Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

5.10.22

பசியின்மை குறைய‌

 பசியின்மை குறைய‌ 

கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.

வால் மிளகு

வெள்ளை மிளகு

மிளகு


அறிகுறிகள்:

உள்காய்ச்சல்.

பசியின்மை.

ருசியின்மை.


தேவையான பொருள்கள்:


வெள்ளை மிளகு = 50 கிராம்

கடுகு = 25 கிராம்

வால் மிளகு = 100 கிராம்

சீரகம் = 25 கிராம்

மிளகு = 150 கிராம்

செய்முறை:


வெள்ளை மிளகையும், வால் மிளகையும் மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

கடுகை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீரை விட்டு கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து 50 மி.லி நெய்யை விட்டு வெடிக்க விட்டு எடுத்து கொள்ளவும்.

சீரகத்தை மண் பாத்திரத்தில் போட்டு இளஞ்சூடாக்கி கொள்ளவும். மிளகை மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

எல்லாவற்றையும் உரலில் போட்டு நன்கு இடித்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த சூரணத்தை தேவைக்கேற்ப எடுத்து சுடு சோற்றில் கலந்து சாப்பிட்டு வரவும். ஒரு நாளைக்கு ஒரு முறையாக 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக