Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

2.12.13

உடலை வலுவாக்கும் பாதாம்பருப்பு.-(UDALAI VALUVAKKUM BATHAMPARUPPU)


பாதாம் பருப்பினால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைப்பதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பாதாமில் உள்ள புரதச்சத்து மிகவும் தரம் வாய்ந்தது..

25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் தன்மை கொண்டது. 80 சதவிகிதம் கரையாத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது.

இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. இதனால் பாதாமை ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது. எனவேதான் பாதாம் ஒரு உயர்தர உணவாக கருதப்படுகிறது.
பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. சத்து நிறைந்த பாதாம் இந்தியாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிக அளவில் விளைகின்றது. மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றன.

செயல்திறன் மிக்க சத்துக்கள்

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் காணப்படுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது.

பாதாம் எண்ணெய்

பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம், மற்றொன்று கசப்பு பாதாம் இனிப்பு பாதாமில் பூக்கள் மென்மையாக இருக்கும். கசப்பு பாதாமின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெயே பயன்படுத்தப்படுகின்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெயானது தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செரிந்தது. இது அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது.

பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. சரும வறட்சி, அரிப்பு, போன்றவைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

செரிமானக் கோளாறுகளை நீக்கும்

நமது பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து உணவு செரிமானத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே செரிமானக்கோளாறு உள்ளவர்கள் பாதம் பருப்பை உண்ணுவதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

வயிற்றுக்கு ஏற்ற பாதாம் பால்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது.

இதயத்தின் நண்பன்

ஓட்ஸ்,சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை கூட்டுவதில்லை என்றால் பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

தூக்கம்-THOOKKAM



நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?
நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும்
ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.
முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்
உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,
இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.
-
ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக
நிகழும். முதலில் தோல் தன் வேலையைத்
தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை
உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள்,
கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை-(ULAR THIRACHCHAI)





திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடும் முதியோர்களுக்கு சிறந்தது. உல் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம். நாவறட்சிக்கு சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.

பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். இந்தப்பழத்தை பாலில் போட்டும் வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும். தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

வாழைத்தண்டு சூப்.-(VAZHAITHANDU SOUP)





வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு,காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்..

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும்.

30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும்.

குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும்.

பலன்கள்:

ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது.

எப்படி சாப்பிட வேண்டும்?-(YEPADI SAPIDA VENDUM?)


‘ஸ்பா’ என்று சொன்னதுமே இளசுகளின் புத்துணர்ச்சி மையம் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும், அழகு நிலையங்களிலும் ஸ்பா கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. சரி, இந்த ‘ஸ்பா’வை முதன்முதலில் இந்தியாவில்அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா?

அசோக் கண்ணா. இவர்தான் ‘ஸ்பா’மகன்! அமெரிக்காவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர். 1999ம் ஆண்டு சுபயோக சுபதினத்தில் இமாசலப் பிரதேசத்தில் டெஸ்டினேஷன் ஸ்பாவான ‘ஆனந்தா’வை தொடங்கினார். உலகம் சுற்றும் வாலிபனாக பறந்துகொண்டிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

‘‘அவசர வாழ்க்கைக்குப் பழகிட்டோம். இந்த வேகத்துலேந்து சில நாட்களாவது தப்பிக்க முடியுமான்னு யோசிக்கிறோம் இல்லையா? அவங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்பா’. இதுவெறும் அழகு நிலையம், நீராவிக்குளியல், மசாஜ் மட்டும் கிடையாது. ஆயுர்வேத, அரோமாதெரபி சிகிச்சையோட நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்னு பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைச்சு மனசையும், உடலையும் சுத்தப்படுத்தறதுதான் ‘ஸ்பா’.

ஒவ்வொருவரும் உணவை எப்படி பிரிச்சு சாப்பிடனும்னு ஒரு வரைமுறை இருக்கு. அதன்படி செஞ்சா, உடலும் மனசும் ஆரோக்கியமா இருக்கும்.

மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

ஒரு முறை சாப்பிட்டதும், அந்த உணவு நல்லா செரிமானம் ஆன பிறகுதான் அடுத்த வேலைக்கான உணவை எடுத்துக்கனும்.

புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்.

உப்பு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏன்னா, கொழுப்புள்ள உணவை சாப்பிடனும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுவது உப்புதான்.

கார்போஹைட்ரேட் அதிகமிருக்கிற அரிசி உணவை குறைச்சலா சாப்பிடவும்.

பச்சைக் காய்கறிகளை தினமும் மூனு வேலையும் சாப்பிடறது நல்லது. நான்கைந்து பழங்களை ஒண்ணா சேர்த்து
சாப்பிடக் கூடாது.

உணவுக்கு அரை மணிநேரம் முன்னாடி பழம் சாப்பிடலாம். அல்லது உணவு சாப்பிட்ட 2 மணி நேரங்கள் கழிச்சு பழங்களை சாப்பிடலாம். ‘ஸ்பா’ எடுத்துக் கொள்ள பர்ஸ் தடுத்தாலும் இந்த வழிமுறைகளை உணவில் பின்பற்றலாமே?