உங்களுக்கு வயிற்றுவலி வந்தவுடன் உணவு சாப்பிட்டால் உடனே நிற்கிறதா.அப்படியென்றால் உங்களுக்கு கண்டிப்பாக வயிற்றில் புண் இருப்பதற்கான அறிகுறியை இது வெளிப்படுத்துகிறது.
சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் போது புண் சிறுகுடலின் முதல் பகுதியிலோ அல்லது நடுப்பகுதியிலோ இருந்தால் உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலில் நுழையும் போது,
இப்புண்ணில் படும்போது, சாப்பிட்ட உடன் நின்ற வலி மறுபடியும் வந்து விடும். பொதுவாக இந்த பிரச்சனை 14 வயதுக்குட்பட்டவருக்கு ஏற்படுவதில்லை.
உணவில் கட்டுப்பாடின்றி கண்டபடி தின்று கொண்டிருக்கும் வாலிப வயதினருகே அதிகமாய் இந்த உபாதை ஏற்படுகிறது.வயிற்றில் வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்பு தேவைப்படுகிறது..
எண்ணெய்யும், நெய்யும் நேரடியாகச் சாப்பிட முடியாது.அதற்கு பதிலாக பால், தயிர், எள்ளு, தேங்காய் முதலியவற்றைச் சேர்ப்பதால் நெய்ப்பு கிட்டுகிறது. நெய்ப்பின்றிச் செல்லும் உணவு ஜீரணத்திற்குக் கெடுதலே.
நீங்கள் உண்ட உணவின் இறுக்கம் கரைந்து கூழ் போன்ற நிலை அடையும் போதுதான் ஜீரணத் திரவங்கள் ஒரே சீராகப் பரவி அவற்றை பக்குவப்படுத்தமுடியும்.
இதற்குப் போதுமான திரவமும், திரவத்தால் கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாவிடில் உணவு ஜீரணமாகாமல் கனத்துக் கல்போலாகி வயிற்றில் வலியை ஏற்படுத்தும்.
எனவே உணவை தளர்த்த திரவமாக எடுத்து கொள்ளவது நல்லது.
வயிற்றில் புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்பது ஒரு தவறான கருத்து. இடைவெளியிருக்கும் வகையில் இரைப்பையை நிரப்புதல் அவசியம். இடைவெளி இல்லாதிருந்தால் நெகிழ்ந்த உணவு கீழ் இறங்காது. காற்று எளிதில் இடம் விட்டு இடம் மாற வாய்ப்பிருந்தால் உணவும் இடம் மாறும், எளிதில் செரிக்கும் உணவும் இடம் மாறும். எளிதில் செரிக்கும் உணவும் இடம்மாற இடமில்லாதிருந்தால் தேங்கிப் புளித்து வயிற்றில் புண் ஏற்படுத்திவிடும். அதனால் உணவுக்கேற்றபடி ஜீரணமாக நேரம் ஒதுக்கப்பட்ட வேண்டும். 1 மணி நேரம் வரை ஜீரணமாகும் பொருள்கள் உண்டு. அதற்கான அவகாசம் தராமல் மேன்மேலும் உணவு கொள்ள நோய் வருகிறது. ஜீரணத் திரவம் எத்தனை சிறந்ததாக இருந்தாலும் நேர ஒதுக்கீடு அவசியமாகிறது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்று வலி தீர,
கீழ்க்காணும் வகையில் உணவைச் சாப்பிட முயற்சி செய்யவும்.
காலை: நெல்பொறி, பாசிப்பயறு, சம்பா கோதுமைக் குருணை வகைக்கு நூறு கிராம், சுமார் இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டுக்
கஞ்சி காய்ச்சி, வடிகட்டி, ஆயுர்வேத மூலிகை மருந்தான விதார்யாதி கிருதம் எனும் நெய்யை 2 ஸ்பூன் கலந்து இளஞ்சூடாகப் பருகவும்.
பகல் : புழுங்கலரிசி சாதம், பூசணிக்காய்ச் சாம்பார்,பரங்கிப் பிஞ்சு மோர்க்குழம்பு, மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ வடகறி நன்கு கடைந்த புளிக்காத மோர்.
இரவு: கோதுமை மாவில் தயாரித்த சுட்ட சப்பாத்தி, பச்சைக் காய்கறிகள் வேக வைத்த சாறு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக