தூங்குபவர்களை பார்த்து, இப்படிக் குறட்டை விட்டா நாங்க எப்படித் தூங்கறதாம்.... என்று கேட்டால்..
தூங்குபவர்களுக்குத் தங்கள் குறட்டை பற்றியோ, அதன் விளைவுகளைப் பற்றியோ தெரியாது. "உங்களுக்குத் தூக்கம் வரலேன்னா நான் என்ன செய்ய முடியும்? மனுஷனை நிம்மதியா தூங்க விட மாட்டீங்களே..." என்று சண்டைக்குப் போகும் நபர்களும் உண்டு.
"மூச்சுக் குழாயினுள் காற்று எளிதாகச் செல்ல முடியாத நிலையில் குறட்டை வருகிறது. இவர்களது ரத்தத்தில் ஆச்சிஜனின் அளவும் மிகக் குறைவாக இருக்கும். இதனால் குறட்டை நோயாளி இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
குறட்டை விடுபவர்கள் தூக்கத்தில் நிறைய தடவை மூச்சுவிட முடியாமல் தவிப்பார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் போது திகில் கனவு கண்டது போல் விழிப்பார்கள்.
குறட்டைக்கு முக்கிய காரணமே நோயாளியின் சின்ன நாக்கு மற்றும் அதன் மேல்பகுதி (பேலட்) பருமனாக இருப்பதுதான். இதனால் காற்று மூச்சுக் குழாயில் எளிதாகச் செல்ல முடிவதில்லை.
குறட்டை நோயாளிகள் அதிக எடையுடன் இருப்பார்கள். தொண்டையின் உள்பகுதியில் டான்சில், நாக்கு, சின்ன நாக்கு, சின்ன நாக்கின் மேல்பகுதி (பேலட்) போன்றவை பெரியதாக, பருமனாக இருக்கும். குறட்டை நோயாளி வாயினால் மூச்சு விடுவதால் இந்த பேலட், சின்னநாக்கு அதிகமான வேகத்தில் அசையும். இதனால் ஏற்படும் ஒலி தான் "கொர்ர்ர், கொர்ர்ர்" என அருகில் படுத்திருப்பவரின் காதைப் பிளக்கும்.
குறட்டை நோயாளிகள் தூங்கும்போது பரிசோதனை செய்வோம். இந்த பரிசோதனையில் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் ஆக்ஸ“ஜன் சதவீதம், எத்தனை முறை சுவாசம் நிற்கிறது. ஆபரேஷன் தேவையா, இல்லையா என்று எல்லா விவரமும் தெரிந்துவிடும்.
குறட்டை நோயாளிகள் தூக்க மாத்திரை மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
குறட்டை நோயாளிக்குத் தீர்வு இப்போது லேசர் ஆபரேஷன் மூலம் வந்திருக்கிறது. இந்த ஆபரேஷன் செய்கையில், டான்சில் பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுத்தால் போதும். லேசரால், ரத்தம் வீணாகாது. வீக்கம் ஏற்படாது சீக்கிரமே பழைய நிலைக்குத் திரும்பி விடலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக