இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி வாந்தி வருவது போன்று இருப்பதால் சரியாகத் தூங்க முடிவதில்லை. தினமும் இதே பிரச்னை..
இதற்கு ‘உணவுக்குழாய் அமில அரிப்பு’ என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் வால்வு ஒன்று இருக்கிறது. இந்த
வால்வு பழுதுபட்டால் இந்தப் பிரச்னை வரும். இதனை ‘எதுக்களித்தல்’ என்றும் சொல்வதுண்டு.
இரவு நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதும் இந்தப் பிரச்னையை உருவாக்கும். அதிகம் தண்ணீர் குடிப்பதும் ஒரு காரணம். பருமனாக இருப்பவர்களுக்கு இது வரலாம். இரவு முழுக்க இதே பிரச்னை நீடித்தால், காலையில் எழுந்திருப்பதே கஷ்டமாக இருக்கும்.
மந்தமான உணர்வையும் உருவாக்கும். தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை முடித்து விடுவது நல்லது. வயிறு முட்டச் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவதும் இந்த பிரச்னையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
அதிக காரம், புளிப்பு, கொழுப்புத் தன்மையுள்ள உணவைத் தவிர்த்து விடுங்கள். பருமனை குறைக்க முயற்சி செய்யுங்கள். இரவு நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தலைவலி, மூட்டுவலி மாத்திரை சாப்பிடுபவர்களையும் இந்த நோய் தாக்கும்.
மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பிரச்னை தொடர்ந்தால் என்டோஸ்கோபி சோதனை செய்து கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக