உடல் பருமனை குறைக்க என்ன பண்றதுனு யோசிகரிங்களா உடல் பருமன் பிரச்சனையில் இரண்டு வகைகள் உண்டு
1. உடல் முழுவதும் பருமனாக இருக்கும் மார்பிட் ஒபிஸிட்டி
2. தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும் 'அப்டமினல்' அல்லது 'சென்ட்ரீபீடல் ஒபிஸிட்டி' மிக அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட பதினைந்து வருடங்கள் குறைவான ஆயட்காலம் என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர்களுக்கு இதய நோய்கள், ரத்தத்தில் அதிக கொலஸ்ஸட்ரால், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
என்ன கரணம் உடல் பருமனாக!
*உடல் ஆரோக்யமாக இருக்க உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் கார்போ ஹைட்ரேட் புரதம் கொழுப்பு வைட்டமின் மினரல் போன்றவை சமசீர் அளவு இருக்க வேண்டும்.இதில் கார்போஹைட்ரேட் என்பது உடல் இயங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது.
2.புரதம் உடலின் கட்டமைப்புகளில் பங்கேற்கிறது.தசை, கல்லீரல், அடிபட்ட எலும்பைச் சேர்க்கிறதென்றால் அது புரதத்தின் வேலையே!
*இதன் அடிப்படை அங்கம் அமினோ அமிலம். உணவில் புரதம் சைவமாகவும் இருக்கலாம், அசைவமாகவும் இருக்கலாம். சென்னா, பொரி கடலை, பருப்பு, வகைகள் போன்றவை சைவ புரதம். பால், முட்டை போன்றவற்றில் இருக்கும் புரதம் எளிய அசைவ புரதம். மட்டன், சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றில் இருக்கும் புரம் சிக்கலான அசைவ புரதம்.
3.கொழுப்பு: வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், சன் பிளவர் ஆயில் போன்றவை சாதாரண கொழுப்பு. மாட்டிறைச்சி, சிக்கன், மட்டன் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பு அசைவ கொழுப்பு. இதில் சிக்கனில்தான் கொஞ்சம் கொழுப்பு குறைவாக உள்ளது.
4.விட்டமின்களை உடலால் தனியாகத் தயாரித்துக் கொள்ள முடியாது. அதனை நாம்வெளியில் இருந்து தான் உட்கொள்ள வேண்டும். இது உடலின் பல செயல்முறைகளுக்கான என்சைமாக பயன்படுகிறது.
*கனிமங்கள், தாதுப்பொருட்களை சோடியம், துத்தநாகம், நிக்கல், கோபால்ட் போன்ற உணவில் சேர்;ந்துள்ள மினரல்களை நாம் தினசரி உணவு லிஸ்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அத்தோடு ஒரு லிட்டரிலிருந்து இரண்டு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதும் சமச்சீர் உணவில் அடங்குகிறது.உணவில் சரியான விகிதம் பார்க்கும்போது கார்போஹைட்ரேட் 40-50 சதவீதம், புரதம் 30-40 சதவீதம், கொழுப்பு 10 சதவீதம் இருக்க வேண்டும்.
*மக்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். ஆனால் சரிவிகித உணவை சரியான அளவில் சாப்பிடுவதில்லை.நெய், வெண்ணெய், எண்ணெய் போன்றவற்றை அளவோடு சாப்பிட்டால் நல்லது. பிஸ்கட், கேக் போன்றவற்றில் வெண்ணெய் இருக்கிறது. உடல்பருமன் இருப்பவர்கள் இவைகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய் இல்லா சப்பாத்தி அல்லது சுக்கா ரொட்டி நல்ல செலக்ஷன்.
*புழுங்கலரிசி போன்றவற்றிலிருந்து சிக்கலான கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
புரதத்தில் சைவ புரதம் நன்று.
*ஆனால் நீங்கள் அசைவ உணவு உண்பதில் நாட்டமுடையவர்களாக இருப்பின் சிக்கன், முட்டை, மீன் எடுத்துக் கொள்வது நல்லது. இரால், மட்டன் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் புரதத்தில் நிறைய கொழுப்பும் இணைந்து வருவதால் முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது.
*பச்சை நிற காய்கறியிலிருந்து விட்டமின்கள், மினரல்கள் நிறைய கிடைக்கும். அதனை உண்பதும் மிக நல்லது. அத்தோடு போதிய தண்ணீர் அருந்துவதும் அவசியம்.
*மேற்சொன்ன விகிதித்தில் உணவைக் எடுத்துக் கொள்ளாமல் கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொண்டு போதிய உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக