Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
உலகம்-ULAGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம்-ULAGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.7.22

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்-(KUDAL PUTTRU NOIYAI UNDAKKUM PIRAYLAR KOLIGAL)





பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது.

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

29.12.21

வெள்ளரி விதை மிக்ஸர்-(CUCUMBER SEED MIXTURE)

 வெள்ளரி விதை மிக்ஸர்

ஒரு வாணலியில் வெள்ளரி விதையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுக்க வேண்டும். நன்கு பொறியும் சத்தம் கேட்டதும் இறக்கி ஒரு தட்டில் விட வேண்டும். அதே வாணலியில் சிறிது செக்கு நல்லெண்ணெய் சேர்த்து இடிக்கல்லில் இடித்த பூண்டு, சிறிது வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு சிறிது பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இதோடு வறுத்த வெள்ளரி விதையை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். 

வெள்ளரி விதை பலன்கள்: 

நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.  புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.



25.1.14

ம‌ஞ்சளு‌ம் அழகு கு‌றி‌ப்பு‌ம்.-(MANJALUM AZHAGU KURIPPUM).


மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும். 

மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.... 

கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.

மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் ‌சீ‌ழ் பிடிக்காது.

முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்செ‌ன்று மாறு‌ம்.

மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும்.

குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டி‌க் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.

பாதவெடிப்பிற்கு குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூ‌சி வ‌ந்தா‌ல் போது‌ம்.

11.1.14

இருதய நோயாளிகள் ஆரோக்கிய உணவை மறக்கக்கூடாது.-(IRUTHAYA NOYALIGAL AAROKIYAMANA UNAVAI MARAIKKA KUDATHU)




இருதய நோயாளிகள் தாங்கள் ரெகுலராக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாது என்று கருதி உணவுப்பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையற்ற போக்குகளைக் கடைபிடிப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்...

என்னதான் ஆஸ்பிரின், பீட்டா பிளாக்கர்கள், கால்சியம் சானல் பிளாக்கர்கள் வகை மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் உணவு எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கையை விட்டு விடுவது நல்லதல்ல என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சிலர் மாத்திரை எடுத்து கொள்கிறோம் என்று மீண்டும் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களிலும் இறங்குகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

இறைச்சி உணவை விட மீன், பால், பழங்கள், காய்கறிகள் என்ற உணவு வகையை அதிகம் எடுத்துக் கொள்வது நலம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உணவு பழக்கவழக்கத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் இருதய நோயாளிகள் பலர் மரண வாய்ப்பையும் கூட தள்ளிவைத்துள்ளனர் என்று இந்த மருத்துவர்களின் ஆய்வு மூலம் முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

காய்கறிகள், மீன், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகரிக்கவேண்டும். இறைச்சி உணவுகளை குறைக்கவேண்டும்.


5.12.13

விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...? (VIDUMAURAI NATTKALIL NAMATHU KULANTHAIGALUKU ENAVELAM SOLI KUDUKALAM)


நமது குழந்தைகள் அனைவருமே விடுமுறை நாட்களை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் எதிர்கொள்வார்கள். தினசரி பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று வந்து விட்டு, வீட்டுப்பாடம் மற்றும் பரீட்சைகளுக்குத் தயாராகும் அந்த வாழ்க்கை அவர்களை மிகவும் சோர்வடையச் செய்திருக்கும். அதனால் தான் குழந்தைகள் எந்தவித தடைகளும் இல்லாமல் விளையாடும் காலமாக விடுமுறைக் காலம் உள்ளது. ஆனால், விடுமுறைக் காலத்தை விளையாடியும், ஊர் சுற்றியும் வீணடிக்கத் தேவையில்லை. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கத்துடனும், அவர்களுடைய மனதை பயனுள்ள வகையில் பயன்படுத்துமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.



வெறுமனே டிவி பார்ப்பதிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் விடுமுறைகளை கழிப்பதில் யாருக்கும் பயனில்லை. அதே சமயம், டியூசன் மற்றும் பொழுதுபோக்கு வகுப்புகள் என போரடிக்கவும் கூடாது. உங்கள் குழந்தையின் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக மாற்றும் சில விஷயங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...?
நீச்சல் - குழந்தைகளுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். விடுமுறையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் அருமையான உடற்பயிற்சிகளில் ஒன்று தான் நீச்சல். விடுமுறைகளில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தரும் வகுப்புகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மிகவும் கடுமையான ஆனால் சிறந்த உடற்பயிற்சியாக நீச்சல் உள்ளது.
கலை மற்றும் நுண்கலை - குழந்தைகளின் மனதை விசாலப்படுத்தும் விஷயமாக கலை மற்றும் நுண்கலைகள் உள்ளன. குழந்தைகளின் கற்பனைத் திறன் மற்றும் சிந்தனைத் திறன்களை திறக்கும் கதவுகளாக இந்த வகுப்புகள் உள்ளன. ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு வகையான பெயிண்டிங், ஓரிகாமி போன்றவை இந்த நுண்கலைகளில் அடங்கும்.
நடனம் - உங்கள் குழந்தைகள் சற்றே வளர்ந்தவர்களாக இருந்தால், இது அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வேண்டிய விடுமுறையாக இருக்கட்டும். நடனம் அவர்களை புத்துணர்வுடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். மேலும் அவர்களுக்கு ஒழுங்கையும், கூர்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த உதவும்.
இசை - உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய மிகச்சிறந்த விஷயம் இசை. இசை என்பது பாடுவது மற்றும் இசைக்கருவிகளை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பது என எதுவாகவும் இருக்கலாம். இசை குழந்தைகளின் மனதையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்தும். பொறுமையாக இருப்பதை கற்றுக் கொடுக்கும் கலையாக இசை உள்ளது. உங்கள் குழந்தைகள் இசை மற்றும் பாடுவதில் ஆர்;வமாக இருந்தால் விடுமுறையை கொண்டாட சிறந்த தருணம் இதுவே.
முகாம்கள் மற்றும் விடுமுறைகள் - குடும்பமாக விடுமுறையில் சென்றாலோ அல்லது கோடைக்கால முகாமாக இருந்தாலோ, குழந்தைகளுக்கு மேலாண்மை பாடங்களை கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் குழந்தைகளை முகாம்களுக்கு அனுப்பும் போது, அவர்கள் சுயமாக வாழ்வது எப்படி என்றும், தங்களுடைய உடமைகளை பாதுகாப்பது மற்றும் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் கற்றுக் கொள்வார்கள். நீங்கள் குடும்ப விடுமுறைகளில் செல்லும் போது கூட அந்த பயணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், செல்லும் இடத்தைப் பற்றியும் மற்றும் பயணம் செய்யும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்பவர்களாகவும், நன்கு கவனிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் விடுமுறையில் இருக்கும் போது, உங்களுடைய வேலைகளுக்கு உதவி செய்யுமாறும், சிறதாக ஒரு கடை வைத்து அவர்களுடைய செலவிற்கு அவர்களே பணம் சம்பாதிக்கவும் மற்றும் புதிய நண்பர்களை பெறவும் உதவி செய்யுங்கள். வாழ்க்கையின் பாடங்களையும், அன்பையும் மற்றும் நிதி மேலாண்மையையும் கற்றுக் கொடுக்க விடுமுறைகள் தான் சிறந்த பருவங்களாக உள்ளன.

4.12.13

திருமண சடங்குகள்-(Thirumana Sadangukal)


(ஆனால் நடைமுறையில் இவற்றை அறிந்துகொண்டுதான் செய்கிறார்களா என்பது கேள்விக்குரியதே]

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

மூக்கு குத்துவது..!-(Mooku kuthuvathu)


மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

30.11.13

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!-(KULANTHAIGAL MUNNILAIUL SEIYAKUDATHA SILA)

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

28.11.13

குளிர் சாதன பெட்டியை எப்படிப் பராமரிக்கலாம்?-(KULIRSATHANA PETTIYAI YEPPADI PARAMARIKALAM).


