Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
ம‌ஞ்ச‌ள் காமாலை-MANJAL KAAMALAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ம‌ஞ்ச‌ள் காமாலை-MANJAL KAAMALAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.9.22

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்-(KEELA NELLI MARUTHUVA PAYANGAL)

 கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்


1.கீழாநெல்லியின் இலைகளில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று.

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.

கீழாநெல்லி உடன் ஆட்டு பால் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.


3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

5.கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.

6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்

29.7.22

நெஞ்சு படப்படப்பு நீங்க_(NENJU PADAPADAPPU NEENGA TIPS)

 நெஞ்சு படப்படப்பு நீங்க

துளசி – 100 கிராம்

ஆடாதொடை – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

சுக்கு – 50 கிராம்

ஏலக்காய் – 20 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

இவைகளை ஒன்றாக்கி தூள் செய்து காலை உணவுக்குப்பினும், மாலை 6 மணிக்கும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு (5 கிராம்) தேனுடன் கலந்து சாப்பிட்டு வர… நெஞ்சு வலி, படப்படப்பு, மயக்கம், அதிக ரத்த அழுத்தம் ஆகியவை தீரும்.

27.9.21

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்-(KEELANELLIUN MARUTHUVA GUNANGAL)


நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய  மூலிகைகள்  உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.

இதற்கு  கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.

கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்' என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. இலைகளுக்குக் கீழே நெல்லிக்காயின் சிறிய வடிவமாக இதன் காய்கள் இருப்பதால்தான் இதை 'கீழாநெல்லி' என்று அழைக்கிறார்கள். இதேபோன்று இலைகளுக்கு மேலே காய் காணப்படும் மற்றொரு மூலிகைக்குப் பெயர் மேலாநெல்லி. இதுவும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன். மேலும், கீழாநெல்லியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்:

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.

இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி  உண்டு.

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.

சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்

உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்  கரைக்கும்.

ரத்தசோகையைச் சரிசெய்யும் .

கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:

மஞ்சள் காமாலை

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

சர்க்கரை நோய்

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்

கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.

வயிற்றுப்புண்

1 டம்ளர் மோரில்,  கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.

தலைவலி

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.

சொறி, சிரங்கு

கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.

வெள்ளைப்படுதல்

கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.

சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!

என்று கீழாநெல்லியின் மகத்துவத்தை அகத்தியர் குணபாடம் விவரிக்கின்றது. இயற்கை, நோய்களைப் போக்கும் அதிஅற்புதமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை நமக்களித்த மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தி, நோய், நொடி இல்லாமல் வாழ்வோம்.

2.3.16

கல்லீரல் பாதிப்பா? இதோ பாதுகாக்கும் உணவுகள்-(KALLERAL I PAATHUKAKKUM UNAVUGAL)


Image result for liver image

உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம்.

 ஆப்பிள் சீடர் வினிகர் -
ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம்.
தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.


நெல்லிக்காய்:


வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.
அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.


அதிமதுரம்
சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம்.
இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும்.
ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம்.
தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

நெல்லிக்காய்:
வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.
அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.


3.11.15

ம‌ஞ்ச‌ள் காமாலை -(MANJAL KAAMALAI ENDRAL ENNA)



ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்றா‌ல் பா‌ர்‌த்தது‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள‌க் கூடிய நோ‌ய் எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். க‌ண்க‌ள், நக‌ம் போ‌ன்றவை ம‌ஞ்ச‌ள் ‌நிறமாவது‌ம், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிறமாக இரு‌ப்பது‌ம் இத‌ற்கான அ‌றிகு‌றிக‌ள்.



மு‌க்‌கியமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்பது ஒரு நோ‌யே அ‌ல்‌ல. ஏதோ ஒரு நோ‌யி‌ன் அ‌றிகு‌றி. ஒருவரு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல், எ‌ந்த காரண‌த்‌தினா‌ல் அவரு‌க்கு ம‌‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்பதை முத‌லி‌ல் ஆரா‌ய்‌ந்து, அத‌ற்கு உ‌ரிய ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.



ம‌ஞ்ச‌ள் காமாலை‌யி‌ல் 6 வகை உ‌ள்ளது. அதாவது 6 வகை ‌கிரு‌மிகளா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம். ஹெ‌பிடைடி‌ஸ் ஏ முத‌ல் ‌பி,‌சி,டி,இ, ‌‌ஜி வரை 6 வகைக‌ள் உ‌ள்ளன.



மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்காம‌ல், வெறு‌ம் ப‌த்‌தியமு‌ம், ‌கீழாநெ‌ல்‌லியு‌ம் சா‌ப்‌பிடுவது ம‌ஞ்ச‌ள் காமாலையை குணமா‌க்காது.



அதே‌ப்போ‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் எ‌ன்றா‌ல் எ‌ப்படி வரு‌கிறது எ‌ன்பதையு‌ம் அ‌றிய வ‌ே‌ண்டு‌ம்.

உட‌லி‌ல் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் அ‌ழி‌ந்து அவை பிலிரூபின் (
Spleen)
என்ற நிறப்பொருளாக உடலில் உற்பத்தி ஆகிறது. ரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது.








webdunia photo
WD
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.



ஒருவருக்கு `மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.



கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.



மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌டைபாய்டு போ‌‌ன்ற கா‌ய்‌ச்சலை ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம்.



கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக் குழாயில் கல் மற்றும் கேன்சர் (
Cancer)
கட்டிகளா‌ல் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.



கல்லீரலை தாக்கும்
A,B,C,D,E,G
என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை ஏ‌ற்படலா‌ம். இதனை அடை‌ப்‌பி‌ல்லா காமாலை எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம் உ‌ரிய ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். வெறு‌ம் ‌கீழாநெ‌ல்‌லியு‌ம், ‌ப‌த்‌‌தியமு‌ம் போதாது.



அடை‌ப்பு காமாலை‌க்கு ‌சி‌றிய அள‌வி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌‌ய்வது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. இதை‌த் த‌விர இத‌ற்கு ‌நிர‌ந்தர ‌சி‌கி‌ச்சை வேறு எது‌வு‌மி‌ல்லை.



எனவே, ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெறு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ம‌ற்று‌ம் ர‌த்த‌த்தை ப‌ரிசோ‌தி‌ப்பதுட‌ன், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை அதாவது க‌ல்‌லீரலை ‌ஸ்கே‌ன் செ‌ய்வது‌ம் அவ‌சியமா‌கிறது. அ‌ப்போதுதா‌ன் அடை‌ப்பு‌க் காமாலையை அடையாள‌ம் காண இயலு‌ம்.



இ‌ல்லையெ‌னி‌ல், ம‌ஞ்ச‌ள் காமாலை‌க்கு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து குணமடை‌ந்த ‌பிறகு ‌சில மாத‌ங்க‌ள் க‌‌ழி‌த்து க‌ல்‌லீர‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌வது ‌நி‌ச்சய‌ம். அ‌ப்போது அத‌ற்கு த‌னியாக ஒரு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌ம்