Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
விஞ்ஞானம்-(Science). லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞானம்-(Science). லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.12.13

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது - PIRANTHA KULANTHAI YEN ALUKIRATHU?


இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்துகொள்ளுங்கள் :

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்
குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

4.12.13

செல்போன் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை-(CELL PHONE CHARGE SEIYA MINSARAM THEVAI ILLAI) .



ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். 
நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது. செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது...

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் 

2.12.13

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?-(UNGAL KULANTHAIUN NIYABAGA SHAKTHIAI ATHIKARIPATHU YEPADI?)


ஞாபகம் குறித்து சில தகவல்கள் :

நாம் பார்க்கும் , கேட்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டைம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டைம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .
எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல் .
மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் : explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது – ஷார்ட் டைம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டைம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டைம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்....

1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்
2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .
3 . முழு கவனம் மிக அவசியம் .
4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்
உதரணம் news – north , east, west, south
5 . படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை
8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .
9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .
10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.

28.11.13

குளிர் சாதன பெட்டியை எப்படிப் பராமரிக்கலாம்?-(KULIRSATHANA PETTIYAI YEPPADI PARAMARIKALAM).


குளிர்சாதனைப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய ஓளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது..

குளிர் சாதனைப்பெட்டியை அடிக்கடி தேவையில்லாமல் திறந்தால் மின்சார செலவு அதிகமாகும். குளிர்சாதனப் பெட்டி ஓசை எழுப்பினால் defrast செய்வதற்கு முன்பு அதிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டால் சுத்தப்படுத்துவது எளிது. குளிர் சாதன பெட்டி ஓசை எழுப்பினால் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து வந்து சரிபார்க்கவும். ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை எடுக்க கத்தியை கொண்டு குத்தக்கூடாது...

21.11.13

உடல் உறுப்பு தானம்-(UDAKL URUPPU DHANAM)


An Awareness on Organ Donation - Food Habits and Nutrition Guide in Tamil
 'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்..
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்
"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
 தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
196-ம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

KAIYADAKA THOLAIPESIUL IRUNTHU PUTHIYA ABAYAM-(MOBILE).


18.11.13

குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைக்கக் கூடாத 10 பொருட்கள்...(FRIDGE LA VAIKA KUDATHA 10 PORUTTKAL)


பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

9.11.13

மூளை‌யி‌ல் இரு‌க்கு‌ம் சா‌ம்ப‌ல்-(MOOLAIUL IRUKUM SAAMBAL) .


மூளை‌யி‌ல் மசாலா இரு‌க்‌கிறதா? உ‌ள் மூளை எ‌ன்ன க‌ளிம‌ண்ணா எ‌ன்று கே‌ட்பதை வழ‌க்கமாக‌க் கொ‌ண்டு‌ள்ளோ‌ம் நா‌ம். ஆனா‌‌ல் உ‌ண்ம‌ை‌யி‌ல் ந‌ம் மூளை‌யி‌ல் இரு‌ப்பது சா‌ம்ப‌ல்தானா‌ம்.

எ‌ன்ன சா‌ம்பலா எ‌ன்று ‌விய‌க்கா‌தீ‌ர்க‌ள். 1.5 ‌கிலோ ‌கிரா‌ம் எடையு‌ள்ள ந‌ம் மூளை‌யி‌ல் ‌சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்க‌ள் ‌நிறைய இரு‌க்‌கி‌ன்றன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. 

மூளை‌யி‌ல் உ‌ள்ள நர‌ம்பு செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்களாக‌த்தா‌ன் ‌திர‌ண்டு இரு‌க்‌கி‌ன்றன. இவ‌ற்‌றி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஏற‌க்குறைய ப‌த்தா‌யிர‌ம் கோடியாகு‌ம். இவை அனை‌த்து‌ம் சா‌‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டுக‌ளாக‌த்தா‌ன் காண‌ப்படு‌கி‌ன்றன. 

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். 

அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் பெ‌ரிய பெ‌ரிய அ‌றிஞ‌ர்களாகவு‌ம், ‌வி‌ஞ்ஞா‌னிகளாகவு‌ம், படி‌ப்பா‌ளிகளாவு‌ம் உலக‌ப் புக‌ழ்பெரு‌கி‌ன்றன‌ர்.

30.10.13

மாற்றுத்திறனாளிக்கு முதுகு பகுதி வழியாக ஓபன் ஹார்ட் சர்ஜரி.

இதயத்துக்கு போதிய ரத்தம் செல்ல முடியாமல் அடைப்பு இருந்தால், மாரடைப்பு ஏற்படும். ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டாலே உடனே இதயத்தில் எங்கு அடைப்பு உள்ளது என்று இதய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் முகப்பேரில் உள்ள பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையின் முதன்மை இதய நிபுணர் டாக்டர் செரியன்.... 

மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்தில் செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும். மற்ற உறுப்பில் இருந்து இதயத்துக்கு செல்லும் நரம்பு பாதையில் அடைப்பு இருந்தால் அதை பைபாஸ் செய்து சீர் செய்யலாம். சில சமயம் இதயத்துக்குள் இருக்கும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும். இதற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இவை நோயாளிகளின் உடல் நிலை பொருத்தே அமையும். சிலருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். அதை கட்டுப்பாட்டில் வைத்த பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஆனால் இப்போது நூற்றில் எண்பது பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. ஆனால் நாங்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

அவர் கைகளையே கால்களாக பாவித்து நான்கு கால்களில் நடப்பவர். உடலின் மொத்த எடையும் கைகளில் தாங்கி குனிந்து நடப்பதால் அவரின் முதுகு தண்டு வளைந்து இருந்தது. விளைவு நெஞ்சு கூடு மற்றும் நுரையீரல் இருக்கும் நிலையிலும் மாற்றம். இதய அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பக பகுதியின் மையத்தில் தான் அறுவை சிகிச்சை செய்வோம்.

ஆனால் இவரின் தண்டு வடம் வளைந்து இருந்ததால், எல்லாருக்கும் செய்வது போல் செய்ய முடியாது. காரணம் நெஞ்சு சூட்டை விலக்கி அறுவை சிகிச்சை செய்வோம். விரிக்கப்பட்டு இருக்கும் நெஞ்சு எலும்பு காலப்போக்கில் ஒன்று சேர்ந்து விடும். இதற்கான சாத்தியம் இவருக்கு கிடையாது. அதை தவிர்க்க இவரின் இடது பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருந்தன. முதுகு தண்டு வளைந்து இருந்ததால், இதயத்தை அடைய போதிய வசதி இல்லை. மேலும் இவரின் நுரையீரலும் பாதிப்படையாமல் கவனமாக செயல் பட வேண்டும். மிக சிரமத்தோடும் கவனமாகவும் ஒரு மாற்று திறனாளிக்கு முதுகு பகுதி மூலம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறை. இவ்வாறு டாக்டர் செரியன் கூறினார்

29.10.13

ஆயிரம் வருடங்கள் பழமையான சிவன்கோவில் கண்டுபிடிப்பு.!-(SCIENCE).



சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது.

சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.

இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

24.10.13

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்--(BIRAMMIPOOTUM PAZHANTAMILAR VINYANAM)


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் .வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

21.10.13

இந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் வெற்றி


மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை ஆபரேஷன், இந்தியாவில் முதன் முதலாக மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனை செய்து கொண்டு குணமானவர் ஒரு ஆஸ்திரேலியர். டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் பெயர் ‘டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் சர்ஜரி’ (டிபிஎஸ்) என்று பெயர்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த ஆபத்தான ஆபரேஷனை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால், செலவு அதிகம். 15 ஆண்டாகவே, பர்கின்சன், பக்க வாதம் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க இந்த ஆபரேஷன் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நாடுகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதில்லை.

இந்தியாவில் இந்த ஆபரேஷனை செய்ய எந்த மருத்துவமனையும் முன்வரவில்லை. நோயாளிகளும் தயாரில்லை. இந்த ஆபரேஷனுக்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெஞ்சமின் வால்ட் என்பவர், ஆறாண்டாக மனச்சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலி யாவில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றால் அங்கு இந்த அரிய ஆபரேஷனுக்கு அனுமதி இல்லை.

அவர் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆபரேஷன் செய்வதாக அறிந்து இந்தியா வந்தார். அவருக்கு கடந்த 25ம் தேதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் ஜோஷி தலைமையிலான 17 டாக்டர்கள் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது.

மூளையின் ஆழப்பகுதியில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை இது. மூளையில் மிக நுண்ணிய பகுதியில் உள்ள உணர்ச்சி நரம்புகளை தூண்டி, மனச்சோர்வை தரும் நரம்புகளை முடக்கி செயலிழக்க இரு எலக்ட்ராட்ஸ் என்ற மின்காந்த தகடுகள் பொருத்தப்படுகின்றன. அந்த தகடுகள் மூலம் மூளையில் மாற்றம் ஏற்பட்டு, உணர்வு நரம்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் மனச்சோர்வு நீக்கப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சையை தான் டாக்டர் ஜோஷி தலைமையிலான குழு வெற்றிகரமாக செய்துள்ளது. தன் 21வது பிறந்த நாளில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டது திருப்தியாக உள்ளது. எனக்கு இந்த வயதில் இருந்து மனச்சோர்வு நீங்குகிறது என்பதை நினைக்கும் போது திருப்தியாக உள்ளது. இந்த ஆறாண்டுகள் நான் அதனால் பல வகையில் பாதிக்கப்பட்டேன் என்று வால்ட் கூறினார்.

அவர் மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். அதன் பின் அவர் நாடு திரும்புவார் என்று டாக்டர்கள் கூறினர்.

‘மனச்சோர்வு என்பது மன ரீதியான பிரச்னை மட்டுமல்ல. மனோதத்துவ, சமூக ரீதியான கோளாறு; மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதை சரி செய்ய அறுவை சிகிச்சையால் முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதில் வளர்ந்த நாடுகள் வெற்றி கண்டுள்ளதாக கூறுகின்றன. இந்தியாவில் இனி தான் அதை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று நரம்பியல் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.