Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

10.7.22

பொடுகை விரட்ட-(PODUGAI VIRATTA)

காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

இருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து இருக்கு - IRUMAL JALATHOSAM NEENGA IYARKAI MARUNTHU

       குளிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டில் உள்ள சமையலறை பொருட்கள் மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாமே.. பணமும் மிச்சம், நோயும் குணமாகிவிடும். சளி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் நீங்களே மருந்து தயாரித்து சாப்பிடலாம். வீட்டிலே என்னனென மருந்துகள் தயாரிக்கலாம் என பார்க்கலாமா.     



இஞ்சி வேர் 
         இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறு தொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம் நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போல தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்க விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒரு நாட்களுக்கு மூன்று வேளை இந்த தேநீரை பருகினால் தொண்டை வலி எளிதில் குணமாகும். 

யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில்

         ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கில் சளி வடிதல் பெரிய பிரச்சனையாக இருக்கும் இந்த பிரச்சனையை போக்க யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில் பயன்படுத்தலாம்.. எப்படி பயன்படுத்தலாம் யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயிலை நன்கு கொதிக்கும் சூடான நீரில் ஐந்து முதல் ஆறு சொட்டுகள் சேர்த்து போர்வையால் ஆவி வெளியே போகாதவாறு மூடிக்கொண்டுஆவி பிடிக்க வேண்டும். இதை மூன்று வேளை செய்தால் தலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் ஆவி வழியாக வெளியாகிவிடும் சளி பிரச்சனை நீங்கிவிடும்...

எல்டர் ஃப்ளவர் தேநீர்

       தேநீர் பருகியும் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம். அதாவது எல்டர்ஃப்ளவரில் தயாரிக்கப்படும் தேநீர் ஜலதோஷத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எல்டர்ஃப்ளவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது நேர்மறையான பண்புகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 
        இதை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எல்டர்ஃப்ளவர் பூக்களை காய வைத்து சூடு நீரில் கொதிக்க வைத்து ஒரு கப் பூக்களை போட்டு தேயிலை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி பருகலாம் விருமம்பினால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்..

உடல் நலத்தை பாதுகாக்க வீட்டிலே இருக்குது பல மருந்துகள் அதனை தகுந்தவாறு பயன்படுத்தி நோய்களை போக்கலாம். பணத்தையும் சேகரிக்கலாம். இயற்கை மருத்துவத்தை விட சிறந்தது வேறெதுவும் இல்லை.

பாட்டி வைத்தியம்-(PATTI VAITHIYAM)


1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.


3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும். 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும். முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும். தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

முருங்கை கீரை ராகி பக்கோடா -(DRUMSTICK LEAVES PAKKODA)


முருங்கை கீரை ராகி பக்கோடா 

செய்முறை :

ராகி மாவு1cup

அரிசி மாவு 2tsp

இஞ்சி பூண்டு  விழுது

மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் உப்பு தேவையான  அளவு,பொட்டுக்கடலை, முருங்கைகீரை

வெங்காயம், ப.மிளகாய் கொத்துமல்லி  கறிவேப்பிலை

இவை அனைத்தும் கலந்து பூ போல பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஏண்ணெயில் பொரித்துஎடுக்கவும்

கறிவேப்பிலை பொரித்து அலங்கரித்து பரிமாறவும்.

27.6.22

4-6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த திட உணவுகள்!-(4-6 MADHA KUZHANTHAIKU KODUKA VENDIYA UNAVUKAL)

தானியங்கள்:
 அரிசி மற்றும் ஓட்ஸ் தானியங்கள் தான் அலர்ஜி ஏற்படும் இடர்பாடு குறைவாக உள்ள தானியங்களாகும். அதனால் பல குழந்தைகளுக்கு இதிலிருந்து தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு வேளை தானியங்கள் வேண்டாம் என்றால் அவகேடோ அல்லது வாழைப்பழத்தில் இருந்து தொடங்குங்கள். 


பழங்கள்:
     8 மாதங்கள் முடிவடைந்தவுடன் பழங்களை அப்படியே கொடுக்கலாம். ஒரு வேளை, மென்மையான பழங்களாக இருந்து, குழந்தைக்கு செரிமான பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருந்தால் 8 மாதத்திற்கு முன்பே கூட இதனை கொடுக்கலாம். வாழைப்பழம் அல்லது அவகேடோ என்றால் எப்போதுமே வேக வைக்க வேண்டாம்.

காய்கறிகள்:
 குழந்தைக்கு 12 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது மெல்ல தொடங்கும் போது, காய்கறிகளை எப்போதுமே வேக வைத்தே கொடுங்கள். இதனால் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படாது.

புரதம்:
 சரியாக வேகாத உணவுகளை கொடுக்காதீர்கள் - உதாரணத்திற்கு சரியாக வேகாத கோழி, ஆடு அல்லது மீனை குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.

பால் பொருட்கள்:
 குழந்தைக்கு 12 மாதங்கள் முடியும் வரை தாய்ப்பாலுக்கு பதில் வேறு ஏதும் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு குறைந்த கொழுப்பு அல்லது ஆடை நீக்கிய பால் பொருட்களை கொடுக்காதீர்கள். முழுமையான பால் தேவையானது. 

ஒரு நாளைக்கு:
 எவ்வளவு மசித்த உணவு அல்லது தானியங்களை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் கொடுத்து ஆரம்பியுங்கள். அந்த தானியங்களுடன் 4-5 டீஸ்பூன் தாய்ப்பாலை சேர்த்திடவும். இந்த 1 டீஸ்பூன் மசித்த உணவை அல்லது தாய்ப்பால் கலக்கப்பட்ட 1 டீஸ்பூன் தானியத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என உயர்த்திடுங்கள். தானியங்கள் கொடுத்தால் நாளடைவில் அது கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.