Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

29.10.13

சின்னமலையின் சிறப்பம்சம்..!(THE HIGHLIGHT OF CHINNAMALAI NEAR SAIDAPET ..!)



ஏசுபெருமானின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் வாழ்ந்த இடம்தான் சைதாப்பேட்டை சின்னமலை. இயேசுவின் அருட்போதனைகளை பரப்புவதற்காக அவரது சீடர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணமானார்கள். அந்த வகையில் இந்தியா நோக்கி பயணம் செய்தவர்தான் புனித தோமையார். இவர், கடல் வழி முழுமையாக கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே கேரளா வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஏசுபெருமான் கூறிய பிரசங்கங்களைத் தொகுத்து நமக்கு பைபிளாக வழங்கியது அந்த காலகட்டத்தில்தான். சைதாப்பேட்டை சின்னமலையில் தங்கியிருந்த போது அவர் அமர்ந்து ஜெபம் செய்த பாறை, அதில் அவர் செதுக்கிவைத்த சிலுவை, தாகம் எடுத்தபோது பாறையைப் பிளந்து அவரே உருவாக்கியதாக கூறப்படும் நீரூற்று போன்றவை சின்னமலையின் சிறப்பாக சொல்லப்படுகிறது. இதற்காகவே இதை காண்பதற்காக ஏராளமானோர் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், மாட்டுக் கொட்டகையில் மரியன்னை ஏசுவை பெற்றெடுக்கும் காட்சி, ஏசுவிற்கு தண்டனை வழங்கும் பொருட்டு மன்னரின் முன்னிலையில் விசாரிக்கும் காட்சி, முள்முடி தரித்து சிரசில் குருதி ஒழுக சிலுவையை சுமந்து செல்லும் காட்சி, சிலுவையில் அறையும் காட்சி, இறுதியாக கல்லறையில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சி என பல்வேறு நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற வகையில் தத்ரூப சிலைகளாக இந்த பாறைகளின் மீது வடித்திருக்கிறார்கள். மேலும், இங்கு பச்சைப்பசேல் என படர்ந்திருக்கும் செடி, கொடி, மரங்களும் வாகன இரைச்சல் கேட்காத அமைதியான சூழலும் நாம் சென்னையில்தான் இருக்கிறோமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இதை பார்ப்பதற்கென்றே தினமும் வந்து செல்கிறார்கள்.

பார்வை நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, மதியம் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை. கட்டணம் எதுவும் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக