பொதுவாக சைவ உணவுகளை இன்று சமைத்து நாளைக்கு சாப்பிட்டால் அது கெட்டுப் போய் இருக்க வாய்ப்புண்டு. அதே சமயம், அசைவ உணவுகளாக இருப்பின், அது கெட்டு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு..
பிரியாணி, மீன், முட்டை, கோழிக்கறி போன்ற அசைவ உணவுகளை சரியாக சமைக்காத பட்சத்திலோ, அல்லது நாம் சமைத்த அசைவ உணவு சரியாக பதப்படுத்தப்படாத நிலையிலோ, மறுநாள் எடுத்து வைத்து சாப்பிடும் போது உணவே விஷமாகும் சூழ்நிலை ஏற்படும்.
இதனால் உடலுக்கு ஒவ்வாமை, வாந்தி, பேதி, தோல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சைவ உணவுகளிலும், காய்கறிகளை நறுக்கி குளிர்பதனப் பெட்டியில் வைத்து பிறகு சமைப்பது, குழம்பை எடுத்து வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடுவது போன்றவையும், வலிய சென்று நோய்களை நாம் தேடிக் கொள்ளும் முறையாகும்.
உணவுப் பொருள் மீதமானால் யாருக்காவது கொடுப்பதோ அல்லது தூக்கி எறிவதோ நல்லது. சாப்பிடுகிறேன் என்று உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக