Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

24.10.13

உடல் எடையைக் குறைக்க -(UDAL YEDAIYAI KURAIKA)



தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது.

காலையோ அல்லது மதியமோ சாப்பிடும் இந்த காராமணி (தட்டைப்பயிறு) சுண்டலே போதும். முடிந்தால் மதியம் சாதத்தில் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரண்டு உணவுகளால் விரைந்து அதிக எடையைக் குறைத்துவிடலாம்.

சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் எரிந்துவிடும். அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக