Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

27.3.14

மருத்துவ குணம் நிறைந்த தேநீர்.-(MARUTHUVA GUNAM NIRAINTHA THEYNEER)



        தேநீர் அருந்துவது உடலுக்கு புத்துணர்ச்சி தரும் என்பது அனைவரும் அறிந்ததே. தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவதை விட மூலிகைகளால் கொண்டு தயாரிக்கப்பட்ட நேநீர் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். எனவேதான் பண்டையக் காலத்திலேயே , நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.


 பச்சைச் தேயிலை தேநீர்:
           மருத்துவ குணம் நிறைந்த பச்சைச் தேயிலை ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இது பல உடல் நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தது. உடல் எடையை கட்டுப்படுத்தும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். தீராத தலைவலியை போக்கும்.

துளசி தேநீர்:
                  துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

         டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். தீராத தலைவலியை போக்கும்.

வல்லாரை தேநீர்:
        காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தலைவலிக்கு சிறந்த மருந்தாகும்..

சீரகத் தேநீர்:
             சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் தேநீர் போல பருகி வருவது நல்லது. இது இதயத்திற்கு இதமானது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். இது ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், வாய்ப்புண் போன்றவற்றை குணமாக்கும். சரும நோய்கள் வராமல் தடுக்கும். தலைவலியை போக்கும்.

லவங்கப்பட்டை தேநீர்:
            வாசனைப் பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டையில் தயாரிக்கப்படும் மூலிகைத் தேநீர் தலைவலியைப் போக்கும். இது வலி நிவாரணியாகவும் விளங்குகிறது.

இஞ்சி தேநீர்:
             இஞ்சி சிறந்த மூலிகையாகும். இதனை நன்றாக இடித்து தண்ணீர் ஊற்றி தேநீர் தயாரிக்கலாம். தலைவலி, இருமல் போக்கும் எளிதான மூலிகைத் தேநீர் இது. அநேக வீடுகளில் இது தயாரிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக