Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
தமிழ் - TAMIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் - TAMIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.8.22

காகத்திற்கு உணவிடுவது ஏன்- (KAGATHIRKU UNAVU KODUPATHU YEN)


நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்..

காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.

இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்

இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

15.12.13

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!-( TIPS FOR HOME MAKERS - VEETU UPAYOGA YOSANAIGAL)


* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.m

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்....

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

9.12.13

காதுகளைப் பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்.- Kathugalai paramaripathil alatchiyam vendam



நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.

ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம். காதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல் ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் சுத்தப்படுத்தலாம். .

காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தால் குழந்தையின் காதில் பிரச்சனை இருக்கலாம். பள்ளியில் கவனக்குறைவாகவும் மந்தமாகவும் குழந்தைகள் இருந்தால் காதில் நீர் கோர்த்து இருக்கலாம்.

மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும். தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோசம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாக சிந்துவதுகூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை யாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும் ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள். தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் பாட்டுக்கேட்பதையும் தவிர்கவும். சிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம். இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.

30.11.13

சிறுநீரகக்கல்-(SiruneeragaKall)

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள் என்ன ?

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை

பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வீட்டு வைத்தியம்

சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பாட்டி வைத்தியம்-PATTI VAITHIYAM




* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்..

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்

14.11.13

மாரடைப்பும் நெஞ்சுவலியும்-(HEART ATTACK )



இந்தக் காலத்துல மாரடைப்பும் நெஞ்சுவலியும் இளசுங்களைகூட தாக்க ஆரம்பிச்சிடுச்சி. சரியான உணவு பழக்கம் இல்லாம போறதுதான் இதுக்கெல்லாம் காரணம். ஒட்டுமொத்த நோயும் ஒரே நேரத்துல வந்து உடம்பை உலுக்கி போட்டுரும். இதுலயிருந்து தப்பிக்கறதுக்கு சில வைத்திய முறைங்களைச் சொல்றேன், கேட்டுக்கிடுங்க.

நாட்டு மருந்து கடையில 'அமுக்கிராங்கிழங்கு'னு ஒண்ணு விக்கிறாங்க. அதைக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு, சின்னச் சின்ன துண்டுகளா வெட்டி வெச்சுக்கிடணும். மண் சட்டியில பாலை ஊத்தி, துணியால வேடு கட்டி, அதுக்கு மேல (துணியின் மேல்) கிழங்கைப் போட்டு, ஆவியிலயே நல்லா வேக வெச்சு எடுக்கணும். பிறகு, இதை வெயில்ல காய வெச்சு பொடியாக்கிக்கணும். அதுல ஒன்றரை ஸ்பூன் எடுத்து, தேன்ல குழைச்சு, தினமும் காலையில, சாயங்காலம்னு ரெண்டு வேளைக்கு வெறும் வயித்துல சாப்பிடணும். இப்படித் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டு வந்தா... நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு எரிச்சல் எல்லாம் ஓடியே போயிரும்.

செம்பரத்தம்பூ வைத்தியமும் கைவசம் இருக்கு. இதுல ஏழு பூவை எடுத்து, ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு, அடுப்புல ஏத்திக் காய்ச்சணும். இது அரை டம்ளரா குறுக்கினதும், ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு சேர்த்து, திரும்பவும் காய்ச்சணும். பிறகு, இதை ரெண்டு பாகமா பிரிச்சிக்கிட்டு... காலையில, சாயங்காலம்னு ஒரு மண்டலத்துக்கு ரெண்டுவேளை குடிச்சிட்டு வந்தா நல்லா குணம் தெரியும். முதல் வாரத்திலயே குணம் தெரிய ஆரம்பிச்சிரும்.

செம்பரத்தம்பூ கிடைக்காட்டி, 10 செம்பருத்திப்பூவைப் பயன்படுத்தியும் இதேபோல செய்து குடிச்சிட்டு வரலாம். அப்புறம், வெள்ளைத் தாமரைப்பூவுலயும்கூட இதைச் செய்யலாம். இந்தப் பூ பெருசா இருக்கும்கிறதால... முழு பூ, இல்லைனா... அரை பூ இருந்தாலே போதும்.
நாட்டு மருந்துக் கடையில 'மருதம்பட்டை'னு கேட்டா கொடுப்பாங்க. அதை 10 கிராம் வாங்கிட்டு வந்து... சின்னதா வெட்டி, புது மண்சட்டியில போட்டு, ஒரு டம்ளர் தண்ணி விட்டு, கால் டம்ளரா காய்ச்சி வடிகட்டிக்கணும். இந்தத் தண்ணிய தினமும் ஒரு மண்டலத்துக்கு காலையில, சாயங்காலம் 25 மில்லி அளவுக்குக் குடிச்சிட்டு வந்தா... மாரடைப்பும், நெஞ்சுவலியும் நீங்கிரும்.

ஒரு தடவை பயன்படுத்தின மருதம்பட்டையையே மூணு நாளைக்குத் திரும்பத் திரும்ப தண்ணி விட்டு காய்ச்சிக்கலாம். அந்த அளவுக்கு அதுல காரம் இருக்கும்.
ஒரு பாத்திரத்துல ரெண்டு டம்ளர் தண்ணியை எடுத்துக்கிட்டு, அதுல ஒரு கைப்பிடி துளசி இலையப் போடுங்க. பத்து கிராமோ, பதினஞ்சி கிராமோ... பனங்கல்கண்டையும் சேர்த்துக்கோங்க. ஒரு டம்ளரா ஆகுற வரைக்கும் காய்ச்சி வடிகட்டுங்க. இதுல 4 ஸ்பூன் தேனை கலந்து காலை, மதியம், மாலைனு மூணு வேளையும் சாப்பாட்டுக்கு முன்ன குடிங்க. இப்படியே தொடர்ந்து ரெண்டு, மூணு நாள் குடிச்சிட்டு வந்தா... நெஞ்சு வலி ஏற்றுமதி ஆகி, நிம்மதி இறக்குமதியாகும்.

கேன்சரைத் தடுக்கும் சோற்றுக்கற்றாழை-(CANCER AI THADUKKUM SOTTRUKATHALAI)


'பசி வயித்தைக் கிள்ளுது'னு சிலர் சொல்லக் கேட்டிருப்பீங்க... இது எல்லோருக்கும் இருக்கக்கூடிய, வர வேண்டிய இயற்கை நிகழ்வு. ஆனா, 'பசியே எடுக்க மாட்டேங்குது'னு சிலர் சொல்வாங்க. இது கோளாறு. இதை கட்டாயம் சரி செய்தாகணும். இதுக்கு கைவசம் வைத்தியம் இருக்கு..

பசியின்மை விலக:

பிரண்டைத் துவையல் இதுக்கு கைகண்ட மருந்து. பிரண்டைத் தண்டு, தேவையான அளவு புளி, காஞ்ச மிளகாய், பூண்டு, உளுந்து, தேங்காய், தேவைப்பட்டா கொஞ்சம் சின்ன வெங்காயம். இது எல்லாத்தையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி, மையா அரைக்ணும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. சுடுசோத்துல முதல் கவளம் சாப்பிடும்போது, இந்தத் துவையலையும் சேர்த்துச் சாப்பிடுங்க. அடுத்தமுறை பசி எடுக்கும். தேவைப்பட்டா இன்னொரு நாள் சேர்த்துக்கோங்க.

கறிவேப்பிலை, சுண்டவத்தல் பொடி சா ப்பிட் டாலும் வயித்துப்பசி எடுக்கும். கறிவேப்பிலை, சுண்டவத்தல், வெந்தயம், மிளகு, சீரகம் எல்லாத்தையும் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்துப் பொடியாக்கி வச்சிக்கிடணும். இதுகூட தேவையான அளவு உப்பு சேர்த்துக்கணும். சாப்பாட்டுல முதல் கவளம் எடுக்கும்போது, கால் ஸ்பூன் அளவு இந்தப் பொடியைச் சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா... யானைப் பசி எடுக்கும். பொதுவா... வாரம் ஒருநாள் இந்தப் பொடியை சாப்பாட்டுல சேர்த்துக் கிட்டாலே வயிறு சம்பந்தமான பிரச்னைகள் அண்டாம இருக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் எல்லாம் சம அளவு எடுத்து பொடியாக்குங்க. அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, தேன் இல்லனா நெய் சேர்த்து காலையில வெறும் வயித்துல சாப் பிட்டு வந்தீங்கனா... சில நாள்ல 'கபகப'னு பசி எடுக்க ஆரம்பிக்கும்.

மலச்சிக்கல் தீர:
பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தீங்கனா... மலச்சிக்கல் சரியாகும். அதோட வயிறு தொடர்பான சில நோய்களும்கூட குணமாகும்.

முடக்கத்தான் கீரையும்கூட இதுக்கு நல்ல ஒரு நிவாரணி. அதாவது, ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை தண்ணி விட்டு நல்லா காய்ச்சிக் குடிச்சாலே மலச்சிக்கல் விலகிடும். ரெண்டு மூணு நாள் செஞ்சு பாத்தீங்கனா கைமேல பலன் கிடைக்கும்.

வயிற்றுவலி குணமாக:

சோத்துக்கத்தாழை ஒரு துண்டு எடுத்து, கசப்பு போற அளவுக்கு தண்ணியில நல்லா அலசணும். அதுகூட பனைவெல்லம் சேர்த்து மென்னு சாப்பிட்டா... வயித்து வலி ஓடிடும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா... வயித்துல வர்ற மத்த கோளாறுகளும் சரியாகிரும். கர்ப்பப்பையில கேன்சர் இருந்தா... அதோட வீரியத்தை குறைச்சுடும். கேன்சர் வராமலும் தடுத்துடும்.

நாவிற்கு ருசியூட்டும் அருநெல்லி-(RUCIYUTTUM NAVIRKU ARUNELLI).


பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை..

ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது.

சுவை நரம்புகள் பல காரணங்களால் தனது சுவை உணரும் தன்மையை இழக்கின்றன. சுரம், காமாலை, வயிற்று கிருமிகள், இரத்தச்சோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைகளில் நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால் உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால் நோய் சரியானதும் மீண்டும் சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன. பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர் கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில் நிரந்தரமாகவே நாவின் சுவை அரும்புகள் செயலிழந்து விடுகின்றன. நாவில் ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல் அமிலச் சுரப்பும், நாவில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளும் கூட நாவின் சுவையை மாற்றிவிடுகின்றன.

உண்ணும் உணவின் சுவை தெரியாமலும், உணவின் மேல் விருப்பம் இல்லாமலும், பசியின்மையாலும் தோன்றும் ருசியின்மையை சித்த மருத்துவம் அரோசகம் என குறிப்பிடுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பி, கபால நரம்புகளை தூண்டி உண்ணும் உணவின் ருசியையும், தன்மையையும் நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த ஏராளமான உணவுப் பொருட்களை நமது முன்னோர்கள் உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி, பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை, துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும் பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் பக்குவப்படுத்தப்பட்டு உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட்டு படுகின்றன. இவை நாவின் சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன. இந்த உணவுகளில் சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காயே நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது. அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.

அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

11.11.13

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு-(AMMAI NOOIYAI KATTUPADUTHUM NUNGU)


இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன..

குளுமை தரும் நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும் நுங்கும்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு

கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

செவ்வாழை ரகசியம்-(SEVALAIUN RAGASIYAM)


எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்..

இலந்தைப் பழத்தின் நன்மை-(ILLANTHAI PALATHIN NANMAI)



இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும். 
எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.

உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.

9.11.13

குறைவாக தூங்கினால் உயிருக்கு ஆபத்து--(SLEEPING HABIT)




ஒரு ம‌னித‌ன் தினமும் குறை‌ந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும். 
அதற்கு குறைவாக தூங்கினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் 
தெரிவித்து உள்ளனர். 

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தூக்கம்
 குறித்து ஆராய்ச்சி செ‌ய்தன‌‌ர்.

இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல், தூக்கமின்மைக்கும் அகால மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
 அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெரும்பாலான மக்கள் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தான் 
தூங்குகிறார்கள். 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களில் 12 சதவீதம் பேர் அகால மரணம்
 அடைகிறார்கள். அதே போல 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினாலும் அவர்களுக்கு மரணம்
 முன்னதாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குறைவாக தூங்குபவர்களுக்கு சர்க்கரை வியாதி, உடல்பருமன் நோய், ரத்த அழுத்தம், 
உடலில் கொழுப்பு சத்து சேர்வது போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோ‌ன்ற நோ‌ய்க‌ள் ஏ‌ற்படுவத‌ற்கான
 அ‌றிகு‌றியாக‌க் கூட குறைவான தூ‌க்க‌த்தை‌ எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்‌கிறது ஆ‌ய்வு. 

உண‌வே ‌விஷமாகு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு-(UNAVEY VISAM AGUM)




பொதுவாக சைவ உணவுக‌ளை இ‌ன்று சமை‌த்து நாளை‌க்கு சா‌ப்‌பி‌ட்டா‌ல் அது கெ‌ட்டு‌ப் போ‌ய் இரு‌க்க வா‌ய்‌ப்பு‌ண்டு. அதே சமய‌ம், அசைவ உணவுகளாக இரு‌ப்‌பி‌ன், அது கெ‌ட்டு உடலு‌க்கு ஒ‌வ்வாமையை ஏ‌ற்படு‌த்தவு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு..

‌பி‌ரியா‌ணி, ‌மீ‌ன், மு‌ட்டை, கோ‌ழி‌க்க‌றி போ‌ன்ற அசைவ உணவுகளை ச‌ரியாக சமை‌க்காத ப‌ட்ச‌‌த்‌திலோ, அ‌ல்லது நா‌ம் சமை‌த்த அசைவ உணவு ச‌ரியாக பத‌ப்படு‌த்த‌ப்படாத ‌நிலை‌யிலோ, மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சா‌ப்‌பிடு‌ம் போது உணவே ‌விஷமாகு‌ம் சூ‌ழ்‌நிலை ஏ‌ற்படு‌ம்.

இதனா‌ல் உடலு‌‌க்கு ஒ‌‌வ்வாமை, வா‌ந்‌தி, பே‌தி, தோ‌ல் நோ‌ய்க‌ள் ஏ‌ற்படவு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு.

சைவ உணவுக‌ளிலு‌ம், கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி கு‌ளி‌ர்பதன‌‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து ‌பிறகு சமை‌ப்பது, குழ‌ம்பை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சூடா‌க்‌கி சா‌ப்‌பிடுவது போ‌ன்றவையு‌ம், வ‌லிய செ‌ன்று நோ‌ய்களை நா‌ம் தேடி‌க் கொ‌ள்ளு‌ம் முறையாகு‌ம். 

உணவு‌ப் பொரு‌ள் ‌மீதமானா‌ல் யாரு‌க்காவது கொடு‌ப்பதோ அ‌ல்லது தூ‌க்‌கி எ‌றி‌வதோ ந‌ல்லது. சா‌ப்‌பிடு‌கிறே‌ன் எ‌ன்று உட‌ம்பை கெடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். 

மூளை‌யி‌ல் இரு‌க்கு‌ம் சா‌ம்ப‌ல்-(MOOLAIUL IRUKUM SAAMBAL) .


மூளை‌யி‌ல் மசாலா இரு‌க்‌கிறதா? உ‌ள் மூளை எ‌ன்ன க‌ளிம‌ண்ணா எ‌ன்று கே‌ட்பதை வழ‌க்கமாக‌க் கொ‌ண்டு‌ள்ளோ‌ம் நா‌ம். ஆனா‌‌ல் உ‌ண்ம‌ை‌யி‌ல் ந‌ம் மூளை‌யி‌ல் இரு‌ப்பது சா‌ம்ப‌ல்தானா‌ம்.

எ‌ன்ன சா‌ம்பலா எ‌ன்று ‌விய‌க்கா‌தீ‌ர்க‌ள். 1.5 ‌கிலோ ‌கிரா‌ம் எடையு‌ள்ள ந‌ம் மூளை‌யி‌ல் ‌சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்க‌ள் ‌நிறைய இரு‌க்‌கி‌ன்றன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. 

மூளை‌யி‌ல் உ‌ள்ள நர‌ம்பு செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் சா‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டு‌க்களாக‌த்தா‌ன் ‌திர‌ண்டு இரு‌க்‌கி‌ன்றன. இவ‌ற்‌றி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஏற‌க்குறைய ப‌த்தா‌யிர‌ம் கோடியாகு‌ம். இவை அனை‌த்து‌ம் சா‌‌ம்ப‌ல் ‌நிற‌த் ‌தி‌ட்டுக‌ளாக‌த்தா‌ன் காண‌ப்படு‌கி‌ன்றன. 

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். 

அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் பெ‌ரிய பெ‌ரிய அ‌றிஞ‌ர்களாகவு‌ம், ‌வி‌ஞ்ஞா‌னிகளாகவு‌ம், படி‌ப்பா‌ளிகளாவு‌ம் உலக‌ப் புக‌ழ்பெரு‌கி‌ன்றன‌ர்.