தற்போது உடல் இயக்கத்துடன் கூடிய அதாவது ஓடி விளையாடும் குழந்தைகள் குறைந்து விட்டார்கள். இதற்குக் காரணம் இடப் பற்றாக்குறையும், குழந்தைகளை முறையாக விளையாட வைக்க ஆளில்லாததும்தான் காரணம்.
எனவே பல குழந்தைகள் வீடியோ கேம்சுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். எப்போதும் கம்ப்யூட்டர் அல்லது டிவி முன்பு அமர்ந்து கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளின் உடல்நிலை பல வகையில் பாதிக்கப்படுகிறது.
அதில் முக்கியமாகக் கூற வேண்டும் என்றால் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு இரவில் தூக்கம் வர வெகு நேரம் ஆகிறது. மேலும், வீடியோ கேம்ஸ் விளையாட ஒரு குழந்தை டிவியின் மிக அருகில் உட்காருவதும் மற்றொரு முக்கிய பிரச்சினையாகிறது.
எனவே வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளை தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த விளையாட்டில் இருந்து விலக்கி விடுங்கள்.
பிறகு இயல்பான விளையாட்டுகளில் ஈடுபட்டுவிட்டு பிறகு தூங்கச் செல்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக