Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

9.1.14

முதுகு வலி (BACK PAIN)-(MUTHUGUVAZHI)


முதுகை தாயில்லாக் குழந்தை என்று குறிப்பிடுவார்கள் காரணம், முதுகுப் பகுதியில் நம் கையால் எளிதில் சோப்போட்டு தேய்ப்பதும், எண்ணெய்யைத் தடவுவதும் முடியாது என்பதால்தான்.
முதுகுவலி உள்ளவர்கள் செய்யவேண்டியவை :

1. முதுகுவலி உள்ளவர்கள் எப்போதும் நேர் சீராக உட்கார்வதும், நிற்பதும், படுத்துக் கொள்ளவும் வேண்டும். 

2. நாற்காலியில் இருக்கையை முழுவதுமாக ஆக்கிரமிது நிமிர்ந்து உட்காரவேண்டும்.
உணவைச் சூடாகவும், நல்ல பசி ஏற்பட்ட பிறகும் சாப்பிடுவது நல்லது. 

3. இனிப்பு, புளிப்பு உப்புச்சுவை, வலி நீங்க உதவும் சுவைகளாகும். 

முதுகுவலி உள்ளவர்கள் செய்யக்கூடாதவை :

1. ஈஸி சேரில் சாய்ந்துகொண்டு தும்முவதும், அதிலிருந்து பக்கவாட்டில் குனிந்து பொருள்களை எடுப்பதும் கூடாது.

2. ஒரு வேலையை ஒரே நிலையில் இருந்துகொண்டு முதுகுத் தசைகளுக்குக் களைப்பு ஏற்படுமளவுக்கு நேடுநேரம் செய்யக்கூடாது.

3. காலணிகளில் குதிகால் அதிகம் உயர்ந்திருக்கக் கூடியவற்றையும், அதிகம் தேய்ந்தவற்றையும் அணியக்கூடாது. 

4.கனமான சாமான்களை இசைவு கேடாய் தூக்கக்கூடாது. 

5. சில்லிட்டிருக்கும் தரையில் முதுகுப்பகுதி படும்படி படுப்பதும், குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

6. குடலில்&வாயு அதிகரிக்கும் உணவுப் பண்டங்களாகிய காராமணி, மொச்சைக்கொட்டை, சூடு ஆறிய வறுத்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானம், பாக்கு, உப்புக்கடலை, சூடு ஆறியப்போயுள்ள பருப்பு சாம்பார் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 இவை குடலில் ஏற்படும் வாயு அழுத்தம்-மலச்சிக்கல், வயிறு உப்புசம், தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக