Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

3.11.15

டெங்கு, சிக்கன் குனியா, பறவை காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்துகள்-(DENGU,CHICKEN KUNIYA KAAICHALAI THADUKA SIDDA MARUNTHU)


டெங்கு, சிக்கன் குனியா, பறவை காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்துகள்
 தமிழக அரசு மூலம் டெங்குவை குணப்படுத்தும் சித்த மருந்துகள் அருமையாக செயல்படுகிறது
 நிலவேம்பு குடிநீர் எல்லா சுர நோயாளி களும் அருந்தலாம் அளவு 60 மி.லி இரண்டு முதல் நான்கு வேளை நோய் தீவிரம் தகுந்தார் போல .
சுரம் வராமலும் இருக்க இதே நில வேம்பு குடிநீர் அருந்தலாம் ஒரு வேளை மட்டும்
 பப்பாளி இலை சாறு டெங்கு நோய் நிலையில் ஏற்படும் பிலேட்லெட் (platelet) எண்ணிக்கையை வெகு விரைவில் அதிகரிக்க செய்கிறது அளவு 10 மி.லி நான்கு வேளை
 இவை பல நோயாளிகளை குணமடைய செய்தது
 இத்துடன் மலைவேம்பு சாறும் 10 மி.லி எடுக்கவும் கிடைக்கவில்லை எனில் மற்ற இரண்டும் பயன்படுத்தலாம்
 இவற்றுடன் தண்ணீர் அதிகம் எடுத்து கொள்வது மிக மிக அவசியம்
 இவ்வாறே டெங்குவை சித்த மருந்துகள் கட்டு படுத்துகிறது குணமாக்குகிறது

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்-(KARUVEPPILAI DINAMUM SAPIDUVATHAL YERPADUM NANMAIGAL)



தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.


ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


அதிலும் இதனை தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகளெல்லாம் பெறலாம் என்று தெரியுமா? இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


கொழுப்புக்கள் கரையும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.


இரத்த சோகை இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.


சர்க்கரை நோய் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய் கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.


செரிமானம் நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான ிரச்சனைகள் நீங்கிவிடும்.


முடி வளர்ச்சி கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.


சளித் தேக்கம் சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

ம‌ஞ்ச‌ள் காமாலை -(MANJAL KAAMALAI ENDRAL ENNA)



ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்றா‌ல் பா‌ர்‌த்தது‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள‌க் கூடிய நோ‌ய் எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். க‌ண்க‌ள், நக‌ம் போ‌ன்றவை ம‌ஞ்ச‌ள் ‌நிறமாவது‌ம், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிறமாக இரு‌ப்பது‌ம் இத‌ற்கான அ‌றிகு‌றிக‌ள்.



மு‌க்‌கியமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்பது ஒரு நோ‌யே அ‌ல்‌ல. ஏதோ ஒரு நோ‌யி‌ன் அ‌றிகு‌றி. ஒருவரு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல், எ‌ந்த காரண‌த்‌தினா‌ல் அவரு‌க்கு ம‌‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்பதை முத‌லி‌ல் ஆரா‌ய்‌ந்து, அத‌ற்கு உ‌ரிய ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.



ம‌ஞ்ச‌ள் காமாலை‌யி‌ல் 6 வகை உ‌ள்ளது. அதாவது 6 வகை ‌கிரு‌மிகளா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம். ஹெ‌பிடைடி‌ஸ் ஏ முத‌ல் ‌பி,‌சி,டி,இ, ‌‌ஜி வரை 6 வகைக‌ள் உ‌ள்ளன.



மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்காம‌ல், வெறு‌ம் ப‌த்‌தியமு‌ம், ‌கீழாநெ‌ல்‌லியு‌ம் சா‌ப்‌பிடுவது ம‌ஞ்ச‌ள் காமாலையை குணமா‌க்காது.



அதே‌ப்போ‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் எ‌ன்றா‌ல் எ‌ப்படி வரு‌கிறது எ‌ன்பதையு‌ம் அ‌றிய வ‌ே‌ண்டு‌ம்.

உட‌லி‌ல் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் அ‌ழி‌ந்து அவை பிலிரூபின் (
Spleen)
என்ற நிறப்பொருளாக உடலில் உற்பத்தி ஆகிறது. ரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது.








webdunia photo
WD
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.



ஒருவருக்கு `மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.



கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.



மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌டைபாய்டு போ‌‌ன்ற கா‌ய்‌ச்சலை ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம்.



கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக் குழாயில் கல் மற்றும் கேன்சர் (
Cancer)
கட்டிகளா‌ல் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.



கல்லீரலை தாக்கும்
A,B,C,D,E,G
என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை ஏ‌ற்படலா‌ம். இதனை அடை‌ப்‌பி‌ல்லா காமாலை எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம் உ‌ரிய ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். வெறு‌ம் ‌கீழாநெ‌ல்‌லியு‌ம், ‌ப‌த்‌‌தியமு‌ம் போதாது.



அடை‌ப்பு காமாலை‌க்கு ‌சி‌றிய அள‌வி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌‌ய்வது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. இதை‌த் த‌விர இத‌ற்கு ‌நிர‌ந்தர ‌சி‌கி‌ச்சை வேறு எது‌வு‌மி‌ல்லை.



எனவே, ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெறு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ம‌ற்று‌ம் ர‌த்த‌த்தை ப‌ரிசோ‌தி‌ப்பதுட‌ன், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை அதாவது க‌ல்‌லீரலை ‌ஸ்கே‌ன் செ‌ய்வது‌ம் அவ‌சியமா‌கிறது. அ‌ப்போதுதா‌ன் அடை‌ப்பு‌க் காமாலையை அடையாள‌ம் காண இயலு‌ம்.



இ‌ல்லையெ‌னி‌ல், ம‌ஞ்ச‌ள் காமாலை‌க்கு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து குணமடை‌ந்த ‌பிறகு ‌சில மாத‌ங்க‌ள் க‌‌ழி‌த்து க‌ல்‌லீர‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌வது ‌நி‌ச்சய‌ம். அ‌ப்போது அத‌ற்கு த‌னியாக ஒரு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌ம்

21.7.15

மாதவிலக்கு வலி குறைய இய‌ற்கை வைத்தியம் -(PERIODS VAZHI KURAYA IYARKKAI MARUTHUVAM)




நண்பர்கள் இந்த தகவலை முடிந்த அளவுக்கு ஷேர் செய்யுங்கள் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .
முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்
* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
 * முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
 * உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
 * கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....ஹெல்த் ஸ்பெஷல்
 மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போய்விடுவார்கள் அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, பாட்டி சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா... எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.
வெள்ளைப்படுதல் சரியாக:
ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.
வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.
தாமதமான மாதவிடாய்க்கு:
சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும்.
மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.
சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.
கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:
மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு தீரும்.
ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா.... மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.
கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.
தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.
இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

18.7.15

பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!-(15 NAATKALIL VELLAIYAGA SILA VAZHIGAL)



சுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் அதிகம். அதுமட்டுமின்றி, சருமமும் கருமையாகிக் கொண்டே போகிறது.


பொதுவாக வெள்ளையான சருமத்தின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். நாமும் நடிகர் நடிகைகளைப் போல் வெள்ளையாக வேண்டுமென்று, கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அந்த க்ரீம்களை பயன்படுத்துவதாலும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் தான் நடிகர் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க முடிவதில்லை.
எனவே நீங்கள் உங்கள் சருமத்தினை ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் பராமரிக்க இயற்கை வழிகளைப் பின்பற்றுவது தான் சிறந்த வழி. அதிலும் கீழே கொடுத்துள்ளவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நிறத்தையும் அதிகரிக்கலாம்.


முட்டை ஃபேஸ் பேக்
 எமுட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சூரிய வெளிச்சம் படும் இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.


தக்காளி
 தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக் மூலம் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது.
கடலை மாவு, தேன் மற்றும் மஞ்சள் தூள்
 இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, முகம், கழுத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.


மைசூர் பருப்பு
 மைசூர் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை ஒன்றாக அரைத்து பொடி செய்து, அதில் சிறிது முல்தானி மெட்டி, மஞ்சள் தூள், பப்பாளி கூழ் சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வர, நல்ல பலன் கிடைக்கும்.


உருளைக்கிழங்கு
 உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் முகம் மற்றும் கருமையாக உள்ள இடத்தில் தடவி, உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமம் பொலிவோடும், ஆரோக்கியமாகவும் காணப்படும்


சீரகம்
1 டீஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரால் தொடர்ந்து 15 நாட்கள் முகத்தை கழுவி வந்தால், சருமத்தின் நிறத்தில் மாற்றத்தைக் காண முடியும்.








கேரட் மற்றம் அவகேடோ
 கேரட், அவகேடோவை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, முகம், கழுத்தி, கை மற்றும் கால்களில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும ஆரோக்கியம் மட்டுமின்றி நிறமும் மேம்படும்.
ை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, முகம், கழுத்தி, கை மற்றும் கால்களில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும ஆரோக்கியம் மட்டுமின்றி நிறமும் மேம்படும்.