குளிர்சாதனைப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய ஓளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது..

குளிர் சாதனைப்பெட்டியை அடிக்கடி தேவையில்லாமல் திறந்தால் மின்சார செலவு அதிகமாகும். குளிர்சாதனப் பெட்டி ஓசை எழுப்பினால் defrast செய்வதற்கு முன்பு அதிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டால் சுத்தப்படுத்துவது எளிது. குளிர் சாதன பெட்டி ஓசை எழுப்பினால் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து வந்து சரிபார்க்கவும். ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை எடுக்க கத்தியை கொண்டு குத்தக்கூடாது...

23.11.13

பத்துமலைக் குகை முருகன் கோயில் மலேசியா-(PATTUMALAI GUGAI KOVIL IN MALAYSIA).



வேல் தாங்கிய கரமும், புன்னகை பொழியும் விழிகளும் கொண்டு 147 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை 


மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்

) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ளமுருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

((இந்த கோயில் வரலாறு))
             மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.

            இந்த பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

((மிகப் பெரிய முருகன் சிலை))
           தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. 
           இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

((சிறப்பு விழா))
         இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது.
ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !-(Thirumanathin pothu pennirukattum thalium magathuvam)


தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. .

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. 

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

21.11.13

கம்போடியா-(CAMBODIA).




உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.. 

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.

பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால், இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே?!

18.11.13

குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைக்கக் கூடாத 10 பொருட்கள்...(FRIDGE LA VAIKA KUDATHA 10 PORUTTKAL)


பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

14.11.13

பெட்டவாய்த்தலை-திருச்சி மாவட்டம்- (Pettavayttalai Tirchy dist)

இடம் : பெட்டவாய்த்தலை(பழைய பெயர் திருப்போர்ப்புறம்), திருச்சி மாவட்டம்


வரலாறு:

இக்காலத்தில் திருச்சிக்கும் கரூருக்கும் இடையில் பெட்டவாய்த்தலை என்னும் பெயருடன் விளங்கும் ஊர் சங்ககாலத்தில் போர்வை என வழங்கப்பட்டது.

போர் என்னும் ஊரைப் போர்வை என்றும், போஒர் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னன் சோழன் செங்கணானொடு திருப்போர்ப்புறம்(பெட்டவாய்த்தலை) என்னும் ஊரில் போரிட்டபோது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச்(குடவாசல்) சிறையில் கிடந்து, தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

13.11.13

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல்-ANJANEYA TEMPLE NAMMAKKAL).




மூலவர்
:
ஆஞ்சநேயர்

உற்சவர்
:
-

அம்மன்/தாயார்
:
-

தல விருட்சம்
:
-

தீர்த்தம்
:
-

ஆகமம்/பூஜை
:
-

பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்
:
-

ஊர்
:
நாமக்கல்

மாவட்டம்
:

மாநிலம்
:
தமிழ்நாடு

 திருவிழா:

பங்குனியில் 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர், தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே சுவாமி, தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கிறது..

 தல சிறப்பு:

இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.




திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.




முகவரி:

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் - 637403. நாமக்கல் மாவட்டம்.




 பொது தகவல்:

இச்சன்னதியின் பக்கவாட்டு சுவர்களிலுள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.




நேர்த்திக்கடன்:

பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.




 தலபெருமை:

குடவறை நரசிம்மர்: இது ஒரு குடவறை சிற்பம். கூரிய நகங்களுடன் இருக்கும் இவர், இரணியனை சம்ஹாரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.

தாயார் சிறப்பு: நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்தால், "லட்சுமி நரசிம்மர்' என்றழைக்கப் படுவார். ஆனால், லட்சுமி இவரது மடியில் இல்லாமல், மார்பில் இருக்கிறாள். நாமகிரி தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவளை வணங்கிட, கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

பக்த ஆஞ்சநேயர்சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோயில் எதிரே தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.




  தல வரலாறு:




ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார். இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார்.

அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காண தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் "லட்சுமி நரசிம்மர்' எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.




சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்