Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
யோகா(yoga) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா(yoga) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.9.22

தொப்பை குறைய எளிய பயிற்சி-(THOPPAIYAI KURAIKA YELIYA PAUIRCHI)


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். 

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

13.8.22

மூச்சுக்கலை - சுவாசத்தின் மகத்துவம்.-(MOOCHUKALAI SUVASATHIN MAGATHUVAM)

               நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை. மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல்.

            இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல் வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து தெளிந்து அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய் வளர்த்தெடுத்திருக்கின்றனர்என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும் கொள்ளக் கூடிய ஒன்று..


              பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால் ஆனதே நம் வாழ்க்கை. வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. இதனை நல்வினை, தீய வினை என பொதுவில் பகுத்தாலும்..இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!, உடலுக்கு ஆற்றல் தர ரத்தம் ஓடுவதைப் போல, உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை எண்ணங்கள்..

இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை வலுவேற்றுகிற சுவாசம், நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க நிவர்த்தி" என்கின்றனர்.

ஆச்சர்யமான தகவல்தானே..

                     அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.

                   ஆம், சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும் என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர். அத்தகைய வழி முறைகளை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.

11.8.22

சுகப்பிரசவம் ஏற்பட-(SUGAPRASAVAM YERPADA)


Image result for normal delivery images
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?



இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும்.

1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு . . .

திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய், ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2 உணவை விரும்பு . . .

கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.


3 எதைச் சாப்பிடலாம் . . .

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில்பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

4 குனி, வளை, நிமிர் . . .

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

5 சபாஷ் சரியான எடை . . .

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.

6 படுக்கையும் உறக்கமும் . . .

கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

7 ஒரே மருத்துவர் . . .

பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.

8 தவறாத மருந்துகள் . . .

தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.

9 கூடாது... கூடாது... கூடவே கூடாது . . .

வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்...

10 அகமே சுகம் . . .

தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

1.3.14

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்- (SIDHA MARUTHUVATHIN SIRAPU)


சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.

வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.

உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.

மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை, தொகை சரக்கு முறை (திரிகடுகு, திரிபலா, திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.

28.2.14

மன அழுத்தத்திற்கு யோகா சிறந்த மருந்து-(MANA AZHUTHATHIRUKU YOGA SIRANTHA MARUNTHU)


      மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், மன நோய் சார்ந்த பாதிப்பு உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

     உடலை மட்டுமல்லாமல் மனதையும் கட்டுப்படுத்தி சீராக வைத்துக் கொள்ளும் தன்மை யோகக் கலைக்கு உள்ளது. அந்த காலத்தில் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் நோயற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. ஆனால் தற்போது யோகாவை ஒரு சிலரே கற்று பயிற்சி செய்து வருகின்றனர்.

      நாம் நன்றாகத்தானே இருக்கிறோம், நமக்கு எதற்கு யோகா என்று நினைத்தால் அது தவறு. நாம் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், நமது உடல் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறது. அதில் இருந்து நம்மைக் காக்க உதவுவது யோகாதான்.

      தற்போது, மன அழுத்த நோய் பாதித்தவர்களுக்கும் யோகக் கலை மூலமாக குணமளிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

        மூளைக்கு செல்லும் நரம்புகளை சீராக்க உதவும் யோகாக்களை செய்வதன் மூலமும், மன அழுத்தத்தை குறைத்து, அமைதியை அளிக்கும் யோகாக்களையும் முறையான பயிற்சியோடு செய்வதன் மூலமும் நிச்சயம் மன நோயாளிகள் மறு வாழ்வு பெறலாம் என்பது உறுதி.

      முதுகு வலிக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இந்தியாவில் யோகாவிற்கு அவ்வளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், தற்போது வெளிநாடுகள் பலவும் யோகா குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தி வருகின்றன. மேலும், தங்கள் நாட்டு மக்களிடையே யோகா குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

11.1.14

புற்று நோயை கட்டுப்படுத்த, குணம் பெற மருத்துவத்துடன் யோகா. -(PUTTRU NOIYAI KATTUPADUTHA,GUNAM PERA MARUTHUVATHUDAN YOGA)



உடலின் சக்தியை, மன, ஆன்மீக சக்திகளுடன் யோகப் பயிற்சியின் மூலம் இணைத்து புற்று நோயை குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவர் ஷாஜி குடியாத் கூறியுள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக உள்ள மருத்துவர் ஷாஜி வி.குடியாத், ஆளைக் கொல்லும் புற்று நோயை குணப்படுத்த யோகம், பிரார்த்தனை, மருத்துவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் என்றார். 

குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை ஆகிய இடங்களில் ஏற்படும் புற்று நோயை இப்படிப்பட்ட முறையை கையாண்டு குணப்படுத்த முடியும் என்று குடியாத் கூறியுள்ளார்.

உடல் சக்தி, உடல், ஆன்மா ஆகியவற்றிற்கு இடையிலான பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அறிவியல் முறையை உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

“ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் ஆளைக் கொல்லக் கூடிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்தலாம். சரியான உணவும், மனமும், சிந்தனையும் மிக முக்கியமானவை. சிந்தனை பெருமளவிற்கு உடலைப் பாதிக்கிறது. எனவே எதையும் நல்லதாக சிந்திப்பது நோயைக் குணப்படுத்த அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.

9.1.14

கோணாசனம்: முதுகுவலி தீர எளிய பயிற்சி-(KONASANAM MUTHUGUVALI THEERA YELIYA PAIURCHI).




'Kona' என்றால் முழங்கை என்று அர்த்தம். ஆசணம் என்பது ஒரு கோணத்தில் ஒரு நிலைப்பாட்டோடு இருப்பது.இந்த கோணாசனம் முழங்கையிலிருந்து , முதுகெலும்பு மற்றும் பின்புறம் வரை செயலாக்கம் கொடுத்து பலனளிக்கும்.

செய்யும் முறை :

1. இருபுறமும் உங்கள் கைகளை ஆஸ்வாசப்படுத்தி நேராக நிற்கவும்.

2. உங்கள் உள்ளங்கைகள் தொடைகளை பக்கவாட்டத்தில் தொட்டுவாரு இருக்க வேண்டும்.

3. உங்கள் கால்களை குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடி அகலப்படுத்திகொள்ளவும்.

4. தோள்பட்டை அளவில் இரு கைகளையும் உயர்த்தி, கைகளை இணையாக வைக்கவும்.

5. மூச்சை உள்ளிழுக்க உங்கள் வலது காலை வலது கோணத்தில் வைத்து குனிய வேண்டும்.

6. வலது கையை கீழே நேராக வைத்து வலது காலை தொட்டு, இடது கையை நேர உயர்த்தவும்.

7. உங்கள் பார்வை மேலிருக்கும் இடது கை மீதே இருக்க வேண்டும்.

8. அதே சமயத்தில் இடது முட்டி வளையாமல் வைக்கவும்.

9. இப்போது நீங்கள் இருப்பது கோணாசனம், அதாவது உங்கள் உடல் கோண்லாக நிருத்திய கம்பத்தை போன்று இருக்கும். 

10. இந்த கோணத்தில் 10-15 நொடிகள் இருங்கள். பின்னர் மெதுவாக நின்று நிதானியுங்கள்

11. இதையே வலது காலுக்கும் பின்பற்ற வேண்டும். இடது புறமாக காலை சாய்த்து, இடது கையால் தொட்டவாரு வலது கையை உயர்த்த வேண்டும்.

நன்மைகள்:

• முதுகிற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை உருவாக்கும்
• உடல் சோர்வு நீங்கும்
• முதுகு வலிக்கு நிவாரணம் தரும். 

குறிப்பு:

அகண்ட விரிக்கையை பயன்படுத்தவும். 
முதல் முறை பொருமையுடனும் நிதானத்தை கடைபிடிக்கவும்
ஒரு வார பயிற்சிக்கு பிறகு 10 நொடிகளை 2 நிமிடமாக்களாம். 
ஆசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகே உணவு அல்லது தூக்கம் என்பதை கடைபிடிக்க வேண்டும்.

18.12.13

மூச்சு கலையே முழுமையான வாழ்க்கை.-(MOOCHU KALAIYE MULUMAIYANA VAZHKAI).

ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.

 ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது.
 இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.


 ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.
 உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.
 அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.


 நமது நுரையீரலின் கொள்ளளவில் முப்பது விழுக்காடு மட்டுமே காற்றை உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது ஆய்வுகள்.
 இதனால் என்னவெல்லாம் எதிர் விளைவுகள் உண்டாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே மூச்சுக் கலையின் மகத்துவத்தை உணரமுடியும்.
 குறைவான சுவாசத்தினால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் போதுமான அளவு காற்று நிரம்பிட வாய்ப்பில்லாமல் போகிறது.
 இதன் காரணத்தினால் நுரையீரல் தனது செயல்பாட்டினை முழுமையாக செய்ய முடியாமல் போவதால் இரத்ததில் உள்ள கழிவுகள் முழுமையாக நீக்கப் படாமலும்,
குறைவான பிராண வாயுவையும் சுமந்து கொண்டு மீண்டும் உடலினுள் பாய்கிறது. 


 இப்படி கழிவுகளை சுமந்து கொண்டு செல்லும் இரத்தத்தினால், அது உடலில் செய்ய வேண்டிய பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் போகிறது.
 இதன் தாக்கம் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளிலும் கணிசமான பாதிப்பினை உண்டாக்குகிறது.


 இதன் தாக்கம் மூளையின் செயல்பாட்டினை மந்தமாக்குவதில் துவங்குகிறது. நாம் உட் கொள்ளும் உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாமல்,
அதில் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதில் குறைபாடுகள் உண்டாகிறது. இதனால் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவதனால் உடலின் கழிவுகள் வெளியேறாமல்,
 தேங்கி நோய் உண்டாக்குவது வரை நீள்கிறது.


 "வெறும் மூச்சுதானே", என நாம் அசட்டையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயலுக்குப் பின்னால் எத்தனை பெரிய பாதிப்புகள் காத்திருக்கிறது.
 என்பதை உணர்த்திட வேண்டியே இத்தனை நீண்ட அறிமுகம் தேவையாகிறது. இந்த பாதிப்புகளை நம் மூச்சினை சீர் படுத்துவதன் மூலம் எளிதில்,
 சரி செய்யும் வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். 


 அந்த வகையில் முதலில் நாம் எப்படி சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிதல் அவசியம்.
 ஆய்வுகளின் அடிப்படையில் நான்கு விதமான சுவாசத்தினை நாம் மேற்கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டிருக்கின்றனர்.

அவை...
  • உயர் சுவாசித்தல்
  • மத்திம சுவாசித்தல்
  • கீழ் சுவாசித்தல்
  • முழுமையான சுவாசித்தல்


 நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை.
 மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல்.
 இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல் வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து,
 தெளிந்து அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய் வளர்த்தெடுத்திருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும் கொள்ளக் கூடிய ஒன்று.


பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால் ஆனதே நம் வாழ்க்கை.
வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன.


இதனை நல்வினை, தீய வினை என பொதுவில் பகுத்தாலும்... இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!, உடலுக்கு ஆற்றல் தர ரத்தம் ஓடுவதைப் போல,
உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை எண்ணங்கள்.


இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை வலுவேற்றுகிற சுவாசம், நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க நிவர்த்தி" என்கின்றனர்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில்,
நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.


சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும் என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

2.12.13

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?-(UNGAL KULANTHAIUN NIYABAGA SHAKTHIAI ATHIKARIPATHU YEPADI?)


ஞாபகம் குறித்து சில தகவல்கள் :

நாம் பார்க்கும் , கேட்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டைம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டைம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .
எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல் .
மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் : explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது – ஷார்ட் டைம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டைம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டைம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்....

1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்
2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .
3 . முழு கவனம் மிக அவசியம் .
4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்
உதரணம் news – north , east, west, south
5 . படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை
8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .
9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .
10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.

29.11.13

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால்.-(ORU MANITHAN ORU NIMIDATHIRKU 15 MURAI SUVASITHAL)



ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. 


{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).

28.11.13

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்.-(Arivai perukum Toppukkaranam)




ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

23.11.13

டென்ஷன் பிரச்னைக்குத் தீர்வு.-(TENSION PIRACHANAIKU THEERVU)


*பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்....

*நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

*அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

*டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.

*அடுத்து, உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.

*தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும். வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.

*டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.

*குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

*இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம். இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

*மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.

*தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும். மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மனஅமைதிக்கு நல்லது.

*ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.

மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்.-(MANA ALUTHATHAI KURAIKUM THIYANAM)

மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ...

நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம். 

பாதுகாப்பு முறை:

கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.

படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும்.

சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்.

30.10.13

ஜிம்மில் எது என்ன ஏன்?-(JIM)


உடல் உறுதி - உறுதி!

‘‘எனக்கு இரண்டு மாதத்தில் கல்யாணம். ஓவர் வெயிட்டா இருக்கேன். உடனே வெயிட்டைக் குறைக்கணும்...’’ ‘‘டெலிவரிக்கு அப்புறம் உடம்பு பெருத்துடுச்சு. டிரெஸ் எல்லாம் டைட்டா இருக்கு. உடம்பைக் குறைக்கணும்...’’ ஒரு முடிவோடு ஜிம்முக்கு செல்பவர்களா நீங்கள்? ‘ஜிம்’ என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்?

2. வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச்

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம். இதே போல் கிதீ தீமீஸீநீலீ என்ற இயந்திரமும் தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

3.கலோரிகளைக் குறைக்க ட்ரெட்மில்

ஒரே இடத்தில் இருந்தபடி நடக்க, ஓட உதவும் இயந்திரம் இது. இதன் உதவியால் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்கலாம். நடக்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் இதில் வசதி இருக்கிறது. ஜிம் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே இதை வைத்திருப்பார்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து பயிற்சி செய்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் இப்பயிற்சி செய்வது நல்லதல்ல. மூட்டுவலி வரும் அபாயம் உண்டு.

4.எக்ஸ்ட்ரா சதை குறைய பைக் ரீகம்பென்ட்

பைக் ஓட்டுவது மாதிரியான பயிற்சி, பெடல் போடுவது போல கால்களை சுழற்ற வேண்டும். அடிவயிறு, தொடைப்பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா சதை குறையும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சரியான சாய்ஸ். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் எடை குறையும். ஃப்ரெஷ்னெஸ் கிடைக்கும்.

5. முதுகு, தண்டுவட உறுதிக்கு ஹைப்பர் எக்ஸ்டென்ஷன்

இந்த இயந்திரத்தின் உதவியோடு முன்புறம் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யலாம். முதுகுத் தசைப் பகுதிகளையும், தண்டுவடத்தையும் உறுதி செய்யும் எக்சர்சைஸ். எல்லா வயதினருக்கும் ஏற்றது. டூவீலர் ஓட்டும் பெண்கள், இதனைத் தொடர்ந்து செய்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

6. கலோரி மைனஸுக்கு எலிப்டிக்கல் ஃபிட்னஸ் க்ராஸ்

இருந்த இடத்தில்,நின்றபடி சைக்கிள் ஓட்டும் பயிற்சி. உடலின் மொத்த பாகங்களும் செயல்படுவதால் நல்ல எக்சர்சைஸ். கலோரியை குறைக்க
உதவுகிறது. எந்த வயதினருக்கும் ஏற்றது.

7.ஃபிட்னஸுக்கு ஸ்பின் சைக்கிள்

இருந்த இடத்தில் சைக்கிள் ரேஸ்! 10 நிமிடப் பயிற்சியில் 100 கலோரி வரை குறைக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கும் ஃபிட்னஸ் பிரியர்களுக்கும் சரியான சாய்ஸ்.


8.வீகைகள், தோள்கள் வலுவாக

பைசெப்ஸ் கர்ல் கைகளை நீட்டி, மடக்கும் பயிற்சியை இந்த இயந்திரத்தில் செய்யலாம். எளிதாகச் செய்ய, கடினமாகச் செய்வதற்கு ஏற்ப ப்ரோக்ராமை மாற்றி வைத்துக் கொள்ளலாம். கைகளில் உள்ள சதைகளை குறைக்கும். தோள்களுக்கு பலம் தரும். சிக்கென்ற தோற்றம் தரும். தினமும் 15 நிமிடங்கள் செய்தால் போதும்.

10. தொடைச் சதை குறைய

லெக் எக்ஸ்டென்ஷன். லெக் கர்ல் காலை நீட்டி, இந்த இயந்திரத்தில் உள்ள நீளமான வெயிட்டுக்கு அடியில் கொடுத்து மேலே தூக்கிக் கீழே இறக்கும் பயிற்சி. தொடை, பின்புறம் பெரிதாக இருக்கிறது என கவலைப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம். சரியாகப் பயிற்சி செய்தால் நல்ல ரிசல்ட் உடனே கிடைக்கும். செய்வதற்கு எளிது என்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்றது.

11.அகண்ட தோளைக் குறைக்க ஷோல்டர் ப்ரெஸ் இயந்திரத்தின் மேலே இருக்கும் இரு கைப்பிடிகளையும் பிடித்து மேலும் கீழும் இழுக்கும் பயிற்சி. தோள்கள் அகலமாக இருக்கும் பெண்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் குறையும். முதுகுக்கும், தோளுக்கும் பயிற்சி கிடைப்பதால் விரைவில் பலன் தெரியும்.

12. மார்பகத் தளர்ச்சி நீங்க

செஸ்ட் ப்ரெஸ் அமர்ந்த நிலையில், இருபக்கமும் இருக்கும் லீவரை முன்னும் பின்னும் இழுக்கும் பயிற்சி. மார்பகங்கள் தளர்ந்து போகாமல் இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள் இந்தப் பயிற்சியைச்செய்யலாம். தினமும் 20 நிமிடம் செய்தால் போதும்.

29.10.13

வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா.-(COLLIGATE PAIN TO MIND?)

வலியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. தலைவலி, முதுகு வலி, கை வலி, கால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வலி... இவர்களில் பெரும்பாலானோர் மருந்து, மாத்திரை என சிகிச்சைகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் வலியைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லையே என்கிற வேதனை ஒரு பக்கம்...

சதா சர்வ காலமும், வலி வலி எனப் புலம்புவதைக் கேட்கும் வீட்டாரும் உறவினர்களும், இவர்களைக் கிட்டத்தட்ட மனநோயாளிகளாகவே பார்க்கிற அவலம் இன்னொரு பக்கம் என வலியுடன் போராடும் வாழ்க்கை கொடியது. தீராத, நாள்பட்ட வலி என்பது மன நோயின் அறிகுறியாக இருக்குமா? வலிகளுக்கும், மனதுக்கும் தொடர்புண்டா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘எந்த நோயுமே நீண்ட நாள்களாக சரியாகாமல் கஷ்டம் தந்தால், அது மன உளைச்சலை உண்டுபண்ணும். மற்றவர்களைப் போல இருக்க முடியவில்லையே என்கிற வேதனையுடன், எந்த சிகிச்சையில் வலி தீரும் என்கிற தேடலில் பணம் விரயமாகிற கவலையும் சேர்ந்து கொண்டு, அவர்களுக்கு ‘செகண்டரி டிப்ரஷன்’ என்பதை உருவாக்கலாம். நோயின் காரணம் வேறாக இருக்கும்.

ஆனால், அதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தத்தின் பாதிப்பால் அவர்களது நடவடிக்கைகளில் காணப்படும் மாற்றங்களை வைத்து, குடும்ப உறுப்பினர்கள் மனநோயாளி மாதிரி சித்தரித்துப் புறக்கணிப்பது மிகவும் தவறு. நோய் குணப்படுத்தப்பட்டால், மன அழுத்தம் தானாக சரியாகி விடும்.

அடுத்தது, அதிக டென்ஷன், மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்குப் பலவித உடல் உபாதைகள் வரும். ரொம்பவும் டென்ஷனாக இருந்தால் தலைவலியை உணர்கிறோம். சரியாகத் தூங்காவிட்டால் தலைவலியும் வயிற்றுவலியும் வருகிறது. எனவே, மன அழுத்தத்தினால் சில நோய்கள் - முக்கியமாக வலி நோய்களும் வரலாம். வலிக்கான காரணம் அறிந்து குணப்படுத்தாவிட்டால், நீண்ட நாள் வலியானது மன பாதிப்பை உண்டுபண்ணக்கூடும்.

வலியாலும், அது தரும் மன உளைச்சலாலும் அவதிப்படுவோர், முதலில் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கப் பழக வேண்டும். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மிதமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால், உடலில் சில ஹார்மோன் சுரப்பு நிகழ்ந்து, வலி குறையும். மன அழுத்தத்தை அலட்சியம் செய்தால், சாதாரண வலி கூட தீவிரமானதாகத்தான் தெரியும். எனவே சந்தோஷமான மனதே, வலிக்கான முதல் மருந்து!’’

தவறான உணவு பழக்கத்தாலும் மூட்டு வலி வரும் வாய்ப்பு.-(MOOTU VAZHI)

மூட்டுகளில் தேய்மானம் அடைவதால் ஏற்படுவது மூட்டு வாதம். பொதுவாக மூட்டு வாதம் எனப்பட்டாலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது. தற்கால உணவு பழக்க வழக்கங்கள் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் பாஸ்ட் புட் கலாசாரம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெயரில்தான் பாஸ்ட் இருக்கிறதே தவிர, இதை உண்பதால் உடலில் சுறுசுறுப்பு குறைந்து விடுகிறது என்பது என்னவோ நிஜம்தான். அதுபோல் தற்போதைய வேலை முறைகளும், உடல் உழைப்புக்கு அவசியமே இல்லாத அளவுக்கு உள்ளது.

இன்றைய அவசர யுக மக்களிடம் அதிகாலை எழுதல், உடற்பயிற்சி போன்ற பழக்கங்கள் இல்லவே இல்லை. எளிதான சிறு சிறு உடற்பயிற்சிகள் கூட உடலை வலுப்படுத்தும். இதை யாரும் உணர்வதே இல்லை. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு கூட எலும்புகள் பலவீனமாகி மூட்டுதேய்மானம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர். வளரும் குழந்தைகள் உணவுப்பழக்கம் பற்றி பெற்றோரும் கண்டுகொள்வதில்லை....

இத்தாலிய உணவுகளான பீட்சா, பாஸ்டா போன்றவற்றை பெற்றோரே வாங்கி கொடுக்கின்றனர். இதனால், இயற்கை சார்ந்த உடல் நலத்தை மேம்படுத்தும் உணவு பற்றிய உணர்வே குழந்தைகளிடம் இருப்பதில்லை. மேலும், இவ்வாறு மேலை நாட்டு உணவுகளை சாப்பிடுவது தங்களது அந்தஸ்தை அதிகப்படுத்தும் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளதும் இதற்கு காரணம். படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உடல் நலத்தை பேணுவதற்கும் கொடுக்கப்பட வேண்டும்.

மூட்டு வாதத்துக்கு சிகிச்சை என்ன?

மூட்டுவாதத்துக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன. நோயாளி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதற்கு பிசியோதெரபி, மூட்டு பொருத்துதல், மெழுகு ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரணி மருந்துகள், நோய் எதிர்ப்பு மாற்று மருந்துகள், அறுவை சிகிச்சை என பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிக்கலாம்.மூட்டு வாத சிகிச்சையின் போது உணவு கட்டுப்பாடு பெரிய அளவில் இல்லை. பொதுவாக மீன் எண்ணெய் மூட்டு அழற்சியை போக்க உதவுகிறது.

ஆனால், கீல் வாதத்தை பொறுத்தவரை உணவு கட்டுப்பாடு அவசியமானது. மாமிசம், சிப்பி, நத்தை வகைகள் கீல்வாதத்துக்கு எதிராக அமைந்துவிடும். மேலும் ஆல்கஹால் போன்ற யூரிக் அமிலத்தை அதிகமாக்குபவை, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குளூட்டன் ஒவ்வாமை உடையவர்கள் கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களை உட்கொண்டால் மூட்டுவலி அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கென உள்ள நிபுணர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்து கொள்வதோடு, பரிந்துரைப்படி உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நோய் வேதனையில் இருந்து நாம் மீள முடியும்.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா.?-(HEART AND TEETH)




இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா?

கோவை கே.ஜி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.பாலசுப்ரமணியம், தினகரன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:

மாரடைப்பை வெல்ல முடியுமா?

மாரடைப்பு என்றும் மணி அடித்துக்கொண்டு வராது. இந்நோய் பலரது உயிரையும் பறித்துள்ள விநோத நோய். தள்ளிவைப்பு, அசட்டை ஆகியவை மாரடைப்பைவிட கொடிய நோய். முழு உடல் பரிசோதனையின்போது மாரடைப்பு அறிகுறி தெரியவந்தால், மாரடைப்பை நாம் வென்றுவிடலாம்.

நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குவது எதனால்...?

ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது. இருதய தசைகளின் செயல்பாடு குறைவதால் இருதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைந்து, சரியாக ரத்தம் வெளியேறாத நிலையில் ஏற்படும் பாதிப்பே ஹார்ட் ஃபெயிலியர். சம தளத்தில் நடக்கும்போது மூச்சு வாங்கினால் ஹார்ட் ஃபெயிலியர் உள்ளது என்று அர்த்தம். உடனடியாக இருதய நோய் நிபுணரை சந்திப்பது நல்லது.

அதிக கோபம் ஆபத்தை விளைவிக்குமா?
அதிக கோபம் வரும்போது அதிகளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடும். உச்சக்கட்டமாக உயிரும் போய்விடும்.

சாதாரண நெஞ்சு வலிக்கு முதலுதவி மட்டும் போதுமா?
நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டரை பார்த்து உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தரமான இருதய நோய் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். நாளை பார்க்கலாம்... காலையில் செல்லலாம்... என தள்ளிப்போடக்கூடாது. இது காலனை வரவழைக்கும். மாரடைப்பு யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காது.

இதயநோய் ஏற்பட பற்களும் ஒரு காரணம் என்கிறார்களே. எப்படி?

பற்களில் பாக்டீரியாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விடுகிறவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. வயிற்றில் குடல் புண்ணை உருவாக்கும் ஹெலிக்கோ பேக்டர் பைலோரே என்ற நுண்ணுயிரி மாரடைப்பை உருவாக்குகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

உணவில் பயன்படுத்த உகந்த எண்ணெய் எது?
கொழுப்பு வியாதிக்கு முக்கிய காரணமாக இருப்பது சாப்பாட்டில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்தான். உணவில் நாம் பயன்படுத்தும் மூன்று விதமான எண்ணெயில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இருவித கொழுப்பு உருவாகிறது. தாவர வகைகளில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் சிறந்தது. விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உகந்தது அல்ல.

அத்லெடிக் ஹார்ட் என்றால் என்ன?

விளையாட்டு வீரர்களுக்கு இருதயத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுதான், அத்லெடிக் ஹார்ட் என்று சொல்லப்படுகிறது.

உணவில் வெள்ளை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்களே, அது என்ன?

சர்க்கரை, உப்பு, மாவு என்ற மூன்று வெள்ளை பொருட்கள்தான் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. அந்த வெள்ளை விஷயங்களை ஒதுக்கிவிட வேண்டும். இந்த வெள்ளை பொருட்களை ஒதுக்கிவிட்டு, மனதை எப்போதும் வெள்ளையாய் வைத்திருக்க வேண்டும். தினம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் நம்மை அண்டாது.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா? மாரடைப்புக்கு கொழுப்பு தான் காரணம் என்கிறார்களே?

மாரடைப்புக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனித மனம் ஏ, பி என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஏ பிரிவை சேர்ந்தவர்கள் சுறு சுறுப்புடன் எப்போதும் டென்ஷன் உடனேயே இருப்பார்கள். இலக்கை நிர்ணயித்து அதை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். இந்த மனம் பெற்றவருக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

27.10.13

''மனம்''-(Manam).




மனம் என்ற சொல்லே அமானுஷ்யமானதுதான். மனம் என்ற ஒரு கரணத்தை உடைய ஒரே பிறவி, ஒப்பற்ற பிறவி மனிதப் பிறவி மட்டுமே. உலகில் எத்தனை மதங்கள், பிரிவுகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முன் வைப்பது மனதின் நிலை பற்றிய கோட்பாடுகளையே. நம் தேசத்தில் ரிஷிகளும், சித்தர்களும், யோகிகளும் கர்ம யோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம், மந்திர யோகம் என்று பலதரப்பட்ட யோக மார்க்கங்களை நமக்கு தந்து அருளியிருக்கிறார்கள். அவை அனைத்திலும் முக்கியமான பயிற்சியாகவும், அடிப்படை விஷயமாகத் திகழ்வதும் மனதைப் பக்குவப்படுத்தும் விஷயமேயாகும். மனம் எவனுக்கு அடங்கி நிற்கிறதோ, அவனுக்கு இந்த உலகமே அடங்கி நிற்கும். மனம் உடைய ஈசன் மனுஷன். அந்த மனம் செயலற்று நின்று விட்டால், அவன் ஈசன்.

பிராண வாயுவை குதிரை என்று வர்ணிப்பது போல மனதைக் குரங்கோடும், யானையோடும் ஒப்பிட்டுச் சொல்வார்கள். சாதாரணமாக மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கினைப் போல நிலை விட்டு நிலை மாறிக் கொண்டே இருக்கும். யானை அசையாது நிற்காது. எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கும். அது போல மனமும் சலனமடைந்து கொண்டே இருக்கும். ஒரு நிலையில் நிற்காது. பேய் அதாவது அகத்தே விளங்கும் அகப்பேய் என்றும் வர்ணிப்பார்கள். அந்த அளவு பேயாட்டம் போடுமாம் மனம். நம் மனமே நமக்கு சொர்க்கம். நம் மனமே நமக்கு நரகம். அதுவே உற்ற நண்பன். அதுவே கெட்ட பகைவனும் கூட. எனவே மனதை அடக்கி அதன் மேல் சவாரி செய்யப் பழகிவிட்டால் எல்லா உலகங்களையும் வெல்லலாம்.

அலையும் புலனைப் பின்தொடர்ந்தே
அலையு மனதோ நம்மறிவைக்
கலக்கி இழுக்கின்றது நீர்மேல்
காற்று கலத்தை இழுப்பதுபோல்

கடல் நீரில் மிதந்து செல்லும் பாய்மரக் கப்பலை புயல் காற்று அங்குமிங்கும் ஆட்டிப்படைத்து இழுப்பது போல், புலன் வழிப் போகும் மனமானது நம் அறிவைக் கலங்கிடச் செய்து, நிலையின்றி இழுத்தடிக்கின்றது. எனவே மனமானது புலன் வழி போகாமல் அறிவின் தெளிவைப் பெற்று, புலன்களை அடக்கி இயங்கும் போது தூய்மையடைந்து, அமைதியடைகின்றது என்பது புரிய வருகிறது. மனம் என்ற ஒன்றே கிடையாது என்று கூட சொல்பவர்கள் உணடு. சரியான புரிதல் இல்லாமையோ, அல்லது மற்றவர்களை குறை சொல்வதற்காகவோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. உண்மையில் மனம் என்றால் என்ன ? நமது மொத்த எண்ணங்களின் தொகுப்பே மனமாகும். எனவே தான் நம் முன்னோர்கள் நல்லெண்ணங்களையே எண்ண வேண்டும் என்பார்கள். அவ்வாறு நல்லெண்ணங்களையே எண்ண வேண்டும் என்றால் அதற்கேற்ற வாழ்க்கைச் சூழல் அமைந்தால்தான் சாத்தியமாகும். அதற்கு நல்லெண்ணம், நல்ல செயல்கள், நல்ல சொல் உள்ளவர்களோடு கூட வேண்டும்.

வாழ்க்கையில் நாம் மேல் நோக்கிச் செல்வதற்கு நமக்கு உத்வேகம் கொடுப்பது நம் எண்ணங்களே ஆகும். எனவே அத்தகைய எண்ணங்கள் உயர்ந்த, நல்ல எண்ணங்களாக இருப்பது அவசியமாகும். ஆன்மிக நெறியாளர்களோடு கூடும் போதும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடும் போதும் இத்தகைய நல்லெண்ணங்கள் வளரும். இதையே நல்லார் இணக்கமும், நின் பூசை நேசமும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவார்கள். இறைவனுக்குப் பயப்படுபவன் தீய எண்ணங்களை தவிர்த்து விடுவான். எனவே இறைவனுடைய கைங்கரியங்களைச் செய்வதாலும், அத்தகைய மேன்மையான மக்களோடு கூடி வாழ்வதாலும் தீய எண்ணங்களை மறந்து நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள ஏதுவாகும். இதையே மன சுத்தி என்பார்கள். இதையே வள்ளுவர் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பார். இதற்காகவே பதஞ்சலி மகான் இயமம், நியமம் என்ற இரண்டு படித்தரங்களை அல்லது பயிற்சி முறையை முன் வைக்கிறார். இத்தகைய மனசுத்தி இல்லாதவர்களின் தியானம் என்பது போராட்டமான மன ஒருமைப்பாட்டுப் பயிற்சியாகவே விளங்கும். மேல் நிலைகளை எட்ட முடியாது. தெளிவடையாத சாதாரண மனதிற்கு தெய்வீக ஞான வாசலின் தங்கச் சாவி கிட்டுவதில்லை.

மனமானது தன்னிச்சையாக இயங்கும் சக்தி வாழ்ந்ததாக உள்ளது. உலகில் உள்ள எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி மனோ சக்தி. மனதின் வேகத்திற்கு இணையான வேகம் உலகில் இல்லை. அத்தகைய மனம் கட்டுப்பட்டால் உடலும் நம் கட்டுக்குள் இருக்கும். மனதால் உருவாக்கப்படுவதே உடல். மனதை அடக்கினால் உடல் அடங்கும். நாம் உண்ணும் உணவும், பிராணனும் மனதின் வலிமையில் பெரும் பங்கு வகிக்கின்றன.