நோய்_எதிர்ப்பு_சக்தி அதிகரிக்க
பசும்பால் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக்கொள்ளலாம்.
பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம்,கேரட்,பூண்டு, இஞ்சி,மஞ்சள் தூள்,கருஞ்சீரகம் , தயிர்,பார்லி, ஓட்ஸ்,கிரீன் டீ
டீ, காபி ( பால் இல்லாமல் )
சர்க்கரைவள்ளி கிழங்கு,காளான்
ப்ரொக்கோலி,கிவி பழம், எல்லாவகைபழங்கள்,பெர்ரி பழங்கள்
எலுமிச்சை,கீரைகள், காய்கறிகள்
சுருள்பாசி (ஸ்பைருலினா)
மஞ்சள் பட்டாணி, கொண்டைக்கடலை,
நிலக்கடலை, பாதாம்,பிஸ்தா பருப்பு,
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ,சூரிய காந்தி விதை ,மீன், நண்டு, இறால்
சிக்கன், முட்டை, பால் ,மாம்பழம்,
பப்பாளி, வெண்பூசணி, தர்பூசணி,
வெள்ளரிப்பிஞ்சு, சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி
பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய்
பச்சை நிறக் காய்கறிகள் அனைத்தும்.
தினம் இரண்டு எனபது அனுதினமும் காலை மாலை மலஜலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொண்டு மலச்சிக்கலில்லாமல் உடலைப்
பாதுகாத்துக் கொண்டால் நமக்கேற்படும் பல நோய்களைத் தவிர்க்க முடியும்.
தினம் தோறும் மிளகு ரசம் சாப்பாட்டுடன் சேருங்கள் அல்லது ஒரு டம்ளர் அளவாவது குடியுங்கள்..
தினமும் 4 மிளகுகள் வரை நன்றாக மென்று தின்று விட்டு வெந்நீர் குடியுங்கள்.
தினமும் காலை மாலை சூரிய உதய நேரம் மற்றும் அஸ்தமன நேரங்களில் வரும் சூரிய கதிர்வீச்சை சரீரத்தில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்
பத்து துளசி இலைகள் மற்றும் நான்கு கிராம்பு இரண்டு வெற்றிலை நான்கு மிளகு போன்றவற்றை எல்லாம் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றிய உடன் அதனை நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் தினமும் குடித்து வரலாம்.
சுடுநீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளித்து வரலாம்.
வாரம் இரண்டு என்பது வாரத்தில் இரண்டுநாள் நல்லெண்ணெய்க் குலியல் அதாவது சனிநீராடு என்ற வழக்கிற்கிணங்க சனிக்கிழமையும் அடுத்தது செவ்வாய் அல்லது புதன் கிழமை அன்றோ என ஏதாவது ஒரு நாளில் ஆக வரத்தில் இரண்டு நாட்களில் சுத்தமான நல்லெண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து நல்லா கைக்கால் பிடிச்சிவிட்டு( மசாஜ் செய்து)
சுடுநீரில் குளித்து வருவதால் உடலின் சூட்டினைத்தவிர்த்து கண்களையும் பாதுகாக்கலாம் மசாஜ் செய்வதால் மேனி மெருகேற்றப்படுவது மட்டுமல்லாது கைக் கால்களைப் பிடித்துவிட்டு சுளுக்கெடுத்து நெட்டிப்பறிப்பதனாலும் நரம்புகளும் உடல் சதைகளும் நல்ல வலுப்பெறும்.உடல் உறமேறும்.
மாதம் இரண்டு என்பது தன் மனைவிவுடன் மட்டும் குறைந்தபட்சம் மாதம் இருமுறை அதாவது பதினைந்து நாட்களுக்கொரு முறையாவது தாம்பத்ய உறவுகொண்டு அளவோடு மகிழ்தல் இருபாலருக்கும் நலம்.
வருடம் இரண்டு என்பது வருடத்தில் இருமுறை அதாவது ஆறு மாதத்திற்கொருமுறை இயற்கை மருத்தவ முறையில் பேதிமருந்துண்டு வயிற்றை சுத்தம் செய்தால் உடலில் உணவைசெரிக்க சுரக்கும் செரிமானசுரப்பிகள் நன்கு செயல்படவும் பெருங்குடலில் ஏற்படும் மலச்சிக்கல் தொல்லைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகவும் அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக