வெள்ளரி விதை மிக்ஸர்
ஒரு வாணலியில் வெள்ளரி விதையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுக்க வேண்டும். நன்கு பொறியும் சத்தம் கேட்டதும் இறக்கி ஒரு தட்டில் விட வேண்டும். அதே வாணலியில் சிறிது செக்கு நல்லெண்ணெய் சேர்த்து இடிக்கல்லில் இடித்த பூண்டு, சிறிது வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு சிறிது பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இதோடு வறுத்த வெள்ளரி விதையை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
வெள்ளரி விதை பலன்கள்:
நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும். புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.