Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

9.11.13

கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்-(KANGALUKU SILLA ATHAYAVASIYAM)


யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். 

கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்:
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்....

கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2.
 கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.

3.
 கண் மசாஜ்: 
வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்: 
குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

முழு முக மசாஜ்: 
சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.

கண்ணிமை மசாஜ்: 
கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.
4. மெதுவாக இரண்டு கைகளால் மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள் அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5.
 அமைதியாக உட்கார்ந்து, கண்களை இடதுபுறமாகவும் பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும். 
6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.
7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.
8. எதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.
9. தலையை அசக்காமல் மேலும் கீழுமாக பார்க்கவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10.
 எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

எளிதாக, 

தினம் அலுவலகத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஓவ்வொறு செயலாக்கத்திற்கும் சில நொடிகள் பிடிக்கும், அப்போது உங்கள் கண்களுக்கு மேல குறிப்பிட்டுள்ள பயிற்சிகளையோ அல்லது தூரத்தில் உள்ள விஷயங்களை நோக்கி பார்க்கவும்.


சப்போட்டா மருத்துவக் குணங்கள்.-(SAPPOTTA MARUTHUVA GUNANGAL)





மருத்துவக் குணங்கள்:.
  1. வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’  என்றும் கூறப்படுகிறது.
  2. தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’. சப்போட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு,  ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு.
  3. இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பரப்பளவில் சப்போட்டா பயிரிடப்படுகிறது.
  4. நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.
  5. சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.
  6. இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப  பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
  7. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
  8. சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.
  9. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
  10. ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.
  11. மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.
  12. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.
  13. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும்.
  14. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது.
  15. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
  16. சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.
  17. சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

மருந்தாகும் மருதாணி-(MARUNTHAGUM MARUTHANI).


Country Medicine : Henna - Food Habits and Nutrition Guide in Tamil
  • மருதாணி இந்தியா முழுவதும் வளரக்கூடியது. இது பெருஞ்செடி அல்லது சிறு மரப்பிரிவைச் சேர்ந்த தாவரம். மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் பூசலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில் தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும். 
  • புண், நகப்புண், சுளுக்கு இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். அம்மை நோய் ஏற்படும் போது கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க மருதாணி இலையை அரைத்து இரு காலடிகளிலும் வைத்துக்கட்டலாம். நகங்களில் தடவினால் நகம் சிவக்கும். .
  • ஆறு கிராம் எடை கொண்ட இலையை எடுத்து ஒரு பூண்டும், மிளகு ஐந்தும் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உப்பில்லாமல் சாப்பிட்டு வந்தால் வெண் புள்ளிகள் நீங்கும். 
  • மருதாணி இலையை வெந்நீரில் ஓர் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் இறுத்து இருபது நாட்கள் வரை காலையில் மட்டும் குடித்து வர சொறி, படைகள் நீங்கும். 
  • மருதாணி இலையை அரைத்து ஒரு கரண்டி சாறு எடுத்து 90 மில்லி பாலுடன் கலந்து கொடுக்க கை கால் வலி நீங்கும். இதன் பூவை இரவில் தூங்கும் போது தலையணையின் கீழ் வைத்து தூங்கினால், நல்ல உறக்கம் வரும். வெப்பம் குறையும். விதைகளின் ஊறல் கஷாயத்தை தலைவலிக்கு ஒத்தடம் கொடுக்க குணமாகும். 
  • இலைகளை அரைத்துப் பூசினால் தலைவலி நீங்கும். இதன் விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தேய்த்தால் எரிச்சல் குறைந்து குளிர்ச்சி கிடைக்கும். இதுவாத நோய்களை குணமாக்குகிறது.

பேரிச்சம்பழம் சாப்பிட.-(Dates)


Food Habits : Dates boiled in milk is good for health - Food Habits and Nutrition Guide in Tamil
* தினமும் இரவில் பேரிச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிடுங்கள். அல்லது கொய்யாப்பழம் சாப்பிட்டு பால் அருந்துங்கள். மலச்சிக்கல் உடனே தீரும்.-
* பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சருமத்தில் பளபளப்பும் கண் பார்வையில் தெளிவும் உண்டாகும்.
* தட்டைப் பயறு வேக வைத்த நீரை சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான அனைத்து வியாதிகளும் குணமாகும்.
* வெள்ளாட்டுப் பாலுடன் மணத்தக்காளிக்கீரையை அரைத்து கலந்து 4 தினங்கள் சாப்பிட்டால் அல்சர் சம்பந்தமான வயிற்றுவலி வராது.
* சிவந்த மாவிலைத் தளிர்களை பச்சையாகச் சாப்பிட குரல் இனிமை பெறும்.

பொங்கல் ஸ்பெஷல்: கரும்பின் பயன்பாடுகள் என்னென்ன?-(Pongal Special)

Pongal Special: Sugar cane in Siddha Medicine and its uses - Food Habits and Nutrition Guide in Tamil
'கரும்பு' தாவரவியலுள் இது ஒரு வகையான புல் எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் 'புல்' எனக் கூறுகிறது. 
தொன்றுதொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கரும்பு, அதியமானின் முன்னோரால் அவர் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று ஒளவையார் கூறுவர். உலகிற்கு சுவையான சர்க்கரை கரும்புச் சாறிலிருந்து பெறப்படுகின்றது. கரும்புக்குப் பிற்காலத்தில் வேழம், கன்னல், கழை எனவும் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. கரும்புக்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால் நீர்ப்பிடிப்பான வயல்களில் பயிரிடப்படுகிறது. இதில் பல கணுக்கள் காணப்படும். கரும்பின் பிறப்பினையும், அதன் மகத்துவத்தையும் கீழே காண்போம்.
சங்க இலக்கியப் பெயராக இவை 'கரும்பு' என்றே அழைக்கப்படுகின்றது. அந்தரத்து பெறுதற்குறிய "அமிர்தம் போன்ற கரும்பை இங்கு தந்தவனுடைய வழித்தோன்றலே" என்று பாடல் தொடங்குவதை சுட்டிக்காட்டி கரும்பு தொன்று தொட்டு தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இது முதன் முதலாக தென் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக்கூடும் என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர்.
மெல்லிய வெண்மை நிறமான மணமற்ற இதன் பூக்களை ஆண் குருவி தனது இணையின் எதிர்கால நலனுக்கு, கூடு கட்டும் பொருட்டு எடுத்துச் செல்லும் எனவும் பாடியுள்ளனர் புலவர்கள்.
இனிய சுவைச்சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை கொண்ட இத்தாவரம் இந்தியாவிலும், சீனாவிலும் பயிரிடப்படுகிறது.
கரும்பிலிருந்து சாறு பிழிந்து எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகவும் விளங்குவதாக இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனர்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்புச் சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
கரும்புச்சாறு:
இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
செங்கரும்பின் சாறு:
இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
நல்ல வெல்லம்:
இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
பழுப்புச் சர்க்கரை:
கரும்பின் சாற்றைக் காய்ச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்றத் தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
சீனிச் சர்க்கரை:
இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
கற்கண்டு:
சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
சாறு:
மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
சர்க்கரை:
சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது. ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது.
மஞ்சள் பெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது. கண்களில் தூசு, வலி, இரணம், நோய் ஆகியவற்றிற்கு சர்க்கரை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்­ர் சேர்த்து கரைத்து ஒரு மணி நேரத்துக்கு 2 சொட்டு கண்களில் விட்டுவந்தால் நோயின் தாக்கம் குறையும்.
மேலும் இவற்றிற்கு, இரவில் கண் இமைகளுக்கு சிற்றாமணக்கு நெய், ஓரங்களில் தேய்த்து, கண் இமை ஒட்டிக் கொள்ளாதபடி செய்வதுடன், காலையில் வெதுவெதுப்பான பாலும், நீரும் சேர்த்து கண்களைக் கழுவி வரவேண்டும்.
நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையைப் போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
சர்க்கரையானது நாற்றத்தை விலக்குகிறது. அழுகுவதைத் தடுக்கிறது. அதிகளவில் உட்கொண்டால் உடல் மென்மைப்படும். சிவப்புச் சர்க்கரை இலேசான வயிற்றுப் போக்கை உண்டாக்கும். வயிற்றுக்குச் சக்தியை அளிக்கும். வேக்காட்டை உண்டாக்கும். காயங்களில் தூவினால் அவை குளிர்ச்சியடைகின்றன. அழுக்கைப் போக்கும். எளிதில் செரிமானமாகாது.
மருந்து, லேகியங்களில் பூசணம் பூத்து விடமாலிருக்கவும், அதன் சுவை கெடாமல் இருக்கவும், சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்துவர். லேகியங்கள், முரப்பாக்கள், சர்பத்துக்கள் இவை சர்க்கரைப்பாகு கொண்டுத் தயாரிக்கப்படுகின்றன.
ஊறவைத்த மருந்துகளில் சர்க்கரையைக் கலந்து இன்சுவையுண்டாக்கிப் பருகக் கொடுப்பர். எளிய மலபந்தத்தை நீக்க சிவப்புச் சர்க்கரையைப் பாலில் கலந்து பருக வைப்பர். உணவு செரிமானமாக, உணவு உண்ட பிறகு சிறிதளவு சர்க்கரையை உண்பர். சாக்கரையை உணவில் அதிகம் பயன்படுத்தினால் சோம்பல் ஏற்படும். பருமனானவர்க்கு அதிக இரத்த உற்பத்தியில் உடல் சிவக்கும்.
காடி:
கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். இதற்கு முன்பு பேதிக்கு கொடுத்து அதன்பின் கையாள்வது நல்லது.
தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம்.
ஆண், பெண் இணைப்பால் இரவில் உண்டாகும் மிகு வியர்வைக்கு கருப்பங்காடியை ஒரு பங்கு அளவும், நீர் இரண்டு பங்கு அளவும் கலந்து மார்பில் பூசி வந்தால் வியர்வை குறையும்.
வேர்:
கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
கரும்பை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத் தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும்.
இதனைச் செய்ய ஒரு பலம் செம்புத் தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.