"வாா்ப்பு இரும்பு / Cast Iron"
வாா்ப்பு இரும்பு சமையல் பாத்திரங்கள் பழமையான பாத்திரங்களில் ஒன்றாகும்.
நன்மைகள்:
* வாா்ப்பு இரும்புப் பாத்திரங்களில் உணவை சமைத்தால் நமக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும்.
* இது உணவை ஒரே மாதிரியாகச் சமைக்கும் வகையில் நல்ல வெப்பக் கடத்தியாக இருக்கின்றது.
* அதோடு வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் போது, ஒரு மிகச்சிறிய அளவிலான இரும்பு உணவோடு கலக்கிறது.
* வாா்ப்பு இரும்பில் செய்யப்பட்ட பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அவை நமக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
* இயற்கையாகவே ரசாயனங்கள் இல்லாமல் ஒட்டாமல் இருக்கும்.
பராமரிக்கும் முறை:
வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை கழுவிய பிறகு ஒரு துணியால் துடைத்தால் போதும். அதோடு வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தடவி வைக்க வேண்டும். ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களை வைக்கக்கூடாது. வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் உணவை சமைத்தால், சமைத்தவுடன் உணவை வேறு பாத்திரங்களுக்கு மாற்றிவிட வேண்டும். ஏனெனில் வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் இரும்பு முலாம் உள்ளதால், அவை எளிதில் எதிா்வினை ஆற்றும். அதனால் சமைத்த உணவுகளை வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைக்கக்கூடாது.
எவற்றை எல்லாம் இதில் சமைக்க கூடாது:
வாா்ப்பு இரும்பு பாத்திரங்களில் புளிப்பான உணவுகளை சமைக்கக்கூடாது. எலுமிச்சை, பனீர், தக்காளி சாஸ் அல்லது வினிகர் போன்ற அமில உணவு தயாரிப்புகளை இரும்பு பாத்திரங்களில் சமைக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக