Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

9.11.13

கழுத்து வலிக்கு சுய உதவி.-(KALUTHUVALIKU SUYA UTHAVI)


1. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.


2.
 மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும்.




3.
 நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது... 




4.
 படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.




5.
 மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.




6.
 ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.




7.
 படுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.




8.
 வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.




9.
 ஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதே போல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும்.




10.
 நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.




உடற்பயிற்சிகள




நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடையூறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ கழுத்துக்கு மேலும் தொந்தரவு வரும்.




கழுத்து உடற்பயிற்சி, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும், கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும்.எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக