
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.
இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.
மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.
விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.
வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது
வாதநோய்கள் குணமாகும்!
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.
வெள்ளரிக்காய் சாறு /ஜுஸ் சாப்பிடுவதுண்டா?
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.
வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.
காலரா- பேதி/வயிற்றோட்டம் குணமாகும்!
பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.
தோல் பளபளப்பாக…
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
சிறந்த சத்துணவு இது?
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.
இரத்த அழுத்தம் குறையும்!
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
பருக்கள் மறைந்துவிடும்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
உடல் எடை குறையும்!
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
முடி நன்கு வளர எளிய வழி:
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.
ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.
ஜீரணம்-ACIDITY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜீரணம்-ACIDITY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14.9.22
வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்-(VELARIKKAI MARUTHUVA GUNANGAL).
6.9.22
ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - Acidity - Jeeranam aga Eliya Maruthuvavm
ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்தியம்:-
நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால்
கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து
கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள்
கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை
பார்க்கலாம் .
விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை
, வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே
தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை
நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு
பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி (
பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால்
அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .
ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் ,
கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம்
, தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில்
வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று
கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .
தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .
சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .
27.7.22
பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-(PAKAARKAAYAI SAPIDUVATHAL KIDAIKUM NANMAIGAL)
பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா.
சுவாச கோளாறுகள் :
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
கல்லீரல் பிரச்சனைகள் :
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.நோயெதிர்ப்பு சக்தி :
பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பருக்கள் :
உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
நீரிழிவு :
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
ஆரோக்கியமான சிறுநீரகம் :
பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதய நோய் :
பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
புற்றுநோய் :
பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
எடை குறைவு :
பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால், இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்.
13.7.15
வயிற்றுக் கோளாறுகள்-(VAIRUKOLARUGAL NEENGA PUTHINA)
புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது.புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2.4.15
மோரினால் கிட்டும் நன்மைகள்-(MOORINAAL KIDAIKUM NANMAIKAL)
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். ‘இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம். இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து விட்டது.
எத்தனை வண்ணங்களில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கவல்ல மோரினால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம். கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
10. பால், மோர், பழச்சாறுகள் அளிப்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும்.
11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.
12. வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரை அப்படியே அளித்தால் சளி பிடிக்கும் என்று பயப்படும் தாய்மார்கள், சிறிய வாணலியில் தயிரை லேசாக கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து சாதத்தில் பிசைந்து கொடுத்து வரலாம்.
13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.
14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.
சருமத்திற்கு உகந்த மோர்:
1. முகத்தில் தயிர், பால் ஏடு தேய்த்து வருவது தெரியும். சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மோர் சிறந்த மருந்தாக உள்ளது.
2. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மோரில் நனைத்த துணியைக் கட்டுப் போட்டு வருவதன் மூலம் சரும பாதிப்பு விரைவில் குணமடைவதைக் காணலாம்.
3. தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குத் தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
12.1.15
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு-(VVAIVU PUDIPPU,SULUKKU)
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.
மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.
5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.
தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.
வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்..
சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.
சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.
9.1.15
வாழைப் பூவின் மருத்துவக் குணங்கள் -(VAAZHAI POOVIN SIRANTHA MARITHUVA GUNANGAL)
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.
பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர்.. வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன...
முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
மருத்துவப் பயன்கள்:
இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு:
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வயிற்றுப்புண் நீங்க:
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
மூலநோயாளிகளுக்கு:
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
வாழைப்பூ கஷாயம்:
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
நல்ல மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு
எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.
பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.
நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
30.12.14
மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்-(MILAGIN MARUTHUVA GUNANGAL)
வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.
மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
மிளகில் உள்ள சத்துக்கள்:
தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு
வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்
சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
FILEபற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .
பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
29.10.14
என்ன காரணம் ஃபுட் பாய்சன் ஏற்பட -(ENNA KARANAM FOOD POISION YERPADA)
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது..
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.
அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.
25.9.14
இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்-(VAIRU PUNN YERPADA KARANANGAL)
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது
5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.
6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது
7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.
9) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்
10) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.
11) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனை யின்றி உண்பது
மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது. `நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.
குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில் புளிப்பு நீர் ஊறல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
உணவு முறை : -
1. காபி, டீ, போன்றவைகளை அருந்தக் கூடாது.
2. மது அருந்துதல், புகை பிடித்தலை அரவே விட வேண்டும்.
3. நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.
4. உணவில் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.
5. குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்தலாம்.
6. உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7. காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.
8. எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
22.6.14
சீதாப் பழம்..! - SEETHA PALAM MARUTHUVA GUNAM
சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில்
அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும்
கொண்டது.
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய
மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும்
காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது....
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது.
நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு,
தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை
இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து
தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக
நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர்
கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை
பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக
குணமடையும்.
பேன்கள் ஒழிந்துவிடும்:
விதைகளை பொடியாக்கி
சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர
முடி மிருதுவாகும்.
முடி உதிர்வது கட்டுப்படும்:
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
பொடுகு மறையும்:
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர்
காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து
ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
உடலுக்கு உற்சாகம் ஏற்படும்:
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.
விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம்
ஏற்படும்
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை
வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல
பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்:
இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்:
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும்.
எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை
குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்
ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம்
சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல்
அதிகரிக்கும்.
சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது.
ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப்
பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப்
பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர்
வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக
இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக
விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம்
தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை
நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள்
கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை
ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில்,
இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
27.3.14
மருத்துவ குணம் நிறைந்த தேநீர்.-(MARUTHUVA GUNAM NIRAINTHA THEYNEER)
தேநீர் அருந்துவது உடலுக்கு புத்துணர்ச்சி தரும் என்பது அனைவரும் அறிந்ததே. தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவதை விட மூலிகைகளால் கொண்டு தயாரிக்கப்பட்ட நேநீர் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். எனவேதான் பண்டையக் காலத்திலேயே , நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
பச்சைச் தேயிலை தேநீர்:
மருத்துவ குணம் நிறைந்த பச்சைச் தேயிலை ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இது பல உடல் நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தது. உடல் எடையை கட்டுப்படுத்தும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். தீராத தலைவலியை போக்கும்.
துளசி தேநீர்:
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். தீராத தலைவலியை போக்கும்.
வல்லாரை தேநீர்:
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தலைவலிக்கு சிறந்த மருந்தாகும்..
சீரகத் தேநீர்:
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் தேநீர் போல பருகி வருவது நல்லது. இது இதயத்திற்கு இதமானது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். இது ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், வாய்ப்புண் போன்றவற்றை குணமாக்கும். சரும நோய்கள் வராமல் தடுக்கும். தலைவலியை போக்கும்.
லவங்கப்பட்டை தேநீர்:
வாசனைப் பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டையில் தயாரிக்கப்படும் மூலிகைத் தேநீர் தலைவலியைப் போக்கும். இது வலி நிவாரணியாகவும் விளங்குகிறது.
இஞ்சி தேநீர்:
இஞ்சி சிறந்த மூலிகையாகும். இதனை நன்றாக இடித்து தண்ணீர் ஊற்றி தேநீர் தயாரிக்கலாம். தலைவலி, இருமல் போக்கும் எளிதான மூலிகைத் தேநீர் இது. அநேக வீடுகளில் இது தயாரிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















