மூளையில் மசாலா இருக்கிறதா? உள் மூளை என்ன களிமண்ணா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் நாம். ஆனால் உண்மையில் நம் மூளையில் இருப்பது சாம்பல்தானாம்.
என்ன சாம்பலா என்று வியக்காதீர்கள். 1.5 கிலோ கிராம் எடையுள்ள நம் மூளையில் சாம்பல் நிறத் திட்டுக்கள் நிறைய இருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் சாம்பல் நிறத் திட்டுக்களாகத்தான் திரண்டு இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் கோடியாகும். இவை அனைத்தும் சாம்பல் நிறத் திட்டுகளாகத்தான் காணப்படுகின்றன.
நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும்.
அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் பெரிய பெரிய அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், படிப்பாளிகளாவும் உலகப் புகழ்பெருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக