Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

5.10.19

பேரீச்சை-(DATES USES IN TAMIL)

அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.  

4.6.17

பாரம்பரிய அரிசி வகைகள்-(PAARAMBRIYA ARISI VAGAIGAL)

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?

1. கருப்பு கவுணி அரிசி:

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி : 
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 
8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும். 
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 
10. தங்கச்சம்பா அரிசி : 
பல், இதயம் வலுவாகும். 
11. கருங்குறுவை அரிசி : 
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 
12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும். 
14. குடை வாழை அரிசி : 
குடல் சுத்தமாகும். 
15. கிச்சிலி சம்பா அரிசி : 
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 
16. நீலம் சம்பா அரிசி : 
இரத்த சோகை நீங்கும். 
17.சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 
18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும். 
19. குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும். 
20.சேலம் சன்னா அரிசி : 
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 
21. பிசினி அரிசி : 
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 
22. சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 
23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 
24. வாடன் சம்பா அரிசி : 

அமைதியான தூக்கம் வரும்.

திராட்சை ஜூஸ் நன்மைகள் -(THIRATCHAI JUICE NANMAIGAL)



         பழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். அதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸை அருந்துவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு தடுக்கப்படும். மேலும் இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

         திராட்சை ஜூஸ் உடலின் மெட்டாபலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் பல மடங்கு மெட்டாபலிசம் அதிகரிக்கும். திராட்சை ஜூஸ் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடற்பயிற்சி செய்த பின்னர், திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைய காரணமாக அமையும். திராட்சை ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். ரத்தத்தில் கழிவுகளை வெளியேற்றும்.

விஷ ஜந்துக்கள் அவசர மருத்துவம் -(VISA ZANDHUKAL AVASARA MARUTHUVAM)

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் .

கண்ணாடி விரியன்:- 
        பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- 
             வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- 
           கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.
வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- 
       ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- 
       மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- 
                    வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- 
                   தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- 
                    பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- 
       கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.


3.6.17

நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்-(NEERILIVU NOIYAI AZHIKA VENDHAYAM)


வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் அதனை எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா?
வழி-1 : வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தே நீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.
வழி – 2 : முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்
வழி- 3 : வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வழி -4 : வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
வழி -5 : குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும்.
வெந்தயத்தின் நன்மைகள் : சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உட்ல எடையை குறைக்கச் செய்யும்.
வெந்தயத்தின் நன்மைகள் : தாய்ப்பால் சுரக்க வைக்கும். புற்று நோயை தடுக்கும். உடல் சூட்டிய தணிக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.


The World Diabetes, destroy ventayattai eating 5 Ways!

Fenugreek sugar disease and benefits for amazing to have. But how it upayōkittāl full result know?
Way-1: Ventayattai water soaking up to 3 hours. Then Water Filter, that water teeth powder can tea ad. You drinking daily amazing result.
Way-2: first day ventayttai night soaking the day with empty stomach ventayattuṭaṉ soaking fruits and water to drink chetra including. Marinated ventayttai does not eating a body effect
Way-3: Ventayattai soak in with a jāril with a clean cloth, for a couple days for sprouts. This pile built ventayattai eat everyday is amazing benefits.
Way-4: dill spinach and the powder naṟukki for mashed in wheat bread, chapati or parāttāvāka eat,. Idli ma in dill idli, dosa and dill, eat good changes to see.
Way-5 low on fire ventayattai vaṟuttu powder. You Daily 1 spoon fries and cēlaṭṭiṉ dewey on to eat.
The Ventayat Benefits: the sugar prevent disease. The fat. The Uṭla.
The Ventayat Benefits: Curakka Breastfeeding. Cancer. Body taṇi cūṭṭiya. Lalima the healing.