரண்டு முட்டாள் ஆடுகள் -(TAMIL MORAL STORY FOR KIDS )

ஒரு காட்டு பகுதியில ஒரு வெள்ளை ஆடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அப்ப அங்க ஒரு ஆறு குறுக்கிட்டுச்சுஅந்த ஆத்த எப்படி கடக்குறதுனு பாத்த ஆட்டுக்கு அங்க இருக்குற ஒரு பாலம் கண்ணுல பட்டுச்சு.

உடனே பாலத்து வழியா நடக்க ஆரம்பிச்சது ,அப்பத்தான் பத்தாது பலத்தோட அடுத்த முனை வழியா ஒரு கருப்பு ஆடு நடந்து வந்துகிட்டு இருந்துச்சு.

அந்த பாலம் ரொம்ப சின்னதா இருந்தது ஒரு நேரத்துல ஒரு ஆடு மட்டுமே அதுல நடக்க முடியுற அளவுக்கு சின்னதா பாலம் இருந்துச்சு.

உடனே இந்த வெள்ளை ஆடு சொல்லுச்சு “ஏ கறுப்பாடே நீ கொஞ்சம் நில்லு நான் பாலத்த தாண்டுனதுக்கு அப்புறமா நீ தாண்டுனு சொல்லுச்சு

இத கேட்ட கறுப்பாடு சொல்லுச்சு நான் தான் இந்த பாலத்த முதல்ல பாத்தேன் அதனால நீ நில்லு நான் கடந்துக்கிறேன்னு சொல்லுச்சு

இத கேட்ட வெள்ளாடு நான் தான் இந்த பாலத்துல முதல்ல நடக்க ஆரம்பிச்சேன் அதனால நான் தான் இந்த பாலத்துல முதல்ல நடந்து ஆத்த கடப்பேனு சொல்லுச்சு

ரெண்டு ஆடுகளும் இப்படி சண்டை போட்டுக்கிட்டே பாலத்தோட நடு பகுதிக்கு வந்துச்சுங்க

அப்ப ரெண்டு ஆடுகளும் ஒரே நேரத்துல பாலத்த கடக்க நினைச்சப்ப கால் நழுவி ரெண்டு ஆடுகளுமே ஆத்துக்குள்ள விழுந்துடுச்சுங்க

அப்பத்தான் ரெண்டு ஆடுகளும் நினச்சதுங்க நாம ஒருதராச்சும் விட்டு கொடுத்திருந்தா இன்னேரம் பாலத்த கடந்து நல்ல படியா இருந்திருக்கலாமேன்னு...

நீதி :- விட்டு கொடுக்கிறவர் கெட்டு போவதில்லை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக