காஞ்சிபுரம் இட்லி:
பச்சை அரிசி 1 டம்ளர்
இட்லி அரிசி 1டம்ளர்
உளுந்து 1டம்ளர்
எல்லாவற்றையும் ஊற வைத்து உளுந்து முதலில் அரைத்து பிறகு அரிசியை அரைத்து உப்பு போட்டு கரைத்து புளிக்க விடவும்....
பிறகு வாணலியில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 11/2சீரகம், 11/2மிளகு, தேவையான அளவு முந்திரி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது போட்டு வதக்கவும்... அதில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு தாளித்து வைக்கவும்...
பிறகு மாவில் 1/2டம்ளர் தயிர் நன்கு கலந்து விடவும்... பிறகு மாவில் 3ஸ்பூன் சுக்கு பொடி போட்டு அதன் மேல் வதக்கி வைத்த கலவை கலந்து வைக்கவும்..
பிறகு தேவையான கப் அல்லது டம்ளரில் கொஞ்சம் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இட்லி பானையில் வேக வைத்து பரிமாறவும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக