Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

26.10.13

சுவாமி விவேகானந்தர் யார் தெரியுமா?-(VIVEKANANDAR)




* ஒரு பெண்ணை குருவாக ஏற்று, தன் மனைவியையே தெய்வமாக பூஜித்து, பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும் ஆதிபராசக்தியை கண்டு வழிபட்ட ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர்.

* நம்நாட்டுப் பெண்கள் சங்ககாலப் பெண்களைப் போன்று கல்வியில் தேர்ச்சிமிக்கவர்களாகவும், சாதனையாளர்களாகவும் திகழவேண்டும் என்று தணியாத ஆவல் கொண்டு அதற்காகப் பாடுபட்டவர்.

* நமது பாரத நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணிவேராய் நின்று வலிமை சேர்த்தவர்.

* திலகர், காந்திஜி, நேதாஜி, அரவிந்தர், பாரதி.... போன்ற கணக்கில்லா பல சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்குவித்தவர்.

* சிகாகோவில் சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு இந்து தர்மத்தையும், பாரத நாட்டின் பெருமையையும் உலகோர் அனைவரும் அறியச் செய்தவர்.

* பாரதத்தை அடிமை நாடாகவும், காட்டுமிராண்டிகளின் நாடாகவும் எண்ணிய மேற்கத்திய நாட்டவரிடம் நமது நாட்டின் உயர்வையும் பெருமையையும் எடுத்துரைத்து உணர்த்தியவர்.

* இன்றும் நம்மிடையே அவரது படைப்புகள் மூலம் வாழ்ந்து, இளைஜர்களுக்கு தேசபக்தியையும், தன்னம்பிக்கையையும் அளித்து வருபவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக