மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
பிடித்திருக்கிறது எனக்கு. பயனுள்ள தகவல்
பதிலளிநீக்கு