Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

28.11.13

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்.-(ELUMICHAIUM ARPUTHA MARUTHUVA GUNANGAL)


சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்..

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்..

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!-(MUTHUMAIYAI ODA ODA VIRATUM OATS )


உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும்ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன.
இதில் அதிக அளவு புரதமும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ் தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம்.

இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம்.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம்.

நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன.

தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது.

உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது.

உடலில் உடல் பலவீனம் மறைந்தது.

இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள் பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள்.

அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்..

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்-(PENGALUKANA NOOIGALUM IYARKAI MARUTHUVAMUM)



பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி... இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண்குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.

‘நீ இனி குழந்தை இல்லை. குமரி...’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.

பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள்... இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.
‘வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.

பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள்.

குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.

வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும்.

பாதங்களைப் பாதுகாக்க!-(PAATHANGALAI PAATHUKAKKA)


* பப்பாளிப் பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்...

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்..

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்..

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும். * இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

27.11.13

காய் -(Kaai)


வாழைப்பூ


இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்
புத்துணர்வையும் தரவல்லது.



வாழைக்காய்.


இரும்புச்சத்து,பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும்
குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.



வாழைத்தண்டு


இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது.
இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரைப் பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல்
அடைப்பை தடுக்கும்.

பாகற்காய்

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக்
கட்டுப்படுத்தும்.


பீட்ரூட்




கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்



கோவைக்காய்


வைட்டமின்ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.
 


வெண்டைக்காய்




போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.






சுண்டைக்காய்


புரதம்,கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.





சுரைக்காய்

புரதம்,கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.