Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

29.10.13

சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு-(SINUS PIRACHANAIKU ENNA THEERVU)

சைனஸ் பிரச்சினைக்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள் தான் காரணம். இந்த வைரஸ் தாக்குதல் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது. இதற்கு அடுத்தபடியாக நமது தவறான உணவுப் பழக்கம், உணவு மூலமாகவும் வைரஸ் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்கி விடுகிறது...

ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று. அதன்பிறகும் ஜலதோஷம் குணமாகவில்லை என்றால் `சைனஸ்' கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காது மூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-

ஜலதோஷத்தின் தொடர்ச்சியான அவதாரமாகத்தான் சைனஸ் திகழ்கிறது. ஜலதோஷத்தால் உருவாகும் சளி சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது.

அறிகுறிகள்.....

சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது. மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். வலது - இடது என்று மொத்தம் 4 ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

நெற்றி பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்கு சற்று கீழே `எத்மாய்டு' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன. முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்ஸிலரி சைனஸ் அறைகள். மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறு துணையாக நிற்பது இந்த சைனஸ் அறைகள்தான். நாம் எழுப்பும் சத்தத்துக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக