Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0
மாரடைப்பு(Maaradaippu) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாரடைப்பு(Maaradaippu) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.6.14

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! - THALAI SUTTRALUKU KARUVEPPILAI THAILAM


பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....

கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி

                கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

           ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.


நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

21.6.14

இதயவலி -IDHAYA VAZHI



இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !
சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க இயற்கை உணவு உலகத்தில் இணைவோம்.
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம்.
மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார்.
இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து..

தேவையானபொருள்:
வெண்தாமரை இலை – 4 பங்கு
 ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு

 செய்முறை:
வெண் தாமரை இலையை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து தாமரை இலையுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும்..

இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது....

உலகசுகார அமைப்பு வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் இந்தியர்களுக்குத்தான் அதிகமாக இதயபாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர், அடுத்த ஆண்டு உலகசுகாதார அமைப்பு வெளியீடும் அறிக்கையில் இதயநோய் மிகக்குறைவாக உள்ளநாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்தால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றியாக நாம் எண்ணுவோம்.

இந்த மருந்தை பதிவில் தெரியப்படுத்துவதற்கு காரணம் அவசரமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கும் சமயத்தில் நமக்கு இமெயில் அனுப்பி பதில் அவருக்கு கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்ற காரணத்தினால் இங்கு தெரியப்படுத்துகிறோம்.

நாம் கேட்டதற்கு இணங்க இம்மருந்து செய்வதற்காக இயற்கை உணவு உலக நண்பர்கள் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி.
குருநாதரின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும். 


15.2.14

மாரடைப்பைத் தடுக்கும் திராட்ச்சை-(MARADAIPAI THADUKKUM THIRATTCHAI)

இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்...

பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கும் இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, 'பிளாவனாய்டு' என்ற வேதிப்பொருள் உதவுகிறது...

ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிறஇதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான்ஃபோல்ட்ஸ் தெரிவிக்கிறார்.



ENGLISH

Preventing Heart Attack grapes


Has recently joined the warm heart of a series of products . Grape juice . For grape juice janhpolts by American cardiologist expert , has the ability to prevent blood thinning action deduced .



The heart pumps blood to the heart attack, death can occur due to uraitale . Be freezing blood , ' pilavanaytu ' helps the chemical .



Pilavanaytu preventing blood from reaching the heart attack could be one of the plates . So pilavanaytu mixed with aspirin , a drug used for heart disease . Pilavanaytukal grapes are abundant in this life and in the prevention of heart disease and diseases of grapes great pankarrumena piraitaya janhpolts says .



HINDHI


हार्ट अटैक अंगूर की रोकथाम



हाल ही में उत्पादों की एक श्रृंखला के गर्म दिल शामिल हो गया है . अंगूर का रस . अमेरिकी हृदय रोग विशेषज्ञ विशेषज्ञ द्वारा अंगूर का रस janhpolts के लिए, रक्त thinning कार्रवाई deduced को रोकने की क्षमता है.



दिल दिल का दौरा करने के लिए रक्त पंप , मौत uraitale के कारण हो सकता है. रक्त कड़ाके की सर्दी , ' pilavanaytu ' रासायनिक में मदद करता है .



दिल का दौरा तक पहुंचने से रोकने खून Pilavanaytu प्लेटों में से एक हो सकता है. तो pilavanaytu एस्पिरिन , हृदय रोग के लिए इस्तेमाल दवा के साथ मिलाया . Pilavanaytukal अंगूर इस जीवन में और हृदय रोग की रोकथाम में प्रचुर मात्रा में हैं और अंगूर महान pankarrumena piraitaya janhpolts के रोगों का कहना है .

11.1.14

உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி.-(UYAIR RATHTHA ALUTHATHIRKKU SIRANTHA MARUNTHU DHARPOOSANI)


  மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


   தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

           மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

     இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

     வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

31.12.13

மாரடைப்பு ஏற்பட காரணங்கள்-(MAARADAIPPU YERPADA KARANANGAL)


     இன்றைய காலத்தில் பெரும்பாலும் வரும் இதய நோயான மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய காரணங்களில் ஒன்று தான் உண்ணும் உணவுகள். ஏனெனில் உண்ணும் உணவுகளில் ஒரு சில உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 
    
   மேலும் எந்த உணவுகளால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதிலும் ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருப்பவர்கள், அத்தகைய இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால், இப்போது கூறும் உணவுகளை அதிகம் உண்ணாமலும், உடலில் கலோரிகள் 2000 மேல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சேர்த்து வர வேண்டும். இப்போது எந்த உணவுகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்று பார்ப்போமா!!!


       சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்: அடிக்கடி பசி எடுக்கும் போது வெளியே எங்கேனும் சென்றால், சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் என்று தான் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள், உடலில் சேர்ந்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். இதனால் தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து அடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதய நோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே அப்போது சூப் வகைகளில் ஏதேனும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆல்கஹால்: 


     ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால், மாரடைப்பை தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால், அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும். ஏனெனில் பொதுவாக மாரடைப்பிற்கு ஆல்கஹாலும் ஒரு பெரும் காரணம். அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தான், அதிக அளவில் ஆல்கஹால் அருந்துபவருக்கு விரைவில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை மாரடைப்பிற்கும் வழிவகுக்கிறது.

சைனீஸ் உணவுகள்: 


    சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கின்றனர். அதனால் தான் சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். அதிலும் அந்த உணவுகளில் அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் என்னும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும் சேர்க்கின்றனர். 
   மேலும் உடலில் 1500 மில்லி கிராம் சோடியம் இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது. அத்தகைய அளவு சோயா சாஸில் இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிக சுவையுடன் இருப்பதற்கு அந்த சோயா சாஸ் தான் காரணம். ஏனெனில் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதய நோயும் ஏற்படுகிறது.

அதிகமான கிளிசரின் உணவுகள்:


      கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் வெள்ளை பிரட்களில் அளவுக்கு அதிகமான அளவில் கிளிசரின் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனை அதிகமான அளவில் சாப்பிடுவதால், இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இதனை இதய நோய் இருப்பவர்கள், முற்றிலும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்த அளவில் உட்கொண்டால் போதுமானது.

சர்க்கரை: 


     சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை உண்பதும் இதயத்திற்கு சரியானதல்ல. ஏனெனில் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள பொருட்களும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.

ஆகவே மேற்கூறிய உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமானமாக இருக்கும்.