கல்யாணம் என்ற சொல் மங்களத்தைக் குறிக்கும். அத்தகைய மங்களத்தைக் குறிக்கும் கல்யாணி என்பது பசுவிற்கு உரியதாகும். `கோ' என்ற சொல்லுக்கு இறைவன் என்றும், அரசன் என்றும், தலைவன் என்றும் எண்ணற்ற பொருள் உண்டு. அவற்றுள் ஒன்று பசு. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்றும் பொருள் உண்டு. செல்வம் என்பது பொருட்செல்வத்தை மட்டுமின்றி அருட்செல்வத்தையும் சேர்த்துதான் சொல்கிறோம்.
பசு நமக்குப் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் ஒருசேர அளிக்க வல்லது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் பசுவினைத் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர். இது தவிர பசுக்கள் கூடுகின்ற இடங்களில் பசுக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டியை அமைத்தனர்.
அத்தொட்டிகளில் எந்நேரமும் நீர் நிரம்பியிருக்கும்படியும் செய்தார்கள். கூடவே பசுக்களின் உடலில் ஈ, கொசுக்கள், உண்ணிகள் அமர்ந்து அவற்றிற்கு தீங்கு செய்யும் போது, பசுக்கள் தங்கள் உடலைச் சொறிந்து கொள்வதற்காக ஆவுரிஞ்சுக்கற்ககளையும் ஆங்காங்கே நட்டு வைத்தனர். ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக